ஜான் ரஸ்கின்
ஜான் ரஸ்கின் (John Ruskin) (8 பிப்ரவரி 1819 – 20 சனவரி 1900) விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார் மற்றும் கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[1]
ஜான் ரஸ்கின் | |
---|---|
1863ல் ஜான் ரஸ்கின் | |
பிறப்பு | 54 ஹண்டர் தெரு, புருன்ஸ்விக் சதுக்கம், இலண்டன், இங்கிலாந்து | 8 பெப்ரவரி 1819
இறப்பு | 20 சனவரி 1900 பிராண்ட்வுட், கோனிஸ்டன், லங்காசயர், இங்கிலாந்து | (அகவை 80)
தொழில் | எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், நிலப்பட வரைவாளர், சமூக சிந்தனையாளர், கொடையாளர் |
குடியுரிமை | பிரித்தானியர் |
கல்வி நிலையம் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
காலம் | விக்டோரியா காலம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Modern Painters 5 தொகுதிகள் (1843–60), The Seven Lamps of Architecture (1849), The Stones of Venice 3 தொகுதிகள் (1851–53), Unto This Last (1860, 1862), Fors Clavigera (1871–84), Praeterita 3 தொகுதிகள் (1885–89). |
துணைவர் | எபி கிரே (1828–1897) (சட்ட வலிவற்ற திருமணம்) |
கையொப்பம் | |
இவரது தத்துவங்கள்
தொகுஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்ட இவரது தத்துவங்கள்:
- உலகின் மிக அழகான விஷயங்கள் பெரும்பாலும் பயனற்றவையே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; உதாரணமாக, மயில்கள் மற்றும் அல்லிப்பூக்கள்.
- ஒருவன் என்ன நோக்கத்திற்காக செலவு செய்கிறான் என்பதைவிட அவன் எவ்வளவு பணத்தை சம்பாதிக்கிறான் என்பது முக்கியமல்ல.
- ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
- தரம் என்பது ஒருபோதும் எதிர்பாராமல் நிகழ்வது அல்ல; அது எப்போதும் ஒரு அறிவார்ந்த முயற்சியின் விளைவே.
- ஒரு சிறிய சிந்தனை மற்றும் ஒரு சிறிய கருணையானது செல்வத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தை விட மதிப்பு மிக்கது.
- எப்பொழுது அன்பு மற்றும் திறமை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகின்றதோ, அப்பொழுது ஒரு தலைசிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.
- நல்ல வானிலை மட்டுமே பல வகைகளில் உள்ளதே தவிர, மோசமான வானிலை என்ற ஒன்று இல்லவே இல்லை.
- அனுபவம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகிய ஒன்றுபட்ட சக்திகளின் செயல்பாடே திறமை எனப்படுகிறது.
- பொய்யான விஷயங்களின் சாராம்சம் வார்த்தைகளில் இல்லை, வஞ்சகத்தில்தான் இருக்கின்றது.
- குற்றத்தை தடுப்பதற்காக நீதிபதியின் கையிலுள்ள இறுதியான மற்றும் குறைந்த பயனுள்ள கருவியே தண்டனை என்பது.* உண்மையான சிறந்த மனிதர்களுக்கான முதல் சோதனை என்பது அவர்களின் பணிவே.
ஈர்க்கப்பட்டவர்கள்
தொகுமகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கிலிருந்து டர்பனுக்கு, தொடருந்தில் பயணிக்கும் போது, ஜான்ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம்[2] (Unto This Last) எனும் நூலை படித்து முடித்த போது, அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது. இந்நூலின் தாக்கத்தால் காந்திக்கு சமுதாயப் பணிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் காந்தி சமூகத் தொண்டு செய்வதில் அதிகம் ஈர்க்கப்பட்டார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும், ஜான் ரஸ்கின் எழுதிய இந்நூல், பின்னாளில் காந்தியடிகள் சர்வோதயம் தத்துவத்தை வலியுறுத்தினார். அமைப்பை நிறுவத் தூண்டியது. ஜான் ரஸ்கின் எழுதிய Unto This Last நூலை, காந்தியடிகள் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.