ஜீன்பூல் சூழல் பூங்கா

ஜீன்பூல் சூழல் பூங்கா என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், கூடலூர், நாடுகாணியில் வனத்துறைக்குச் சொந்தமான ஒரு தாவர மரபியல் பூங்கா ஆகும்.[1]

ஜீன்பூல் சூழல் பூங்காவனது நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடுகாணி பகுதியில் 250 சதுர ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியானது சராசரியாக ஆண்டுக்கு 2860.4 மி.மீ மழையைப் பெறுகிறது. இந்தப் பூங்காவானது அழிந்து வரும் தாவர வகைகளை பெருக்கும் நோக்கத்தோடு 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு ஆராய்ச்சிப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.[2] பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இப்பூங்காவில் அரியவகை மரங்கள், செடிகள், மூலிகைகள், பல்வேறு கால நிலைகளில் வளரும் தாவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் அறியும் வகையில் இங்கு பெரணி இல்லம், ஆர்கிட் மலர்கள் மையம், மூலிகைப் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளதோடு, காட்சிக் கோபுரம், மிதிவண்டி சவாரி. பழங்குடி கிராமத்தில் தங்கும் வசதி போன்றவற்றைவையும் உள்ளன. மேலும் இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிமுனையில் கேளரப் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளை கண்டு களிக்க முடியும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "மூன்று மாதம் வரை வாடாமல் இருக்கும் ஆர்கிட் மலர்கள்" (PDF). வேளாண் செய்திகள். தினமணி. 28 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஜீன் பூல் இயற்கைச் சுற்றுலா மையம்". செய்திக்கட்டுரை. தினமணி. 27 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2018.
  3. "சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு பெறும் ஜீன்பூல் சூழல் பூஙுகா". இந்து தமிழ். அக்டோபர் 29 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்பூல்_சூழல்_பூங்கா&oldid=3578346" இலிருந்து மீள்விக்கப்பட்டது