ஜார்ஜ் லேடிமர் பேட்சு

ஜார்ஜ் லேடிமர் பேட்சு (George Latimer Bates)(மார்ச் 21, 1863, அபிங்டன், இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடுகள்- ஜனவரி 31, 1940 செம்ஸ்ஃபோர்ட் ஐக்கிய இராச்சியம்), எல்எல். டி., எம்பிஓயு என்பவர் அமெரிக்க இயற்கை ஆர்வலர் ஆவார்.

பேட்சு காலேசுபர்கில் உள்ள நாக்சு கல்லூரி, மற்றும் சிகாகோ தியோலோஜிகல் செமினரில் கல்வி பயின்றார். இவர் 1895ல் மேற்கு ஆப்பிரிக்கா சென்று தென்கிழக்கே கமரூனில் வாழ்ந்தார். அங்குப் பண்ணை ஒன்றினை நிர்வகித்து வந்தார். இவர் தனது பயணங்களின் போது சேகரித்த இயற்கை வரலாற்று மாதிரிகளை இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அனுப்பினார்.

1928இல் பேட்சு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு இவர் மேற்கு ஆப்ரிக்காவின் பறவைகள் கையேடு எனும் புத்தகத்தினை எழுதினார் (1930). இவர் அரபு மொழியைக் கற்றபின் 1934இல் அரேபியாவுக்குச் சென்று அரேபியாவின் பறவையியல் நூலைப் படித்தார். இவர் நூலாக அரபியேப் பறவைகள் குறித்து வெளியிட முடியவில்லை என்றாலும் அராபிய பறவைகள் பலவற்றை ஆவணப்படுத்தினார். இவரின் வெளியிடப்படாத அரேபியாவின் பறவைகள் பற்றிய கையெழுத்துப் பிரதியானது ரிச்சர்ட் மெனெர்ட்ஜேகனால் பயன்படுத்தப்பட்டது.

புகழ்

தொகு

ஆப்பிரிக்கப் பாம்பின் ஒரு வகைக்கு, ராம்னோபிசு பேட்சி என இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[1] மூன்று வகையான ஆப்பிரிக்க நீர்நில வாழ்வன வான ஆசுடிலோசுடெர்னசு பேட்சி, பெரைரைனோபட்ராச்சசு பேட்சி, மற்றும் நெக்டோஃப்ரைன் பேட்சி உள்ளிட்ட இருபது பறவைகள் மற்றும் நான்கு பாலூட்டிகள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Bates, G. L.", p. 19).
  2. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907807-42-8.

ஆதாரங்கள்

தொகு
  • Obituary. Ibis 1940: 343–348.
  • Warr FE (1996). Manuscripts and Drawings in the ornithology and Rotschild libraries of The Natural History Museum at Tring. BOC.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_லேடிமர்_பேட்சு&oldid=3207406" இலிருந்து மீள்விக்கப்பட்டது