ஜிக்மே கியாட்சோ (திபெத்திய சுதந்திர ஆர்வலர்)

ஜிக்மே கியாட்சோ (Jigme Gyatso) (பிறப்பு 1961) இவர் திபெத்திய சுதந்திர அமைப்பின் திபெத்திய ஆர்வலர் ஆவார். இவர் 1996 இல் ஒரு எதிர் புரட்சிகர அமைப்பை வழிநடத்தினார். மேலும், பிளவுகளைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் இவர் சிறையில் எதிர்ப்பு தெரிவித்தபோது இவருக்கு கூடுதல் இரண்டு ஆண்டுகள் சேர்க்கப்பட்டன. பல சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் இவர் சார்பாக எதிர்ப்புத் தெரிவித்தன அல்லது பிரச்சாரம் செய்தன. பன்னாட்டு மன்னிப்பு அவை இவரை மனசாட்சியின் கைதியாக நியமித்தது.[1]

ஜிக்மே கியாட்சோ
ஜிக்மே க்யாட்சோ, 2013 ஏப்ரல் 1, 2013 அன்று சிறையில் இருந்து விடுதலையான பிறகு, தனது சொந்த ஊரில்
பிறப்பு1961
கெர்சூல், அம்டோ, திபெத், கான்சு, திபெத்து
தேசியம்திபெத்து
பணிதிபெத்திய சுதந்திர அமைப்பின் தலைவர்
அறியப்படுவதுதிபெத்தில் அரசியல் நடவடிக்கைகள்

பின்னணியும், ஆரம்பகால செயல்பாடுகளும்

தொகு

இவர், திபெத்தின் கான்சு மாகாணத்தில் உள்ள அம்டோவில் உள்ள கெர்சூலைச் சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டில், மதத் துவக்கத்தைப் பெறுவதற்காக இவர் இந்தியாவுக்கு வந்தார். பின்னர் திபெத்துக்குத் திரும்பி அடுத்த ஆண்டு ஒரு மடத்தில் சேர்ந்தார்.[2] பின்னர் இவர் திபெத்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டார். 1991 இல் "திபெத்திய சுதந்திர அமைப்பு" என்ற இரகசிய இளைஞர் அமைப்பின் தலைவராக செயல்பட்டார்.[3] 1992 ஆம் ஆண்டில், லாசாவில் சுதந்திர சார்பு பேரணியை ஏற்பாடு செய்ய இவர் உதவினார். இதில் பல பங்கேற்பாளர்கள் சீன பொது பாதுகாப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டனர். பேரணியைத் தொடர்ந்து, பொது பாதுகாப்பு பணியக அதிகாரிகள் இவரை கண்காணிப்பில் வைத்தனர்.

கைதும், சிறைவாசமும்

தொகு

1996 மார்ச் 30 அன்று மாலை 6 மணியளவில், திபெத்திய சுதந்திர அமைப்பின் சக உறுப்பினருக்கு சொந்தமான லாசாவில் உள்ள ஒரு உணவகத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவருடன் அந்த உறுப்பினரும் கைது செய்யப்பட்டார். 1992 லாசா எதிர்ப்பு தொடர்பான இவர் கைது செய்யப்பட்டார்: ஒரு சட்டவிரோத அமைப்பை நிறுவுவதன் மூலம் தேசிய பாதுகாப்பைத் தூண்டுதல் மற்றும் ஆபத்தை விளைவித்தல் போன்ற காரணங்களுக்காக.[3] இவரது விசாரணையில், அதிகாரிகள் இவரை "எதிர் புரட்சிகர தலைவன்" என்று வர்ணித்தனர்.[1] 1996 நவம்பர் 26 அன்று, லாசா நகராட்சி இடைநிலை மக்கள் நீதிமன்றம் இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவரது அரசியல் உரிமைகளை ஐந்து ஆண்டுகள் பறித்தும் தண்டனை விதித்தது.

இவர், பின்னர் குட்சா தடுப்பு மையத்தில் ஒரு வருடமும் ஒரு மாதமும் வைக்கப்பட்டார். இந்த நேரத்தில் சிறை அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக இவர் பின்னர் கூறினார். முதல் ஆறு மாதங்களில், இவர் நீண்ட விசாரணை அமர்வுகளை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. இவரது மணிகட்டை மற்றும் கணுக்கால் மீது கையுறை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் தடியால் தாக்கப்பட்டார்.[3] பன்னாட்டு மன்னிப்பு அவை 1997 இல், "இவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார். இதனால் இவரால் நடக்க முடியவில்லை" என்றது.[1]

நவம்பர் 27, 2005 அன்று, சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மன்ஃப்ரெட் நோவாக் என்பவர் சிறையில் இவரைச் சந்தித்தார்; தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், நோவாக் கைதியை விடுவிக்க பரிந்துரைத்தார். சந்திப்பின் விளைவாக இவரை அடித்ததாகவும், தனிமையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.[1][4]

 
ஜிக்மே கியாட்சோ, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 2013 ஏப்ரல் 1 அன்று தனது சொந்த ஊரில்

சிறையிலிருந்து விடுவித்தல்

தொகு

இவர், 2013 மார்ச் 30அன்று சுசுல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் தனது சாஞ்சு வீட்டிற்கு திரும்ப உத்தரவிடப்பட்டு, 2013 ஏப்ரல் 1 அன்று காவலர்களின் துணையுடன் வந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Urgent Action: torture fears for tibetan prisoner". பன்னாட்டு மன்னிப்பு அவை. 10 January 2011. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
  2. "TCHRD calls for the release of Jigme Gyatso on medical ground". Uyghur News. 22 April 2009. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 "China: Precarious health conditions of Mr. Jigme Gyatso / Torture and ill-treatments / Arbitrary detention". World Organization Against Torture. 28 April 2009. Archived from the original on 5 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Fears for welfare of Tibetan prisoner following meeting with UN Rapporteur". International Campaign for Tibet. 1 December 2006. Archived from the original on 3 March 2012. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
  5. "Tibetan Political Activist Freed After 17 Years in Jail". 1 April 2013. http://www.rfa.org/english/news/tibet/prisoner-04012013215019.html.