ஜான் விட்சர்ச் பென்னெட்
ஜான் விட்சர்ச் பென்னெட் (John Whitchurch Bennett)(28 ஜூலை 1790 - 10 ஜூன் 1853) [1] என்பவர் பிரித்தானிய இராணுவ அதிகாரி, அச்சுப்பொறி நிறுவனர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார்.
வாழ்க்கை
தொகுபென்னெட் 1806 முதல் 1815 வரை அரச கடற்படையின் ஒரு பிரிவில் பணியாற்றினார். இவர் 1815-ல் பிரித்தானிய இராணுவத்திற்கு மாற்றப்பட்டார். மேலும் 1816-ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இலங்கையில் இவர் 1827 வரை பணியாற்றினார்.[1] 1815-ல் இவர் 2வது இளயரையராகப் பணியாற்றினார். இவர் 1819-ல் அரை ஊதியத்தில் வைக்கப்பட்டார்.[2] இலங்கையில் குடிமை சேவை நியமனத்துடன், பல்வேறு இளநிலைப் பதவிகளில் பணியாற்றினார். பின்னர் 1826-ல் இலங்கைத் தீவின் தென் கடற்கரைப் பகுதியில் உள்ள காலி மற்றும் அம்பாந்தோட்டையில் குற்றவியல் நடுவராக நியமிக்கப்பட்டார்.[3][4][5]
1827-ல் பென்னெட் இலங்கையினை விட்டு வெளியேறியபோது, இவர் மீது நிதி முறைகேடு குற்றம் சாட்டப்பட்டு[6] 1828-ல் மீண்டும் 3வது இலங்கைப் படைப்பிரிவுக்காக அரை ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்.[7]
1829-ல் பென்னெட் லின்னேயன் சமூக உறுப்பினராகச் சேர்ந்தார். தோட்டக்கலை சங்கத்தின் உறுப்பினராகவும் சேர்ந்தார்.[8] 1830-ல் இவர் இலங்கையின் ஆளுநராக சர் எட்வர்ட் பார்ன்சின் நடத்தையை ஆராயுமாறு பாராளுமன்றத்தில் மனு செய்தார்.[9] 1837-ல், சர் அலெக்சாண்டர் ஜான்சடனிடம் ஆதரவு கோரினார்.[3] அச்சத்தினராக பணிபுரிந்தபோது 1839 ஆம் ஆண்டு திவாலானாராக அறிவிக்கப்பட்டதையடுத்து கடற்படை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.[10]
பணி
தொகுபென்னட் எழுதினார்:
- இலங்கைக் கடற்கரையில் (1830) காணப்படும் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் சுவாரஸ்யமான மீன்களிலிலிருந்து ஒரு பகுதி.[11] தாமஸ் ஹார்ட்விக்கின் உதவியுடன்.[4]
- கோகோ-நட் பனை, அதன் பயன்கள் மற்றும் சாகுபடி (1836)[12]
- சிலோன் மற்றும் அதன் திறன்கள்: இதன் இயற்கை வளங்கள், உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் வணிக வசதிகள் (1843).[13] இது ஒரு நாடகாமா நாடக செயல்திறன் விளக்கம், தென்னிந்தியாவின் நாடக வடிவிலிருந்து பெறப்பட்ட சிங்கள நாடக வடிவம்.[14][15][16]
திருமணம்
தொகுபென்னெட் 1815-ல் பிரான்செசு லுட்ரெல் மோரியார்டியை மணந்தார்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pethiyagoda, Rohan (2007). Pearls, Spices, and Green Gold: An Illustrated History of Biodiversity Exploration in Sri Lanka. WHT Publications. p. 111.
- ↑ Office, Great Britain. War (1821). A List of the Officers of the Army and of the Corps of Royal Marines. p. 620.
- ↑ 3.0 3.1 J. W. Toussaint, Literature and the Ceylon Civil Service (1931) (PDF), pp.120–1
- ↑ 4.0 4.1 Saunders, Brian Greig (2012). Discovery of Australia's Fishes: A History of Australian Ichthyology to 1930. Csiro Publishing.
- ↑ Bulletin of the Royal College of Surgeons of England. Royal College of Surgeons of England. 2005. p. 112.
- ↑ Harris, Elizabeth (2006-04-18). Theravada Buddhism and the British Encounter: Religious, Missionary and Colonial Experience in Nineteenth Century Sri Lanka. Routledge. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134196258. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ Britain, Great (1828). The London Gazette. T. Neuman. p. 50. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ "List of the Linnean Society of London". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ "House of Commons Journal Volume 85: 13 May 1830, British History Online".
- ↑ Comprising Reports of Cases in the Courts of Chancery, King's Bench, and Common Pleas, from 1822 to 1835: And Law Journal Reports Divided Into Equity and Bankruptcy Cases. Common Law Cases 1836-1858. 1839. p. 4.
- ↑ Bennett, John Whitchurch (1830). A Selection from the Most Remarkable and Interesting Fishes Found on the Coast of Ceylon: From Drawings Made in the Southern Part of that Island, from the Living Specimens. Longman. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ Bennett, John Whitchurch (1836). The Coco-nut Palm, Its Uses and Cultivation ... As Adapted for the General Benefit in Our West Indian and African Colonies... Sherwood, Gilbert, and Piper. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ Bennett, John Whitchurch (1843). Ceylon and Its Capabilities: An Account of Its Natural Resources, Indigenous Productions, and Commercial Facilities. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120611689. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ Brisbane, Katherine; Chaturvedi, Ravi; Majumdar, Ramendu; Pong, Chua Soo; Tanokura, Minoru (2005-08-16). The World Encyclopedia of Contemporary Theatre: Volume 5: Asia/Pacific. Routledge. p. 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134929788. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ Bennett, John-W. (1843). Ceylon and Its Capabilities. pp. 101–2. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ Rubin, Don; Pong, Chua Soo; Chaturvedi, Ravi; Majundar, Ramendu; Tanokura, Minoru (2001). The World Encyclopedia of Contemporary Theatre: Asia/Pacific. Taylor & Francis. p. 420. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415260879. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ The Monthly Magazine: Or, British Register ... 1815. pp. 95–6.