ஜி. ஆர். தாமோதரன்
ஜி. ஆர். தாமோதரன் (பிறப்பு: பிப்ரவரி 20, 1914) கல்வியாளர், துணைவேந்தர், நிர்வாகி, நாடாளுமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகோவையில் திவான் பகதூர் பி. எஸ். ஜி. ரங்கசாமி நாயுடு, கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு, 1914 பிப்ரவரி 20-ம் தேதி பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 1951 ஆம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958லிருந்து 1970வரை தமிழ்நாடு சட்ட மேலைவை உறுப்பினர். திரும்பவும் 1974லிருந்து 78வரை மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 1981 வரை சென்னை பல்கலைக்கழத்தில் துணை வேந்தராகவும் இருந்தார்.[2].தமிழில் முதன்முதலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மாத இதழை கலைக்கதிர் எனும் பெயரில் தொடங்கியவர்[3] இவருடைய நூற்றாண்டு விழா 2014ம் ஆண்டு (1914-2014) கோவையில் கொண்டாடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆர்.கிருஷ்ணகுமார் (ed.). "கொங்கு மண்டலத்தின் கல்வித் துறை பிதாமகன்!- இன்று ஜி.ஆர்.தாமோதரன் 105-வது பிறந்த நாள்". தி இந்து தமிழ் நாளிதழ்.
- ↑ விக்னேஷ்.அ (ed.). "பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி - அதிமுக வலுவாக இருந்த தொகுதியில் சரிகிறதா?". பிபிசி தமிழ் நாளிதழ்.
- ↑ புலவர் செந்தலை ந.கவுதமன், ed. (2 January 2020). "தமிழ் மொழித் திருவிழா தமிழ் வாழ்வில் கோவை". தினமணி நாளிதழ்.