ஜி. சொக்கலிங்கம்

தமிழக அரசியல்வாதி

ஜி. சொக்கலிங்கம் (இறப்பு 20 ஏப்ரல் 2000), (G. Chockalingam) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கான வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும் . [1] 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் போதும் இதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2000 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு ஒரு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சொக்கலிங்கம்&oldid=3588271" இலிருந்து மீள்விக்கப்பட்டது