வெண்டல் ரோட்ரிக்சு
வெண்டெல் ரோட்ரிக்சு (Wendell Rodricks (28 மே 1960 - 12 பிப்ரவரி 2020) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் இந்திய மாநிலமான கோவாவைத் தளமாகக் கொண்ட எழுத்தாளர் ஆவார். [1] அவர் சமூக காரணங்களுக்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்காகவும் செயற்பாட்டாளருமாவார்.[2] 2014 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமையியல் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுரோட்ரிக்சு 28 மே 1960 [3] மும்பை , பரேலில் உள்ள கிரேட்டா மற்றும் ஃபெலிக்ஸ் கோவன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். [4] அவர் ராபின், செஸ்டர் மற்றும் ஜோயலின் மூத்த சகோதரர் ஆவார். [5] குடும்பத்தின் அசல் குடும்பப்பெயர் "ரோட்ரிகியூசு" ஆகும். ஆனால் அவரது தாத்தா காலத்தில் எழுத்துப்பிழையின் காரணமாக பின்னர் "ரோட்ரிக்சு" என்று மாற்றப்பட்டது. அவர் மாகிமில் வளர்ந்தார் [4] அங்கு உள்ள புனித மிக்கெல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, அவர் உணவு தாயாரித்தல் பட்டயப்படிப்பினை முடித்தார். [6] இதன் பிறகு, அவர் 1982 இல் மஸ்கட் நகரில் ராயல் ஓமான் போலீஸ் (ROP) ஆபீசர்ஸ் சங்கத்தின் உதவி இயக்குனராகச் சேர்ந்தார்.[7] பின்னர் அவர் ஆடை வடிவமைப்பு பற்றி படிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாரிஸ் சென்றார்.[8]
தொழில் வாழ்க்கை
தொகுஆடை வடிவமைப்பு
தொகுரோட்ரிக்சு, கார்டன் வரேலி, லக்மா அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தே பீர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வடிவமைப்பதன் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[9] பாரிசில் தனது முதல் உடைமைப்பட்டியலை கையில் வைத்திருந்தபோது, "உங்கள் ஆடைகள் உங்கள் நாட்டினைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்குமாரு அமைக்கவும்" என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.[10]
ரோட்ரிக்சு உல்லாச விடுதி உடைகள் மற்றும் சுற்றுச்சூழலுகு உகந்த ஆடைகளை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார். 2010 இல், அவர் குன்பி புடவையின் பாரம்பரிய கோவான் உடையில் ப்துமையான மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவர் பிரதிபா பாட்டீல், பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை அதன் புரவலர்களாக இருக்கச் சம்மதம் பெற்றார். இதனால் இதன் விலையானது 700 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை அதிகரித்து நெசவாளர்களின் நலனுக்கு உதவியது.[11] அவர் காதி இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார், மேலும் 2011 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் நடந்த உலகின் மிகப்பெரிய கரிம கண்காட்சியான பயோஃபாக்கில் காதி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். [12]
நடிப்பு
தொகுரோட்சிக்சு 2003 ஆம் ஆண்டு பூம் மற்றும் 2002 ஆம் ஆண்டில் ட்ரூ வெஸ்ட் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் சிறிய தோற்றத்தில் தோன்றினார். அவர் 2008இல் வெளியான பேஷன் திரைப்படத்திலும் நடித்தார். [13]
செயற்பாட்டாளராக
தொகுவென்டெல் ரோட்ரிக்சு மும்பையில் ஆண்டுதோறும் திரையிடப்படும் ந.ந.ஈ.தி திரைப்பட விழாவான காஷிஷ் மும்பை சர்வதேச குய திரைப்பட விழாவின் புரவலராக இருந்தார், மேலும் 2012 இல் சிறந்த சுவரொட்டி வடிவமைப்பிற்கான விருது ஒன்றினையும் உருவாக்கி தொடர்ந்து ஆதரவும் வழங்கி வருகிறார். கௌரவ நடுவராக ஒவ்வொரு ஆண்டும் செயல்பட்டு வருகிறார். [14]
எழுத்து வாழ்க்கை
தொகுரோட்ரிக்சு பயணம் மற்றும் கலை பற்றிய தகவல்களை வழங்கும் இதழ்களில் பங்களித்தார். [15]. பின்னர் 2012 இல், ரோட்ரிக்சு தனது சுயசரிதையை தி கிரீன் ரூம் என்ற தலைப்பில் வெளியிட்டார். இது ஒரு சக எழுத்தாளர் இவரிடம் விட்ட சவாலின் காரணமாக இதனை வெளியிட்டார். [16] [17]
விருதுகள்
தொகுசான்றுகள்
தொகு
- ↑ "Wendell Rodricks was an icon of Indian's LGBTQ rights movement — a pioneer who ventured where few had dared to-Living News, Firstpost". Firstpost. 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
- ↑ Saran, Sathya (15 November 2012). "He's quite an activist: Jerome Marrel on his partner, Wendell Rodricks". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 26 March 2019.
- ↑ "The top fashion designers in India". FashionFresta.com. 12 October 2014. பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.
- ↑ 4.0 4.1 Nair, Smita (24 February 2020). "Wendell's Goa: How a sleepy village fell in love with a gay 'ladies tailor'". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
- ↑ "Padma Shri Wendell Rodricks laid to rest in Colvale". The Navhind Times. 13 February 2020. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
- ↑ Sita Menon (18 July 2003). "Fashion is not important: Wendell Rodricks". Rediff.com. http://www.rediff.com/news/2003/jul/18wendell.htm.
- ↑ Basu, Soma (3 April 2019). "I had to learn driving twice". The Hindu. https://www.thehindu.com/life-and-style/motoring/top-indian-designer-wendell-rodricks-remembers-the-many-cars-he-has-had-the-luxury-to-drive/article26718112.ece.
- ↑ Khan, Sarah A. (30 March 2019). "Isn't Goa Style a Bikini? Not According to a New Museum". The New York Times. https://www.nytimes.com/2019/03/30/fashion/museum-costume-goa-india.html.
- ↑ "Wendell Rodricks gets standing ovation at LFW for Padma Shri". Business Standard India. 15 March 2014. https://www.business-standard.com/article/pti-stories/wendell-rodricks-gets-standing-ovation-at-lfw-for-padma-shri-114031500020_1.html.
- ↑ Mittal, Vidhi (30 March 2016). "'I have broken many rules': Wendell Rodricks". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/i-have-broken-many-rules-wendell-rodricks/article8414471.ece.
- ↑ Zachariah, Preeti (10 March 2017). "Reviving the Kunbi". The Hindu. https://www.thehindu.com/life-and-style/fashion/reviving-the-kunbi/article17441541.ece.
- ↑ "From huts to high streets: Khadi comes of age". NDTV. 30 Sep 2011. பார்க்கப்பட்ட நாள் 17 May 2019.
- ↑ Garg, Nikshubha (10 August 2014). "I cannot sit on a film set endlessly: Wendell Rodricks". Mid-Day. பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.
- ↑ "Wendell Rodricks picks KASHISH 2020 Poster Contest Winner". youthincmag.com/. பார்க்கப்பட்ட நாள் 10 Feb 2020.
- ↑ Sen, Jaideep (6 November 2017). "Poskem: Wendell Rodricks draws attention to grim Goan tradition". The New Indian Express Indulge. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
- ↑ Mitra, Ipshita (6 Feb 2013). "'The Green Room' was born out of a challenge: Wendell Rodricks". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
- ↑ "Excerpts from Wendell Rodricks' The Green Room". The Times of India. 12 Oct 2002. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
- ↑ "Padma Shri to Wendell Rodricks would help LGBT Community in India". Biharprabha News. பார்க்கப்பட்ட நாள் 27 January 2014.
- ↑ "Padma Awards Announced". Press Information Bureau, Ministry of Home Affairs. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ "Fashion designer, activist Wendell Rodricks passes away at Goa home". The Indian Express. 12 February 2020. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
- ↑ "Warriors in a noble cause". Mid-Day. 28 May 2014. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.