ஜான் மாரிசன்
ஜான் ராண்டால் ஹென்னிகன் [1] (John Randall Hennigan பிறப்பு: அக்டோபர் 3, 1979) [2] ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர் ஆவார் . ஜான் மோரிசன் என்ற மேடைப் பெயரில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் மல்யுத்தப் போட்டிகளில் ஈடுபட்டதற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.
ஹென்னிகன் டஃப் என்ஃப் III இன் வெற்றியாளராக இருந்தார், இது ஒரு தொலைக்காட்சி போட்டியாகும், இந்தப் போட்டியின் வெற்றியாளருக்கு உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் பங்குபெறும் ஒப்பந்தம் பரிசாகக் கிடைக்கும், மேலும் இவரது மல்யுத்த பயிற்சியைத் தொடர இந்த நிறுவனத்தின் கிளையான ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் ஹென்னிகன் ஸ்மாக்டவுனில் மல்யுத்தம் செய்தவதற்காக அழைக்கப்பட்டார். ஏப்ரல் 2005 இல் ஜானி நைட்ரோ என்ற மேடைப் பெயரில் தனது முதல் போட்டியில், ஹென்னிகன் ( எம்.என்.எம் இன் ஒரு பகுதியாக) உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் இணை வாகையாளர் பட்டத்தினை வென்றார் . ஹென்னிகன் ஒரு முறை ஈ.சி.டபிள்யூ உலக வாகையாளர் பட்டத்தினையும், மூன்று முறை கண்டங்களுக்கு இடையிலான வாகையாளர் பட்டத்தினையும் வென்றார், மேலும் இவர் ஐந்து முறை உலக இணை வாகையாளர் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்திற்கு வெளியே, ஹெனிகன் ஜானி இம்பாக்ட் என்ற மேடைப் பெயரில் இம்பாக்ட் மல்யுத்தத்தில் பணிபுரிந்ததற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். நவம்பர் 2011 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தினை விட்டு வெளியேறிய பிறகு, ஹென்னிகன் வெளிநாடுகளில் மல்யுத்தப்போட்டிகளில் கலந்து கொண்டார். ஹென்னிகன் துவக்கத்தில் நடைபெற்ற ஏணி போட்டி மற்றும் எஃகு கூண்டு போட்டியையும் வென்றார். லூச்சா அண்டர்கிரவுண்டு, கிஃப்ட் ஆஃப் காட் மற்றும் ட்ரையோஸ் வாகையாளர் பட்டம் போன்றவற்றினை தலா ஒரு முறை வென்றார்.மேலும் இரண்டாவது டிரிபிள் கிரவுன் வாகையாளர் பட்டம் பெற்றார்.
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
தொகுஉலக மல்யுத்த கூட்டமைப்பு / பொழுதுபோக்கு / உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்
தொகுதொழில்முறை மல்யுத்தத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, ஹென்னிகன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றார் , டேவிஸ் திரைப்படம் மற்றும் புவியியல் ஆகிய இரண்டையும் பயின்றார்.[3] ஆனால் இந்த இரு பிரிவுகளிலும் தொடர விரும்பவில்லை என்று தீர்மானித்தவுடன், ஹென்னிகன் தனது தொழில்முறை மல்யுத்த வாழ்க்கைப் பயிற்சியை கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோவில் உள்ள உச்ச புரோ மல்யுத்த பள்ளியில் தொடங்கினார்.[4] டஃப் என்ஃப் 2,[5] க்கான தனது ஆட் தேர்வில் தோல்வியுற்றார். அவர் 2002 ஆம் ஆண்டில் டஃப் என்ஃப் III இல் மாட் கபோடெல்லியுடன் இணை வெற்றியாளரானார்.[6] இந்தப் போட்டியில் வென்றதற்காக, ஹென்னிகனுக்கு ஒரு மேம்பாட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது மற்றும் அவரது பயிற்சியைத் தொடர அவர்களின் ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தத்திற்கு பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.[7]
தி மிஸ் உடனான இணை
தொகுபோட்டியாளர்களாக இருந்தபோதிலும் , மோரிசன் மற்றும் தி மிஸ் நவம்பர் 16 ஆம் தேதி ஸ்மாக்டவுனின் எபிசோடில் மாட் ஹார்டி மற்றும் மான்டெல் வொண்டேவியஸ் போர்ட்டர் ஆகியோரின் இணை அணியை எதிர்கொண்டனர். சர்வைவர் தொடரில், மோரிசன் சி. எம்.பங்க் மற்றும் தி மிஸ் ஆகியோர் பங்குபெற்ற டிரிபிள் திரெட் போட்டியில் இவர்கள் இருவரும் சி.எம் பங்கினால் தோற்கடிக்கப்பட்டனர்.[8] தோல்விக்குப் பிறகு, மிஸ் மற்றும் மோரிசனின் இடையே இருந்த பகை உணர்வானது மறையத் துவங்கியது.
சான்றுகள்
தொகு- ↑ "Wrestling fans are K-Fed up Federline has that going for him". The Free Lance–Star இம் மூலத்தில் இருந்து November 5, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141105084726/http://fredericksburg.com/News/FLS/2006/122006/12182006/243993/. பார்த்த நாள்: August 19, 2007.
- ↑ "John Morrison". Slam! Sports. Canoe.com. பார்க்கப்பட்ட நாள் July 6, 2007.
- ↑ Graham, Adam (March 13, 2007). "Explosive Nitro loves the limelight". The Detroit News. Archived from the original on February 25, 2012. பார்க்கப்பட்ட நாள் July 6, 2007.
- ↑ "Johnny Nitro captures ECW World Title!". Supreme Pro Wrestling. Archived from the original on February 5, 2008. பார்க்கப்பட்ட நாள் June 30, 2007.
- ↑ .
- ↑ "MTV On Air – Tough Enough". MTV. பார்க்கப்பட்ட நாள் April 8, 2007.
In the end, Matt and John were chosen to be the winners of Tough Enough 3.
- ↑ "OVW results – April 23, 2003". Online World of Wrestling. பார்க்கப்பட்ட நாள் April 8, 2007.
Matt and John from Tough Enough III were shown sitting ringside.. They said that they have been continuing their training here in OVW.. [sic]
- ↑ Plummer, Dale; Tylwalk, Nick (November 19, 2007). "Survivor Series ends with an Edge". Slam! Sports. Canoe.com. Archived from the original on ஏப்ரல் 18, 2015. பார்க்கப்பட்ட நாள் November 18, 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)