ஜான்சி இராச்சியம்
ஜான்சி இராச்சியம் (Jhansi), மராத்தியக் கூட்டமைப்பில் 1728 முதல் 1804 முடிய விளங்கியது. இந்த இராச்சியத்தை இறுதியாக ஆட்சி செய்த கங்காதர் ராவ் (1838 - 21 நவம்பர் 1853) குழந்தையின்றி இறந்த பிறகு அவரது மனைவி இராணி இலட்சுமிபாய் இராச்சியத்தை நிர்வகித்து வந்தார். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிரான 1857 சிப்பாய் கிளர்ச்சியில் கலந்து கொண்ட இராணி இலட்சுமி பாய் போர்க்களத்தில் இறந்தார். இலட்சுமி பாய் இறப்பிறகுப் பின், ஜான்சி இராச்சியம் 1857ல் இந்தியாவில் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1858ல் பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1]
ஜான்சி இராச்சியம் (1728–1804) ஜான்சி இராச்சியம் (1804–1858) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1728–1858 | |||||||||||
கொடி | |||||||||||
நிலை | மராட்டியப் பேரரசின் பகுதியாக (1728–1804) இந்தியாவில் கம்பெனி ஆட்சி மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக (1804–1858) | ||||||||||
தலைநகரம் | ஜான்சி 25°26′55″N 78°34′11″E / 25.44862°N 78.56962°E | ||||||||||
வரலாறு | |||||||||||
• நிறுவிய ஆண்டு | 1728 | ||||||||||
• பிரித்தானியப் பேரரசின் பாதுகாப்பில் | 1804 | ||||||||||
1858 | |||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா ∟ உத்தரப் பிரதேசம் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Edwardes Red Year: one of two quotations to begin pt. 5, ch. 1 (p. 111)