ஜார்ஜ் பிலிப்சு பாண்டு
ஜார்ஜ் பிலிப்சு பாண்டு (George Phillips Bond) (மே 20, 1825-பிப்ரவரி 17, 1865) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வில்லியம் கிரேன்ச் பாண்டின் மகனாவார். சில தகவல் வாயில்கள் இவர் 1826 இல் பிறந்ததாக்க் கூறுகின்றன.
ஜார்ஜ் பிலிப்சு பாண்டு | |
---|---|
பிறப்பு | 1825|5|20 |
இறப்பு | 1865|2|17|1825|5|20 |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | வானியல் |
அறியப்படுவது | வானொளிப்படவியல் |
இவர் முதலில் இயற்கையிலும் பறவைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இவரது அண்ணன் வில்லியம் கிரேன்ச் பாண்டு (இளவல்) இறந்ததும் தந்தையைப் பின்பற்றி வானியலில் இட்டுபடவேண்டி நேர்ந்துள்ளது. இவர் தன் தந்தைக்குப் பின்னர் ஆர்வார்டு வான்கானகத்தின் இயக்குநரானார். இப்பதவியில் இவர் 1859 முதல் தன் இறப்பு வரை நீடித்தார். இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர் எட்வார்டு சிங்கிள்டன் ஓல்டன் இலிக் வான்காணக முதல் இயக்குநராக விளங்கினார்.
இவர் வேகா எனும் விண்மீனின் முதல் ஒளிப்படத்தை 1850 இலும் மிசார் எனும் இரட்டை விண்மீனின் ஒளிப்படத்தை 1957 இலும் பிடித்தார்; ஒளிப்படத்தினால் விண்மீன்களின் தோற்றப்பொலிவை அளக்கலாம் எனப் பரிந்துரைத்தார்; பல வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். அவற்றின் வட்டணைகளையும் கணக்கிட்டார். இவர் காரிக்கோளையும் ஓரியன் விண்மீன் வெடிப்பையும் ஆய்வு செய்தார். இவரும் இவரது தந்தையாரும் இணைந்து காரிக்கோள் நிலாவாகிய கைப்பெரானைக் கண்டுபிடித்தனர். கைப்பெரான் நிலாவை வில்லியம் இலாசலும் தனியாகக் கண்டுபிடித்துள்ளார். வானியல் பங்களிப்புகளைத் தவிர, இவர் நியூஆம்சயரின் வெண்மலைகளின் அளக்கைப்பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் என்புருக்கி நோயால் இறந்தார்.
வெளி இணைப்புகள்
தொகு- http://messier.seds.org/xtra/Bios/gpbond.html (note incorrect dates of birth and death)
- MNRAS 9 (1848) 1: Discovery of a new satellite of Saturn
- Presentation of RAS gold medal
- Brief obituary notice
- The Bonds: Pioneers of American Astronomy பரணிடப்பட்டது 2006-12-06 at the வந்தவழி இயந்திரம்