ஜிக்மே சிங்கே வாங்சுக்

ஜிக்மே சிங்கே வாங்சுக் (Jigme Singye Wangchuck, பிறப்பு நவம்பர் 11, 1955) பூட்டானின் முன்னாள் அரசர் ஆவார். இவர்தான் பூட்டான் இராச்சியத்தின் நான்காவது டிரக் கியால்ப்போ (டிராகன் ராஜா அல்லது வாங்சுக் வம்சம்) ஆவார். இவர் 1972 முதல் 2006 ம் ஆண்டு வரை பூட்டான் தேசத்தை ஆட்சி செய்தார். பூட்டானின் தற்போதுள்ள நவீன மாற்றத்திற்குப் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் என்ற பெருமை இவரையே சாரும். ஜிக்மே சிங்கே வாங்சுக் தன்னுடைய பதினேழாம் அகவையில் தன் தந்தை ஜிக்மே டோர்ஜி வாங்சுக்கின் திடீர் இறப்பால் அரியணை ஏறியவர்.

ஜிக்மே சிங்கே வாங்சுக் 1955
பூட்டான் மன்னரின் தந்தை
ஆட்சி24 சூலை 1972 - 14 திசம்பர் 2006 (34 ஆண்டுகள், 143 நாட்கள்)
முடிசூட்டு விழா1974
முன்னிருந்தவர்ஜிக்மே டோர்ச்சி வாங்சுக்
பின்வந்தவர்ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
துணைவர்டோர்சி வாங்மோ வாங்சுக்
த்செரிங் பெம்
ஆசி த்செரிங்
சங்கை சோடன்
வாரிசு(கள்)சிமி யாங்சொம்
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
சோனம் டெச்சென்
டெச்சென் யாங்சொம்
கெசாங் சோடன்
ஜிக்யெல் ஊகியென்
கம்சும் சிங்கியே
ஜிக்மே டோர்சி
யூஃபெல்மா சோடன்
உக்கியென் ஜிக்மே
அரச குடும்பம்வாங்சுக் மாளிகை
தந்தைஜிக்மே டோர்ச்சி வாங்சுக்
தாய்ஆஷி கெசாங் சோடன்
பிறப்பு11 நவம்பர் 1955 (1955-11-11) (அகவை 68)
திம்பு, பூட்டான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிக்மே_சிங்கே_வாங்சுக்&oldid=2441552" இலிருந்து மீள்விக்கப்பட்டது