ஜார்ஸ் போலான்ஸ்கி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ஜார்ஸ் போலான்ஸ்கி (Georges Wolinski 28 சூன் 1934 - 7 சனவரி 2015) என்பவர் பிரஞ்சு கேலிச்சித்திர வரை கலைஞர் ஆவார். பிரஞ்சு அங்கத இதழான சார்லி எப்டோவில் பல ஆண்டுகளாகக் கருத்துப் படங்கள் வரையும் ஓவியராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 7 ஆம் நாளில் பாரிசு நகரில் சார்லி எப்டோ அலுவலகத்தில் புகுந்து வன்முறைக் கொலையாளிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்..
ஜார்ஜ் வொலின்சுகி | |
---|---|
பிறப்பு | ஜார்ஜ் டேவிட் வொலின்சுகி[1] 28 சூன் 1934 துனிசு, பிரெஞ்சு துனிசியா |
இறப்பு | 7 சனவரி 2015 பரிஸ், பிரான்சு | (அகவை 80)
குடிமகன் | பிரெஞ்சுக்காரர் |
துறை (கள்) | எழுத்தாளர், கேலிச்சித்திர வரை கலைஞர் |
கையெழுத்து | |
பிறப்பும் இளமைக்காலமும்
தொகுஜார்ஸ் போலான்ஸ்கி துனிசியாவில் பிறந்தார்.யூத மதத்தைச் சேர்ந்த துனிசியா அம்மாவுக்கும் அதே மதத்தைச் சேர்ந்த போலந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்தார். இளமைக் காலம் துனிசியாவில் கழிந்தது. 1952 ஆம் ஆண்டில் சிற்பக் கலை பயிலும் நோக்கத்தில் பாரிசுக்குச் சென்றார். ஆனால் அங்கு சென்றதும் கருத்துப் (கார்டூன்) படங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.
இதழ்ப் பணி
தொகு1958 இல் ரசுடிகா என்னும் இதழுக்கு கருத்துப் படங்கள் எழுதினார். 1960 இல் அரசியல் நிகழ்வுகளைப் பகடியும் நையாண்டியும் செய்து படங்கள் வரைந்தார். ஹராகிரி என்னும் அங்கத இதழில் அரசியல், பாலியல் தொடர்புள்ள செய்திகளை நக்கல் அடித்து எழுதினார் பிரான்சில் நடந்த மாணவாகள் போராட்ட நிகழ்வின்போது ஏராளமான கார்ட்டூன்களைப் படைத்தார். சார்லி எப்டோ என்னும் அங்கத இதழில் பதிப்பாளாராகவும் கார்ட்டூனிச்டாகவும் பல ஆண்டுகள் இருந்து தம் பணியைச் செய்தார் கம்போடியா, காபூல், கியூபா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்து தம் அனுபவங்களையும் கருத்துகளையும் கார்ட்டூன்கள் மூலம் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்கு 2008 ஆம் ஆண்டில் வந்தார்.
மேற்கோள்கள்
தொகு- http://latest.com/2015/01/georges-wolinski-1934-2015/ பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.independent.co.uk/news/people/georges-wolinski-cartoonist-who-encapsulated-charlie-hebdos-confrontational-and-courageous-brand-of-satire-9966369.html
- http://timesofindia.indiatimes.com/india/Before-this-age-you-could-joke-on-religion/articleshow/45816938.cms