சார்லி எப்டோ
சார்லி எப்டோ (Charlie Hebdo, பிரெஞ்சு உச்சரிப்பு: [ʃaʁli ɛbdo]; மாற்று ஒலிப்பு: சார்லி ஹெப்ஃடோ, பொருள்: வாராந்திர சார்லி) பிரான்சிய அங்கத வாராந்தர செய்தியிதழாகும். பல கேலிச்சித்திரங்களும் அறிக்கைகளும் சமய நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் இதில் வெளியாகின்றன. வழிபாடுகளற்ற, வழமைகளுக்கெதிரான தொனியுடன் இந்த இதழ் இடது-சாரி மற்றும் சமயங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றது.[2] பிரான்சிய அரசியலில் மிகுந்த வலதுசாரி கருத்துக்கள், கத்தோலிக்கம், இசுலாம், யூதம், பண்பாடு குறித்த விமர்சனக் கட்டுரைகளை வெளியிடுகின்றது. முன்னாள் ஆசிரியர் இசுடெபானெ சார்போன்னியெ (சார்பு) கூற்றுப்படி "இடதுசாரி பன்முகத்தின் அனைத்துக் கூறுகளையும், விடுபட்டவைகளையும் கூட" இந்த இதழின் பார்வைக்கோணம் கொண்டுள்ளது.[3]
சார்லி ஹெப்டோ வாராந்தரியின் சின்னம் | |
வகை | வாராந்திர அங்கத செய்தி இதழ் |
---|---|
வடிவம் | இதழ் |
நிறுவியது | 1970,[1] 1992 |
அரசியல் சார்பு | இடதுசாரி அரசியல் |
தலைமையகம் | பாரிஸ், பிரான்சு |
விற்பனை | 45,000 |
ISSN | 1240-0068 |
இணையத்தளம் | charliehebdo.fr |
1970இல் துவங்கிய இந்த இதழ் 1981இல் மூடப்பட்டது; 1992இல் மீண்டும் வெளிவரத்தொடங்கியது. 2009இலிருந்து சார்பு இதன் ஆசிரியராக பொறுப்பிலிருந்தார்; 2015இல் இதழின் அலுவலகங்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இவருக்கு முன்னதாக பிரான்சுவா கவன்னாவும் (1969–1981) பிலிப்பு வாலும் (1992–2009) ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.
இது ஒவ்வொரு புதன் கிழமையும் வெளியாகின்றது; சிறப்புப் பதிப்புகள் நடுநடுவே வெளியிடப்படுகின்றன.
சனவரி 7, 2015 அன்று செய்தி இதழின் பாரிசு அலுவலகத்தில் வாராந்தர ஆசிரியக்குழு சந்திப்பின்போது இசுலாமியத் தீவிரவாதிகள் என ஐயுறப்படும் நபர்கள் பல ஒருங்கிணைப்பாளர்களையும் வருகையாளர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்; இரண்டு காவல்துறையினரையும் சுட்டுக் கொன்றனர்.[4][5][6]
இந்த இதழ் மீது இரண்டு முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன: 2011இல் தீக்குண்டு, 2015இல் துப்பாக்கிப் படுகொலை.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ McNab 2006, ப. 26: "Georges Bernier, the real name of 'Professor Choron', [... was] cofounder and director of the satirical magazine Hara Kiri, whose title was changed (to circumvent a ban, it seems!) to Charlie Hebdo in 1970."
- ↑ Charb. "Non, "Charlie Hebdo" n'est pas raciste !". Le Monde. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
- ↑ «Charlie Hebdo, c'est la gauche plurielle» [archive] sur lecourrier.ch du 9 avril 2010
- ↑ ஷார்லி எப்டோ தாக்குதலுக்கு யேமன் அல்கயீதா பொறுப்பேற்பு
- ↑ "Deadly attack on office of French magazine Charlie Hebdo". BBC News.
- ↑ Bremner, Charles (7 January 2015). "Islamists kill 12 in attack on French satirical magazine Charlie Hebdo". தி டைம்ஸ்.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
வெளியிணைப்புகள்
தொகுதொடர்பான செய்திகள் உள்ளது.
- சார்லி எப்டோ (பிரெஞ்சு)
- Un historique d'Hara-Kiri/Charlie Hebdo (archived from [1] பரணிடப்பட்டது 2005-11-21 at the வந்தவழி இயந்திரம்)
- French Satirical Newspaper Charlie Hebdo Wins Second Trial Over Controversial Cartoon Ban Request
- Schofield, Hugh. "Charlie Hebdo and its place in French journalism." பிபிசி. 3 November 2011.
- ஷார்லி எப்தோ: புதிய பதிப்பின் அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன]
- மீண்டும் முகமது நபி சித்திரத்துடன் "ஷார்லி எப்டோ" இதழின் புதிய பதிப்பு
- ஷார்லீ எப்டோ: முகமது நபி கேலிச்சித்திரத்தை மறுபதிப்பு செய்த பிரெஞ்சு பத்திரிகை