ஜின்ஜர் பியர்
ஜின்ஜர் பியர், இஞ்சி, சர்க்கரை (இலங்கைத் தமிழ்: சீனி) போன்றவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பானமாகும். இதன் உற்பத்தி இங்கிலாந்தில் 1700 களில் ஆரம்பிக்கப் பட்டு 1900 களில் பரவலானது. இதன் உண்மையான உற்பத்தியில் இஞ்சி, சர்க்கரை, நீர் ஆகியவற்றுடன் ஒரு வகை ஜெலட்டினால் ஆன பொருளும் சேர்க்கப்படும்.
இன்றைய ஜின்ஜர் பியரில் சாராயம் கிடையாது. இது அதிக அழுத்தத்தில் கார்பன்டைஆக்சைடு சேர்து அழுத்தி விற்கப்படும்.
இலங்கையில், பெரும்பாலும் யானைச்சின்ன குளிர்பானத் தயாரிப்பாளர்கள் இதை உற்பத்தி செய்கின்றனர்.