ஜாரி அருவி
ஜாரி அருவி (Jhari Falls) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள முல்லையனகிரி மற்றும் பாபா புதன்கிரிக்கு அருகில் உள்ள ஒரு அருவி ஆகும். மலைகளில் உருவாகும் நீர் செங்குத்தான பாறைகளின் மீது, அகலமான மற்றும் மெல்லிய வெண்ணிற அடுக்குகளாகப் பாய்கிறது. [3] [4]
ஜாரி அருவி | |
---|---|
பட்டர்மில்க் அருவி டாடாபே அருவி[1] | |
ஜாரி அருவி | |
அமைவிடம் | கருநாடகம், இந்தியா |
ஆள்கூறு | 13°23′26″N 75°43′18″E / 13.39056°N 75.72167°E[2] |
வகை | பேரருவி, கூறுகளாகப் பிரிந்த வகை |
ஏற்றம் | 560 m (1,840 அடி) |
மொத்த உயரம் | 50–70 m (160–230 அடி) |
இந்த அருவியானதுபெங்களூரில் இருந்து 267 கிமீ தொலைவிலும் மற்றும் சிக்மகளூரில் இருந்து 24 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் அமைந்துள்ள தொடர்வண்டி சந்திப்பானது கடூர் சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பு 57 கிமீ தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு அருகில் உள்ள விமான நிலையமானது மங்களூரு விமான நிலையம் ஆகும். இது 180 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடூர் அல்லது சிக்மகளூரில் இருந்து மகிழ்வுந்துகளை வாடகைக்கு எடுக்கலாம், ஆனால் அருவியை நெருங்கும் கடைசி ஐந்து கிமீ தொலைவினை ஈப்பு வழியாக மட்டுமே அணுக முடியும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Manohara, Suraj Kumar (2020-07-16). "Jhari Falls | Dabdabe Falls Trek". Adventure Buddha (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ "Mullayangiri & Jhari Waterfalls Trek". Add Ventures Unlimited (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ "Jhari Falls | Jhari Waterfalls Chikmagalur – Karnataka Tourism" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ "Jhari Falls Chikmagalur (Timings, Entry Fee, Images, Best time to visit, Location & Information) - Chikmagalur Tourism 2022". chikmagalurtourism.org.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ஜாரி அருவி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.