ஜி. ஏ. வடிவேலு
ஜி. ஏ. வடிவேலு (G. A. Vadivelu) (12 சூன் 1925 – 13 சனவரி 2016) இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இராசகோபாலாச்சாரி மற்றும் காமராசருடன் நெருங்கிப் பழகிய தமிழ்நாடு அரசியல்வாதியும் ஆவார். சமுதாயம் மற்றும் புது வாழ்வு போன்ற செய்திப் பத்திரிகைகளை நடத்தியவர்.
ஜி. ஏ. வடிவேலு | |
---|---|
பிறப்பு | கொளஹல்லி. ஏ. வடிவேலு 12 சூன் 1925 கொளஹள்ளி. தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 13 சனவரி 2016 [1] சேலம், தமிழ்நாடு |
இளமை
தொகுதர்மபுரி மாவட்டத்தின் கொளஹள்ளியில் பிறந்த ஜி. ஏ. வடிவேலு, தர்மபுரி உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். சிறிது காலம் பிரித்தானிய அரசின் வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியாற்றியவர். இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காக அரசுப் பணியை துறந்தவர்.
தமது பதினைந்தாவது வயதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்த வடிவேலு, 1940ல் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்திலும், 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் கலந்து கொண்டவர்.
இந்திய விடுதலைக்குப் பின்னர்
தொகுஇந்திய விடுதலைக்குப் பின்னர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் நிறுவிய சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவர்.
இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்கு எதிராக குரல் கொடுத்த வடிவேலு சிறையில் அடைக்கப்பட்டார். 1977ல் ஜனதா தளம் கட்சியில் இணைந்து செயல்பட்டவர். பின்னர் ஜனதா தளக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராகவும், இரண்டு ஆண்டுகள் தேசியப் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தவர். 2002ல் மீண்டும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[2]
படைப்புகள்
தொகு- செம்பியர் திலகம் புதினம் 1985
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜி.ஏ.வடிவேலு மரணம்
- ↑ Staff Reporter. "Former JD(S) State president Vadivelu dead". The Hindu.