திம்பு
இது பூட்டான் நாட்டின் தலைநகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.
திம்பு (Thimbu அல்லது Thimphu) பூடான் நாட்டின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். பூட்டானின் மேற்கு மத்தியப் பகுதியில் சாங்காக் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள திம்பு 1961 இல் அதன் தலைநகரமானது. மேலும் இது திம்பு மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமாக உள்ளது. பூட்டானின் அரசியல் மற்றும் பொருளாதார நகரமாகவும் விளங்குகிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் இங்கு நடைபெற்கின்றன. 2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, திம்பு நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,551 ஆகும். ஒரு சதுர கி.மீ இல் 4,389 மக்கள் வாழ்கின்றனர். இதுவே இந்நாட்டின் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும். தலைநகரான திம்புவில் விமான நிலையம் இல்லை. அருகில் உள்ள பாரோ நகரில் விமான நிலையம் உள்ளது. இந்நகரம் இமயமலையில் 2,320 மீட்டர் (7,656 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
திம்பு | |
---|---|
நாடு | பூட்டான் |
மாவட்டம் | திம்பு மாவட்டம் |
ஏற்றம் | 7,656 ft (2,320 m) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,14,551 [1] |