ஜி. பத்மாவதி

இந்திய அரசியல்வாதி

ஜி. பத்மாவதி (G. Padmavathi) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெங்களூரின் 50வது மற்றும் ஏழாவது பெண் மாநகரத் தலைவியாக இருந்தார்.[1][2]

ஜி. பத்மாவதி
50வது பெங்களூர் மாநகரத் தலைவி
பதவியில்
செப்டம்பர் 2016 – 28 செப்டம்பர் 2017
முன்னையவர்மஞ்சுநாத ரெட்டி
பின்னவர்ஆர். சம்பத் ராஜ்
தொகுதிபிரகாசு நகர்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பத்மாவதி 1979-ல் பெங்களூருப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.[3] பத்மாவதி ஆர் ஜெயகோபாலை மணந்தார். இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தொழில்

தொகு

பெங்களூரு மாநகராட்சி பிரகாஷ் நகர்ப் பகுதியில் (வட்டம் எண் 98) நான்கு முறை (1989, 1996) பத்மாவதி உறுப்பினராக பணியாற்றினார். பத்மாவதி 2008 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் இராசாசி நகரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். இவர் தொடர்ந்து மூன்று முறை கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான சுரேசு குமாரிடம் தோல்வியடைந்தார்.[4] செப்டம்பர் 2016-ல் இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை தேர்தலில் போட்டியிட்டார். 2016ஆம் ஆண்டில், இந்த பதவி சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டது.[5] இந்தியத் தேசிய காங்கிரசு இவரைத் தேர்தலுக்கு முன்பு மாநகரத் தலைவி வேட்பாளராகத் தேர்வு செய்தது. இத்தேர்தலில் இவர் 142 வாக்குகள் பெற்றார். இவரது நெருங்கிய போட்டியாளர் பாரதிய ஜனதா கட்சியின் டி.எச்.லட்சுமி பெற்ற வாக்குகள் 120 ஆகும். தேர்தலில் வெற்றி பெற்று நகர மாநகரத்தந்தையாகவும், எம்.ஆனந்த் துணை மாநகரத்தந்தையாகவும் பதவியேற்றனர். 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் கருத்துகளையும் வியூகங்களையும் இவர் பகிர்ந்து கொண்டார். " 2018 சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் பிரச்சனையில் அனைத்துக் கண்களையும் கொண்டு, பெங்களூரின் முன்னேற்றத்திற்காகவும் முதல்வர் சித்தராமையாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும் முயல்வேன். நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்வோம், இது ஒரு முக்கியமான நேரத்தில் எங்கள் கட்சிக்கு நிச்சயமாக உதவும்." எனத் தெரிவித்தார்.[6] இவரது பதவிக்காலம் 2017-ல் முடிவடைந்தது.[1][7]

அக்டோபர் 25, 2016 அன்று, இவர் நகராட்சி அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் இவர் பொதுமக்களின் குறைகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். நகராட்சி உறுப்பினர்கள் தங்களை ஒருங்கிணைத்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "G. Padmavathi elected Bengaluru mayor" (in en-IN). The Hindu. 29 September 2016. http://www.thehindu.com/news/cities/bangalore/g-padmavathi-elected-mayor/article9159147.ece. பார்த்த நாள்: 1 November 2016. 
  2. "BBMP poll: Congress announces mayoral candidate hours before the poll" (in en-IN). The Hindu. 28 September 2016. http://www.thehindu.com/news/cities/bangalore/congress-announces-mayoral-candidate-hours-before-the-poll/article9157615.ece. பார்த்த நாள்: 1 November 2016. 
  3. PADMAVATHI G. (Indian National Congress(INC)):Constituency- Rajaji Nagar(BANGALORE) - Affidavit Information of Candidate:
  4. "Sitting and previous MLAs from Rajaji Nagar Assembly Constituency". elections.in.
  5. "Five biggest challenges for newly-elected Bengaluru mayor G. Padmavathi". Live Mint. 28 September 2016. http://www.livemint.com/Politics/8K8KjLpVZQEm0bqs7SsuyH/Five-biggest-challenges-for-newlyelected-Bengaluru-mayor-G.html. பார்த்த நாள்: 1 November 2016. 
  6. "Padmavathi elected city's 50th mayor amid high drama". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Padmavathi-elected-citys-50th-mayor-amid-high-drama/articleshow/54575315.cms. பார்த்த நாள்: 1 November 2016. 
  7. "Padmavati all set to become 50th mayor". Bangalore Mirror. http://bangaloremirror.indiatimes.com/bangalore/civic/Padmavati-all-set-to-become-50th-mayor/articleshow/54531970.cms. பார்த்த நாள்: 1 November 2016. 
  8. "Bengaluru Mayor, G Padmavathi cracks the whip on municipal officers". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bengaluru-mayor-g-padmavathi-cracks-the-whip-on-municipal-officers/articleshow/55050994.cms. பார்த்த நாள்: 1 November 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பத்மாவதி&oldid=3434966" இலிருந்து மீள்விக்கப்பட்டது