மசாபா குப்தா

மசாபா குப்தா (Masaba Gupta பிறப்பு 2 நவம்பர் 1989) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர், ஹவுஸ் ஆஃப் மசாபா என்ற தனது சொந்த சிட்டையுடன் இவர் பணியாற்றுகிறார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

குப்தா 1989 இல் பிறந்தார் [2] மற்றும் இந்திய நடிகை நீனா குப்தா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் மகளாக மும்பையில் வளர்ந்தார்.[3] இவருடைய பெற்றோர் திருமணம் செய்துகொள்ளவில்லை, இவர் தனது தாயால் வளர்க்கப்பட்டார், இவரது குடும்பம் முதலில் புது தில்லியில் இருந்தது பின்னர் மும்பைக்குச் சென்றனர். இவருக்கு 20 வயதாகும்போது இவர் தனது தந்தையுடன் மீண்டும் இணைந்தார், இப்போது இருவரும் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.[4]

8 வயதில் இவர் ஒரு டென்னிசு வீராங்கனையாக மாற விரும்பினார்,[5] 16] ஆனால் 16 வயதில் பயிற்சியை நிறுத்தினார்.[3] நடனம் மற்றும் இசை மீது ஆர்வம் கொண்ட குப்தா, சியாமக் தாவரின் நடனக் குழுவில் சேர விரும்பினார், ஆனால் இவரது தாயார் அதை ஊக்கப்படுத்தவில்லை.[6] இவர் பின்னர் லண்டனில் இசை மற்றும் நடனம் [7] படிப்பை மேற்கொண்டார், ஆனால் இவள் தனிமையாகவும், மனச்சோர்வாக இருந்ததினை உணர்ந்தபோது வெளியேறினார்.[7][8]

குப்தா பின்னர் எஸ்என்டிடி மகளிர் பல்கலைக்கழகத்தின் பிரேம்லீலா விட்டல்தாஸ் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார்.[சான்று தேவை]

குப்தா தனது பள்ளிப் படிப்பு சில சமயங்களில் மற்ற மாணவர்களிடமிருந்து இனவெறியால் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.[5]

தொழில் வாழ்க்கை தொகு

19 வயதில், குப்தா வெண்டெல் ரோட்ரிக்ஸின் ஆதரவுடன் மும்பையில் லக்மே ஃபேஷன் வீக்கிற்கு விண்ணப்பித்தார். இவர் தனது முதல் தொகுப்பிற்கு கட்டரன் என்று பெயரிட்டார்.  [9] இவரது லாக்மே அலங்கார வார 2014 தொகுப்பிற்கு "வாண்டரெஸ்" எனப் பெயரிட்டார், ஒரு புதினமான தி வாண்டரெஸில் "நாவலாசிரியர் ரோமன் பெய்னின் ஜிப்சி பெண் கதாபாத்திரமான சாஸ்கியாவால் ஈர்க்கப்பட்டது. [10] குப்தா ஒவ்வொரு தொகுப்பிற்கும் கொடுக்கும் படைப்பு மற்றும் கலைப் பெயர்களுக்காகப் பரவலாக அறியப்படுகிறார். .

மசாப குப்தா 2016 ஆம் ஆண்டில், குப்தா மேபெலின் நியூயார்க்குடன் இணைந்து பணியாற்றினார், ஆனால் பல்வேறு தளவாட காரணங்களுக்காக இந்த திட்டம் கைவிடப்பட்டது.[11][12] இவர் தனது இசுட்டைலிசுடா சேகரிப்பே தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று கூறியுள்ளார்.[12]

2017 ஆம் ஆண்டில், லெவியின் சின்னமான டிரக்கர் மேல் ஆடையின் மறு வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தும் ஒரு கண்காட்சியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. இவள் தனது கையொப்பம் கொண்ட பசு உருவத்தை பயன்படுத்த தேர்வு செய்தார். கண்காட்சியில் ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் பிற பிரபலங்களின் மறு வடிவமைப்பும் இடம்பெற்றது.[13]

குப்தா இன்ஸ்ட்டாகிராம் வழியாக ஒரு அலங்கார பொருட்களை விற்பனை செய்து வருவதில் முன்னோடியாகத் திகழ்கிறார்.வாட்ஸ்அப் மூலம் தனது விற்பனையில் 60 சதவிகிதம் நடைபெறுவதாக இவர் கூறுகிறார்.[14][15]

2018 ஆம் ஆண்டில் இவர் இந்திய உயர் பாணியை அணிய விரும்பும் முஸ்லீம் பெண்களை இலக்காகக் கொண்டு ஹிஜாப்-புடவைவரிசையைத் தொடங்கினார்.[16]

2019 ஆம் ஆண்டில், நெற்பிளிக்சு குப்தா மற்றும் இவரது தாயார் நீனா குப்தா நடித்த மசாபா மசாபா எனும் ஒரு புதிய தொலைக்காட்சித் தொடரை அறிவித்தது,[17] பகுதி புனைக்கதையினை அடிப்படையாகக் கொண்டது இந்தத் தொடர்.[18][19]

சான்றுகள் தொகு

  1. "Masaba Gupta to be first designer hosted by Urban Panache in North America". FashionNetwork.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  2. Sharma, Shrinkhala (4 March 2020). "Neena Gupta On Daughter Masaba's Divorce: "I Was Devastated"". NDTV. https://www.ndtv.com/entertainment/neena-gupta-on-daughter-masabas-divorce-i-was-devastated-2189981. பார்த்த நாள்: 1 October 2020. 
  3. 3.0 3.1 "Tennis : Sania is an icon for Indian sport: Masaba". தி இந்து. 24 February 2005. Archived from the original on 24 February 2005. பார்க்கப்பட்ட நாள் 2013-10-08."Tennis : Sania is an icon for Indian sport: Masaba". The Hindu. 24 February 2005. Archived from the original on 24 February 2005. Retrieved 8 October 2013.
  4. "Neena Gupta: I want to tell all women that if you want to live in India and in society, you have to marry". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Neena-Gupta-I-want-to-tell-all-women-that-if-you-want-to-live-in-India-and-in-society-you-have-to-marry/articleshow/47203062.cms. 
  5. 5.0 5.1 Team, ELLE India. "Masaba Gupta cannot understand Indians' obsession with fair skin". Elle India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-07-01. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  6. "Masaba Gupta giving some relatable life quotes is all the inspiration we need". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  7. 7.0 7.1 Team, ELLE India. "Why Bollywood's favourite designer Masaba Gupta is the role model we all need". Elle India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  8. "You have to learn from your mistakes: Masaba Gupta on Neena Gupta". FirstPost. 24 December 2012. பார்க்கப்பட்ட நாள் 2 April 2014.
  9. "Take your chances like you take your vitamins: Masaba Gupta". India Today. பார்க்கப்பட்ட நாள் 7 October 2013.
  10. "Lakme Fashion Week | Masaba Gupta". Grazia India.
  11. "Masaba Gupta ties up with Maybelline New York for AIFW SS'17" (in en-US). The Indian Express. 2016-09-28. http://indianexpress.com/article/lifestyle/fashion/masaba-gupta-ties-up-with-maybelline-new-york-for-aifw-ss17-3054271/. 
  12. 12.0 12.1 "I would never work in Madhu's film: Masaba Gupta Mantena" (in en-US). dna. 2016-11-13. http://www.dnaindia.com/lifestyle/report-i-would-never-work-in-madhu-s-film-masaba-gupta-mantena-2272784. 
  13. "Masaba Gupta and Justin Timberlake have a major fashion project in common". Elle India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-07-01. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  14. "Neena Gupta On Masaba Mantena's Open Letter : I'm Very Happy With Her Response And Liked The Way She Wrote It" (in en). http://www.india.com/showbiz/neena-gupta-on-masaba-mantenas-open-letter-im-very-happy-with-her-response-and-liked-the-way-she-wrote-it-2531485/. 
  15. "Masaba called 'illegitimate' for backing firecracker ban, gives perfect response" (in en). https://www.deccanchronicle.com/entertainment/bollywood/121017/masaba-called-illegitimate-for-backing-firecracker-ban-gives-perfect-response.html. 
  16. "Masaba Gupta designs a 'hijab-saree'!". BombayTimes. https://www.bombaytimes.com/celebs/masaba-gupta-designs-a-hijab-saree/articleshow/63399145.cms. 
  17. "Masaba Gupta's $1 million story". The Hindu. https://www.thehindu.com/life-and-style/fashion/masaba-guptas-1-million-story/article28720932.ece. 
  18. "Masaba Masaba review: Masaba Gupta shines in one-time watch". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-29. பார்க்கப்பட்ட நாள் 2020-08-29.
  19. "Masaba Gupta kick-starts the shoot for second season of Netflix's Masaba Masaba : Bollywood News - Bollywood Hungama". https://www.bollywoodhungama.com/news/bollywood/masaba-gupta-kick-starts-shoot-second-season-netflixs-masaba-masaba/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாபா_குப்தா&oldid=3768826" இலிருந்து மீள்விக்கப்பட்டது