ஜான் மைக்கேல் டி'குன்ஹா

ஜான் மைக்கேல் டி'குன்ஹா , பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாவார். செப்டம்பர் 27, 2014 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மீது 18-ஆண்டு காலமாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.[1]

வரலாறு

தொகு

மங்களூருக்கு அருகில் கைகம்பா என்னும் சிற்றூரில் பிறந்தார். மங்களூரில் எஸ் டி எம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு கருநாடக மாநிலம், மங்களூரில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தம் தொழிலைத் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டில் நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று பெல்காம் நீதிபதியாக அமர்த்தப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் குன்கா ஹூப்ளி மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஹூப்ளி இத்கா மைதான கொடியேற்று வழக்குத் தொடர்பாக, மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருந்த உமா பாரதிக்கு, குன்கா பிடிவாரண்டு வழங்கினார். அதன் விளைவாக உமா பாரதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். 2009 இல் கார்வா மாவட்ட நீதிபதியாக அமர்த்தப்பட்டார். பின்னர் பெங்களூரு குடும்ப நலக் கோர்ட்டு நீதிபதி ஆனார். அதைத் தொடர்ந்து பெங்களூரு புற நகர் மாவட்ட நீதிபதியாகப் பணி செய்தார். பின்னர் ஊழல் தடுப்புத் துறைப் பதிவாளராக அமர்த்தப்பட்டார்.

செயலலிதா வழக்கு

தொகு

2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் செயலலிதா மீது உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்டார். 2014 அக்டோபர் 27 இல் சொத்துக் குவிப்பு வழக்கில் செயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். இவ்வழக்கின் மேல் முறையீட்டில் மே 11, 2015 ஆம் நாளில் வழங்கப்பட்ட தீர்ப்பில் செயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.[2]

  • கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இவ்வழக்கு தொடர்பாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழங்கிய தீர்ப்பு அப்படியே ஏற்கப்படுகிறது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் சசிகலா உட்பட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "J Jayalalithaa's DA case: John Michael Cunha, the judge who made history". Economic Times. 28 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
  2. "Jayalalithaa's DA case: Trial court order not sustainable in law, says HC". பார்க்கப்பட்ட நாள் மே 14, 2015.
  3. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மைக்கேல்_டி%27குன்ஹா&oldid=3994826" இலிருந்து மீள்விக்கப்பட்டது