ஜார்ஜ் ஆன்ட்ரூஸ்
ஜார்ஜ் ஐர் ஆண்ட்ரூஸ் (George Eyre Andrews) என்பவர் ஒரு அமெரிக்க கணிதவியலாளர் ஆவார். 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்.[1] சிறப்பு சார்புகள், எண் கோட்பாடு, கணித பகுப்பாய்வு மற்றும் சேர்மானவியல் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
ஜார்ஜ் ஐர் ஆண்ட்ரூஸ் | |
---|---|
ஆண்ட்ரூஸ் 1973 | |
பிறப்பு | திசம்பர் 4, 1938 சேலம், ஓரிகான், அமெரிக்கா. |
துறை | கணித பகுப்பாய்வு மற்றும் சேர்வியல் (கணிதம்) |
பணியிடங்கள் | பென்சி்வேனியா மாநில பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வு நெறியாளர் | ஹான்ஸ் ராடிமாசர் |
அறியப்படுவது | இராமானுஜரின் காணாமல் போன ஏடு |
கல்வி மற்றும் பணி
தொகுஇவர் தற்போது இவான் பக் தலைவராக இருந்த பென்சி்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணிபுரிந்தார்.[2][3]. இவர் தனது இளங்கலைப் படிப்பை ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தில் கற்றார்.[2] இவர் 1964 ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார், அங்கு இவரது ஆலோசகராக ஹான்ஸ் ராட்மேச்சர் இருந்தார்.[1][4] 2008-2009 காலகட்டத்தில் இவர் அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[5]
பங்களிப்புகள்
தொகுஆண்ட்ரூஸின் பங்களிப்புகளில் பல ஒரு பொருள் நூல்களாகும். 250 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் q-தொடர்கள், சிறப்பு சார்புகள், சேர்வியல் மற்றும் பயன்பாடுகள் பற்றிய சிறப்பான கட்டுரைகளும் உள்ளன.[6][7] இவர் எண் பிரிவினை கோட்பாட்டில் உலகின் முன்னணி நிபுணராகக் கருதப்படுகிறார்.[1][8] [2] 1976 இல் இராமானுசரின் காணாமல் போன குறிப்பு ஏட்டினை கண்டுபிடித்தார். இவர் கணிதக் கற்பித்தலில் ஆர்வம் கொண்டவர்.[2] இவரது புத்தகமான The Theory of Partitions என்பது எண் பிரிவினை பற்றிய நிலையான குறிப்பு ஆகும்.[1] இவரது எண் பிரிவினை மற்றும் q-தொடர்களின் கோட்பாடுகளில் கணிதத்தில் திறன்மிகுந்தவர் ஆவார்.எண் கோட்பாடு மற்றும் சேர்வியல் போன்றவற்றில் இவரது பணி இயற்பியலில் பல முக்கியமான பயன்பாடுகளுக்கு வழிவகுத்தது.[9]
விருதுகளும் கௌரவங்களும்
தொகுஆண்ட்ரூஸ் 2003 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] இவர் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டில் பெர்லினில் நடந்த கணிதவியலாளர்களின் சர்வதேச காங்கிரசால் அழைக்கப்பட்ட சிறப்பு பேச்சாளராக இருந்தார்.[10] 2012 ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் உறுப்பினரானார்.[11][12] 1998 ஆம் ஆண்டில் பர்மா பல்கலைக்கழகம், 2002 ஆம் ஆண்டில் புளோரிடா பல்கலைக்கழகம், 2004 ஆம் ஆண்டில் வாட்டர்லூ பல்கலைக்கழகம், 2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் 2014 ஆம் ஆண்டில் அர்பானா-சாம்பேனில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின.[6][13][9]
வெளியீடுகள்
தொகு- Selected Works of George E Andrews (With Commentary) (World Scientific Publishing, 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84816-666-0)
- Number Theory (Dover, 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-68252-8)
- The Theory of Partitions (Cambridge University Press, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-63766-X)[14]
- Integer Partitions (with Eriksson, Kimmo) (Cambridge University Press, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-84118-6)[15]
- Ramanujan's Lost Notebook: Part I (with Bruce C. Berndt) (Springer, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-25529-X)[16]
- Ramanujan's Lost Notebook: Part II, (with Bruce C. Berndt) (Springer, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-77765-8)
- Ramanujan's Lost Notebook: Part III, (with Bruce C. Berndt) (Springer, 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4614-3809-0)
- Ramanujan's Lost Notebook: Part IV, (with Bruce C. Berndt) (Springer, 2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4614-4080-2)
- "Special functions" by George Andrews, Richard Askey, and Ranjan Roy, Encyclopedia of Mathematics and Its Applications, The University Press, Cambridge, 1999.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Berndt, Bruce C.; Rankin, Robert Alexander, eds. (1995), Ramanujan: Letters and Commentary, History of Mathematics, vol. 9, American Mathematical Society, p. 305, Bibcode:1995rlc..book.....B, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780821891254,
Andrews is generally recognized as the world's leading authority on partitions and is the author of the foremost treatise on the subject.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Inaugural Biography Article at the National Academy of Sciences.
- ↑ Evan Pugh Professors பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம், PSU, retrieved 2013-11-21.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் ஜார்ஜ் ஆன்ட்ரூஸ்
- ↑ AMS presidents, a timeline
- ↑ 6.0 6.1 O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜார்ஜ் ஆன்ட்ரூஸ்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- ↑ The work of George Andrews: a Madison perspective – by Richard Askey, in "The Andrews Festschrift (Maratea, 1998)", Sem. Lothar. Combin. vol. 42 (1999), Art. B42b, 24 pp.
- ↑ Alladi, Krishnaswami (2012), Ramanujan's Place in the World of Mathematics: Essays Providing a Comparative Study, Springer, p. 122, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132207672,
George Andrews of the Pennsylvania State University, the world authority on partitions and q-geometric series
. - ↑ 9.0 9.1 "University of Illinois commencement ceremony to take place May 17 at Memorial Stadium (honorary doctorates for George E. Andrews and Phillip Allen Sharp)". Campus News (illinois.edu). 5 May 2014.
- ↑ "Book of Members, 1780-2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 18 April 2011.
- ↑ Andrew, George E. (1998). "Mathematics education: Reform or renewal?". Doc. Math. (Bielefeld) Extra Vol. ICM Berlin, 1998, vol. III. pp. 719–721.
- ↑ List of Fellows of the American Mathematical Society, retrieved 2012-11-03.
- ↑ Honorary doctorates for Andrews, Askey and Berndt
- ↑ Askey, Richard (1979). "Review: George E. Andrew, The theory of partitions". Bull. Amer. Math. Soc. (N.S.) 1 (1): 203–210. doi:10.1090/s0273-0979-1979-14556-7. http://projecteuclid.org/euclid.bams/1183542336.
- ↑ Glass, Darren (5 April 2005). "Review of Integer Partitions by George E. Andrews and Kimmo Eriksson". MAA Reviews, Mathematical Association of America.
- ↑ David Bressoud (2006). "Review: Ramanujan's Lost Notebook, Part I, by George Andrews and Bruce C. Berndt". Bull. Amer. Math. Soc. (N.S.) 43 (4): 585–591. doi:10.1090/s0273-0979-06-01110-4. https://www.ams.org/journals/bull/2006-43-04/S0273-0979-06-01110-4/S0273-0979-06-01110-4.pdf.
- ↑ Wimp, Jet (2000). "Review: Special functions, by George Andrews, Richard Askey, and Ranjan Roy". Bull. Amer. Math. Soc. (N.S.) 37 (4): 499–510. doi:10.1090/S0273-0979-00-00879-X. https://www.ams.org/journals/bull/2000-37-04/S0273-0979-00-00879-X/S0273-0979-00-00879-X.pdf.
வெளி இணைப்புகள்
தொகு- George Andrews's homepage
- ஜார்ஜ் ஆன்ட்ரூஸ் publications indexed by Google Scholar
- Author profile in the database Zentralblatt MATH|zbMATH
- "The Meaning of Ramanujan and His Lost Notebook" by George E. Andrews, Center for Advanced Study, U. of Illinois at Urbana-Champaign, YouTube, 2014
- "Partitions, Dyson, and Ramanujan" - George Andrews, videosfromIAS, YouTube, 2016