ஜான் ஆன்வெல்ட்

ஜான் ஆன்வெல்ட் (Jaan Anvelt, ஏப்ரல் 18, 1884டிசம்பர் 11, 1937) என்பவர் எஸ்தோனியாவின் ஒரு புரட்சித் தலைவர் ஆவார். இவர் எஸ்தோனியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், சோவியத் எஸ்தோனியாவின் முதலாவது பிரதமராகவும் இருந்தவர். 1937 ஆம் ஆண்டில் ஸ்டாலின் ஆட்சியின் போது இவர் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.[1][2][3]

ஜான் ஆன்வெல்ட்
பிறப்பு18 ஏப்பிரல் 1884
விலஜாண்டி கவுண்டி
இறப்பு11 திசம்பர் 1937 (அகவை 53)
மாஸ்கோ
படித்த இடங்கள்
  • Faculty of Law, Saint Petersburg State University
பணிஅரசியல்வாதி
விருதுகள்Order of Lenin

அக்டோபர் புரட்சி

தொகு

1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாளில் (பழைய ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 23), போல்ஷெவிக் தலைவராக இருந்த ஜான் ஆன்வெல்ட் தனது இடதுசாரி புரட்சிவாதிகளுக்குத் தலைமை வகித்து எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரை அடைந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Eesti biograafiline andmebaas ISIK: ANVELT, JAAN". Archived from the original on 2022-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-03-19.
  2. "Il sito della rivoluzione d'Ottobre: Jaan Anwelt". Archived from the original on 2016-10-17. பார்க்கப்பட்ட நாள் 2009-03-19.
  3. "Estonica.org – Anvelt, Jaan". www.estonica.org. Archived from the original on 2020-01-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆன்வெல்ட்&oldid=4103639" இலிருந்து மீள்விக்கப்பட்டது