சக்தெங் காட்டுயிர் காப்பகம்
சக்தெங் காட்டுயிர் காப்பகம் (Sakteng Wildlife Sanctuary) இமயமலை நாடான பூட்டானின் திராசிகாங் மாவட்டம் மற்றும் சம்துருப் ஜோங்கர் மாவட்டங்களில் பரவியுள்ளது.[2] இது யுனெஸ்கோவால் தற்காலிமகாக பட்டியலிட்ட பூட்டானின் பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் காப்பகமாகும். 2003-இல் நிறுவப்பட்ட இக்காட்டுயிர் காப்பகம் 750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
சக்தெங் காட்டுயிர் காப்பகம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பிங்க் நிறப் பகுதியில் அமைந்த பூட்டானின் சக்தெங் காட்டுயிர் காப்பகம் | |
அமைவிடம் | திராசிகாங் மாவட்டம் மற்றும் சம்துருப் ஜோங்கர் மாவட்டம், பூட்டான் |
பரப்பளவு | 750 km2 (290 sq mi) |
நிறுவப்பட்டது | 2003 |
இக்காட்டுயிர் காப்பகம், பூட்டானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உடல் முழுவதும் முடிகள் கொண்ட எட்டிக் குரங்குகள்,மேக்பை போன்ற பறவைகளின் காப்பிடமாக உள்ளது.[3][4][5][6]
சீனா உரிமை கொண்டாடுதல்
தொகுஉலக சுற்றுச்சூழல் ஆதரவுக் குழுவின் 58-ஆவது கூட்டத்தில், பூட்டானில் இருக்கும் சக்தெங் காட்டுயிர் காப்பகத்திற்கு நிதியுதவி அளிக்க முன்மொழியப்பட்டபோது, சக்தெங் காட்டுயிர் காப்பகப் பகுதி எல்லைப் பிரச்சினைக்கு உட்பட்ட பகுதி என சீனா கூறி, பூட்டானுக்கு நிதியுதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. இக்கூட்டத்தில் சீனாவுக்கு நேரடி பிரதிநிதி இருந்தாலும், பூட்டானுக்கான பிரதிநிதி இல்லை. ஆகவே பூட்டானின் பிரதிநிதியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அபர்ணா சுப்ரமணி வாதிட்டார். சக்தெங் சரணாலய விவகாரத்தில் சீனா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பூட்டானின் நிலைப்பாட்டை கேட்காமல் முடிவுக்கு வரக்கூடாது என அபர்ணா சுப்ரமணி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அபர்ணா சுப்ரமணிக்கு பூட்டான் அரசு அனுப்பிய குறிப்பில், “சக்தெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் இறையாண்மை எல்லைக்கு உட்பட்ட பகுதி” என உறுதிபட தெரிவித்தது. சீனாவின் எல்லை உரிமைகோரலை பூட்டான் மறுத்ததை தொடர்ந்து சக்தெங் காட்டுயிர் காப்பாக்த்திற்கு நிதியுதவி அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.[7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sakteng Wildlife Sanctuary". World Database on Protected Areas. Archived from the original on 24 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 12 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ Chandra Bisht, Ramesh (2008). International Encyclopaedia Of Himalayas. Mittal Publications. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-265-3.
- ↑ Jordans, Bart (2008). Bhutan: A Trekker's Guide. Cicerone Press Limited. p. 307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85284-553-7.
- ↑ "Older Bhutanese Remember Abominable Snowman". Associated Press. 12 August 2008. http://www.foxnews.com/story/0,2933,402095,00.html?sPage=fnc/scitech/naturalscience. பார்த்த நாள்: 12 December 2010.
- ↑ Johnsingh, A. J. T. (2006). Field days: a naturalist's journey through South and Southeast Asia. Universities Press. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7371-552-5.
- ↑ "Sakteng Wildlife Sanctuary". Himalaya 2000 online. Bhutan Travel Guide. பார்க்கப்பட்ட நாள் 2011-04-02.
- ↑ Now, China calls Bhutan's Sakteng Wildlife Sanctuary ‘disputed area’
- ↑ ‘அது எங்களோட இடம்’... பூட்டானிடம் வம்பிழுக்கும் சீனா!
- ↑ எல்லைப் பிரச்சனை: இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா