ஜானேசுவர் மிசுரா பூங்கா

ஜானேசுவர் மிசுரா பூங்கா (Janeshwar Mishra Park) என்பது இந்தியாவின் இலக்னோவில் உள்ள கோமதி நகரில் செயல்படும் நகர்ப்புற பூங்கா ஆகும். இப்பூங்காவிற்கு, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மறைந்த அரசியல்வாதி ஜானேசுவர் மிசுராவின் நினைவாக இது பெயரிடப்பட்டது.

ஜானேசுவர் மிசுரா பூங்கா
Janeshwar Mishra Park
செயற்கை ஏரி
Map
வகைபொது பூங்கா
அமைவிடம்கோம்தி நகர், இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு26°50′06″N 80°59′19″E / 26.834899°N 80.988686°E / 26.834899; 80.988686
பரப்பளவு376 acres (1.52 km2)
உருவாக்கம்2014 (2014)[1]
இயக்குபவர்இலக்னோ மேம்பாட்டு முகமை
நிலைசெயல்பாட்டில்
பூங்காவில் பண்டித ஜனேசுவர் மிசுராவின் சிலை.

வரலாறு

தொகு

உத்தரப் பிரதேசஅன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவ் (2012-2017 அமர்வு) 6 ஆகத்து 2012 அன்று பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.[2] சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் கனவுத் திட்டமாக இந்த பூங்கா இருந்தது. யாதவ் தனது மகனும் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவிடம் ஜானேசுவர் மிசுராவின் பெயரில் ஒரு பூங்காவை அர்ப்பணிக்கச் சொன்னார். இது 168 கோடி ($276,026.668) செலவில் உருவாக்கப்பட்டது.[3] இந்த பூங்கா லண்டனில் உள்ள ஹைட் பூங்கா மாதிரியாக வடிவமைக்கப்பட்டது.

அம்சங்கள்

தொகு

கட்டிடக்கலை மற்றும் மேம்பாட்டிற்கான வரைபடத்தை புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலைப் பள்ளி உருவாக்கியுள்ளது. பூங்காவில் நீண்ட வளைந்த நடைபாதை உள்ளது. மிதிவண்டி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் இயங்கும் பிரத்தியேக மிதிவண்டி வழித்தடம் உள்ளது. மேலும், தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடிய மென்னோட்ட தடமும் உள்ளது.

பூங்கா பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது: [4]

  • பூங்கா முழுவதும் பசுமையான பகுதி
  • ஏரிகள்
  • விளையாட்டு மையம் மற்றும் விளையாட்டு மைதானம்
  • உடற்பயிற்சி கூடம்
  • மிதிவண்டி பாதை
  • மெதுவோட்ட பாதை
  • கேளிக்கைப் பூங்கா
  • புல்வெளிகள்
  • கொண்டோலா
  • மழை நீர் சேகரிப்பு மூலம் செயல்படும் நீர்நிலைகள்
  • பூங்கா மின் பயன்பாட்டிற்கான சூரிய சக்தி அமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "Brace for London-like outing in Lucknow". timesofindia.indiatimes.com/. 4 August 2014. பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
  2. "Janeshwar Mishra Park to come up over 330 acres | Lucknow News - Times of India". The Times of India. 6 August 2012. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Janeshwar-Mishra-Park-to-come-up-over-330-acres/articleshow/15368713.cms. 
  3. "Brace for London-like outing in Lucknow | Lucknow News - Times of India". The Times of India. 4 August 2014. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Brace-for-London-like-outing-in-Lucknow/articleshow/39580364.cms. 
  4. "Brace for London-like outing in Lucknow | Lucknow News - Times of India". The Times of India. 4 August 2014. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Brace-for-London-like-outing-in-Lucknow/articleshow/39580364.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானேசுவர்_மிசுரா_பூங்கா&oldid=3755873" இலிருந்து மீள்விக்கப்பட்டது