ஜார்கண்டின் வரலாறு

ஜார்கண்டின் பழைய ஆட்சியாளர்களாக ஷா தியோர்கள் இருந்தனர், இவர்களின் தலைமையகமாக பலாமூ, குந்தா, கோதி ஆகியவை இருந்தன. வரலாற்று ஆதாரங்களினபடி, ஷா தியோர்கள் இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்தனர் அவர்களுக்குப் பிறகு முண்டா அரசர்களிடம் ஆட்சி வந்தது. இவர்களின் மாளிகை இன்னும் ரட்டு என்னும் பகுதியில் உள்ளது, இது தற்போதைய தலைநகரான ராஞ்சியில் இருந்து 11 தொலைவில் உள்ளது. இவர்களது முதலாம் தலைநகரான சுதியாம்பி ராஞ்சி அருகே இருந்தது. அக்காலகட்டத்தின் எஞ்சிய சின்னங்கள் காலம் கடந்து தற்போதும் காணக் கிடைக்கின்றன. இதன் முதல் ஆட்சியாளர் மகாராஜா பானிமுகுந்த் ராய் ஆவார். அவரது சந்ததியினர் ஜார்கண்டை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பிரித்தானியரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறும்வரை ஆண்டனர். இந்த பழங்குடி நல்லாட்சி தொடர்ந்து செழித்தோங்கியது இந்த அரசர்கள் முண்டா ராஜாகள் என அழைக்கப்பட்டனர், இவர்களின் மரபினர் இந்நாள்வரை முண்டாஸ் ராஜாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.[1][2] (இந்தப் பகுதிகள் இன்னும் அரை- தன்னாட்சி பிரதேசங்களாக, அப்பகுதிகளின் சுயாட்சி பரப்பளவைப் பொறுத்து ஒவ்வொரு முண்டா ராஜாக்களும் பட்டம் பூண்டுள்ளனர்.) முகலாயர் ஆட்சிக் காலத்தில், ஜார்க்கண்ட் பகுதி குகரா என்று அறியப்பட்டது. 1765 ஆம் ஆண்டுக்குப் பின், பிரித்தானிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது அதன்பிறகு இப்பகுதி தற்போதைய பெயரான, "ஜார்க்கண்ட்" - காடுகளின் நிலம் மற்றும் "ஜாரிஷ்" (புதர்கள்) என அழைக்கப்பட்டது. இப்பகுதி சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் மற்றும் சந்தால் பர்கானா, பசுமையான காடுகள், மலைகள், பாறைகள் மிக்க பீடபூமிகள், லோத் அருவி போன்ற அழகு மிக்க பல இடங்களைக் கொண்டுள்ளது.

ஜார்க்கண்ட் பிராந்தியத்தை அடிமைப்படுத்திய பிரித்தானிய கிழக்கு இந்திய நிறுவனத்துக்கு உள்ளூர் மக்களிடமிருந்து தன்னிச்சையான எதிர்ப்பு ஏற்பட்டது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நடந்ததாக கூறப்பட்ட காலத்துக்கு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பே (1857), ஜார்கண்டின் ஆதிவாசிகள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தொடர் கலகங்களைத் தொடங்கியிருந்தனர்.

அரச குடும்பங்கள்

ஜார்கண்டின் வாழ்ந்த மன்னர்கள், படைத்தளபதிகள் போன்றோர் வாழ்ந்த பல அரண்மனைகள் உள்ளன. இவர்கள் ராஞ்சி, ரட்டு (ரட்டு மகாராஜா அரண்மனை), சந்த்வா (டோரி பாளையம்) , லட்டிஹரா, போச்சரா, சிட்டாக், மஹுவல்-மிலன் என்பவர்களாவர். இவர்களில் பலர் வேறுபட்ட மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். சிலர் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் பாபுலால் மராண்டி ஆவார்.[3]

ஜார்க்கண்ட் கலகங்கள்

தொகு
  • 1772-1780 பஹரியா கிளர்ச்சி.
  • 1780-1785 தில்கா மான்ஜி தலைமையிலான பழங்குடியினரின் கிளர்ச்சியில், பிரித்தானிய ராணுவத்தின் தலைவர் காயப்படுத்தப்பட்டார். 1785 இல் தில்கா மான்ஜி பகல்பூரில் ஒரு ஆலமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.[4][5]
  • 1795-1800 தாமார் கிளர்ச்சி.
  • 1795-1800 விஷ்ணு மனகி தலைமையில் முண்டா பழங்குடியினரின் கிளர்ச்சி.
  • 1800-1802 துகான் மனகியின் வாரீசுகளின் தலைமையில் முண்டா மக்களின் கிளர்ச்சி
  • 1819-1820 புகான் சிங் தலைமையில் பலாமுவில் முண்டாக்கள் கிளர்ச்சி
  • 1832-1833 பாகீரதன், துபாய் கோசாய், படேல் சிங் ஆகியோரின் தலைமையில் கிவார் கிளர்ச்சி
  • 1833-1834 பிர்புமில், கங்கா நரேன் தலைமையில் பும்ஜி கிளர்ச்சி
  • 1855 கார்ன்வாலிசு பிரபு நிரந்தர தீர்வுவேண்டி 1855 இல் சாந்தால் மக்கள் மீது போர் முன்னெடுத்தார்.
  • 1855-1860 1850 களின் இறுதியில் சித்து பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான இணை அரசாங்கத்தை நடத்த சுமார் பத்தாயிரம் சந்தால்களை குவித்தார். அடிப்படை தேவைகளுக்காக வரிவசூல் செய்தார் தனிச் சட்டங்களையும் இயற்றானார். பிரித்தானிய அரசு சித்துவையும் அவரின் சகோதரரையும் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ 1000 பரிசு மற்றும் விருதையும் அறிவித்தனர்.
  • 1856-1857 தியாகிகள் சஹித் லால், விஸ்வநாத் ஷஹடியோ, ஷேக் பிகாரி, கணபதிராய், புத்து வீர் ஆகியோர், இந்தியாவின் முதல் இந்திய சுதந்திரப் போரின் போது பிரித்தானிய அரசு எதிரான இயக்கத்திற்கு தலைமையேற்றனர், 1857, இது சிப்பாய்க் கிளர்ச்சி என்றும் ழைக்கப்படுகிறது.
  • 1874 கெர்வார் இயக்கமானது பாகீரதி மான்ஜி தலைமையில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
  • 1895-1900 பிரித்தானிய அரசுக்கு எதிராக பிர்சா முண்டா (15 பிறப்பு நவம்பர் 1875). தலைமையிலான இயக்கம் நடந்தது. பிர்சா முண்டா பிரித்தானிய காலனிய அரசாங்கப்படைகளால் கைதுசெய்யப்பட்டு, ராஞ்சி சிறையில் 1900 சூன் 9 அன்று இறந்ததாக அறிவிக்கப்பட்டார்,[6] இவர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு இறந்ததாக பிரித்தானிய பதிவேடுகள் கூறுகின்றன.

இந்த அனைத்து எழுச்சிகளும் பிராந்தியம் முழுக்க பிரித்தானியர்களால் பெருமளவு படைகளை ஈடுபடுத்தி ஒடுக்கப்பட்டது..

1914 ஆம் ஆண்டில் தானா பகத் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியது, இதில் 26,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் கலந்துகொண்டனர், இறுதியில்மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரகம் மற்றும் கீழ்படியாமை இயக்கத்துடன் இணைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Munda Rajas". பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.
  2. "Arjun Munda unveils ancient tribal Raja’s statue in Pithoria". jharkhandstatenews இம் மூலத்தில் இருந்து 6 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160406064602/http://www.jharkhandstatenews.com/arjun-munda-unveils-ancient-tribal-rajas-statue-in-pithoria/. பார்த்த நாள்: 4 February 2017. 
  3. Giant-killer will be Jharkhand CM
  4. "Santhal Adivasi". jharkhandi.com/. Archived from the original on 18 April 2012. பார்க்கப்பட்ட நாள் 16 April 2012. It is also recorded that "Baba Tilka Majhi" was the first Santhal's leather who raise weapons against the British in 1789. It was due to great famine in 1770 and the consequences of "Court of Directors" orders influenced by British Prime Minister Pitt the Younger.
  5. "The Santals and Garo's". fdhaidar55.wordpress.com/. பார்க்கப்பட்ட நாள் 17 April 2012. It was due to great famine in 1770 and the consequences of "Court of Directors" orders influenced by British Prime Minister Pitt the Younger. Court of Director issued ten year of the settlement of Zamindari and later in 1800, it was permanent. This resulted in minimal chance to negotiate between local Zamindars and Santhal villagers.
  6. "THE 'ULGULAAN' OF 'DHARATI ABA' Birsa Munda". cipra.in. 2009. Archived from the original on 21 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012. He was lodged in Ranchi jail, for trial along with his 482 followers where he died on 9 June 1900 {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்கண்டின்_வரலாறு&oldid=3925096" இலிருந்து மீள்விக்கப்பட்டது