ஜாவ்ரா சமஸ்தானம்

சுதேச சமஸ்தானங்களில் ஒன்று

ஜாவ்ரா சமஸ்தானம் (Jaora State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரதலாம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாவ்ரா சமஸ்தானம 1471 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 84,202 மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் ரூபாய் 8,50,000 கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர் .

ஜாவ்ரா சமஸ்தானம்
जावरा रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1817–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ஜாவரா
Location of ஜாவரா
மத்திய இந்திய முகமையில் ஜாவ்ரா சமஸ்தானம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1817
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
Population
 •  1901 84,202 
தற்காலத்தில் அங்கம் ரத்லாம் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Jaora". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
ரத்லாம் நுழைவாயில், ஜாவ்ரா
ஜாவ்ரா சமஸ்தானக் கொடி.

வரலாறு

தொகு

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ஜாவ்ரா சமஸ்தானம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஜாவ்ரா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது ஐக்கிய மாகாணத்தின் மால்வா முகமையின் கீழ் செயல்பட்டது.[1] ஜாவ்ரா சமஸ்தான நவாபுகளுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், ஜாவ்ரா சமஸ்தானம் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 1948-ஆம் ஆண்டில் மத்திய பாரத மாநிலத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாவ்ரா சமச்தானப் பகுதிகள் மத்திய பிரதேசம் மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

ஜாவ்ரா நவாப்புகள்

தொகு
  • 1817 - 1825 அப்துல் கபூர் முகமதுகான்
  • 825 – 1865 கௌஸ் முகமது கான்
  • 1825 - 1827 முசரப் பேகம் - அரசப்பிரதிநிதி
    • + ஜாஹாங்கீர் கான்
  • 1827 - 1840 போர்த்விக் - அரசப்பிரதிநிதி
  • 1865 - 1895 முகமது இசுமாயில் கான்
  • 1865 - 1872 அரசப்பிரதிநிதிகள்
    • -ஹசரத் நூர் கான்
    • - மால்வா முகமையின் அரசியல் பிரதிநிதி
  • 1895 – 1947 பக்கீர் தௌலா முகமது இப்திகார்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Imperial Gazetteer of India, v. 14, p. 63., Digital South Asia Library
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவ்ரா_சமஸ்தானம்&oldid=3377514" இலிருந்து மீள்விக்கப்பட்டது