திம்பு மாவட்டம்

பூட்டானில் உள்ள மாவட்டம்

திம்பு மாவட்டம் (Thimphu District) (Dzongkha: ཐིམ་ཕུ་རྫོང་ཁག་; [[Wylie transliteration|Wylie: Thim-phu rdzong-khag) பூட்டான் நாட்டின் 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு-மத்திய கோட்டத்தில் அமைந்துள்ளது. பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்பு நகரம், திம்பு மாவட்டத்தின் தலைமையிடமாகும். ஜிக்மே தோர்ஜி தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திம்பு மாவட்டம்
ཐིམ་ཕུ་རྫོང་ཁག
திம்பு மாவட்டம்
திம்பு மாவட்டம்
நாடுபூட்டான்
தலைமையிடம்திம்பு
பரப்பளவு
 • மொத்தம்2,067 km2 (798 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்1,38,736
 • அடர்த்தி67/km2 (170/sq mi)
நேர வலயம்பூட்டான் நேரம் (ஒசநே+6)
இணையதளம்www.thimphu.gov.bt


மக்கள் தொகை தொகு

2,067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திம்பு மாவட்டத்தின், மே, 2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,38,736 ஆக உள்ளது. [1]

மொழிகள் தொகு

திஃசொங்கா மொழி இம்மாவட்ட மக்களில் பெரும்பாலோரால் பேசப்படுகிறது.

நிர்வாகப் பிரிவுகள் தொகு

 
பூட்டானின் 20 மாவட்டங்களைக் காட்டும் வரைபடம்

திம்பு மாவட்டம் திம்பு நகரம் மற்றும் 8 கேவோக் எனும்வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது :

  • சாங் கேவோக்
  • தாகாலா கேவோக்
  • ஜென்யெக்கா கேவோக்
  • கவாங் கேவோக்
  • லிங்சி கேவோக்
  • மெவாங் கேவோக்
  • நரோ கேவோக்
  • சோயி கேவோக்

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thimphu District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திம்பு_மாவட்டம்&oldid=3077124" இலிருந்து மீள்விக்கப்பட்டது