ஜீயங் ஜாங்
ஜீயிங் ஜாங் (Zhiying"Tania"[2] Zeng, பிறப்பு 17 யூலை[2] 1966;[3][4] கண்டோனீயம் யேல்: dzāng jī wihng) என்பவர் ஒரு சீன-சிலி மேசைப்பந்தாட்ட வீராங்கனையாவார்.[5] சீனாவில் பிறந்த இவர் சர்வதேச அளவில் சிலியின் சார்பாக விளையாடுகிறார். இவர் 2024 கோடை ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதி பெற்றார். ஜெயிங் சிலிக்குச் செல்வதற்கு முன் சீன அணியில் இருந்தார். ஜீயிங் ஜிங் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஒரு போட்டியாளராக மேசைப்பந்து விளையாட்டுக்குத் திரும்பினார். இவர் 2024 கோடை ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். மேலும் விளையாட்டில் சிலியின் சார்பாக விளையாடினர்.[6] ஆனால் துவக்கச் சுற்றில் தோற்று முன்னேறவில்லை.
2023 இல் ஜீயங் | ||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | 曾志英 | |||||||||||||
தேசியம் | சீனர் (முன்பு), சிலியர் (தற்போது) | |||||||||||||
பிறப்பு | 17 சூலை 1966[1] குவாங்சௌ, சீனம்[1] | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | சிலி | |||||||||||||
விளையாட்டு | மேசைப்பந்தாட்டம் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வாழ்கை குறிப்பு
தொகுஜீயிங் குவாங்சௌவில் பிறந்தார்.[7] இவரது தாயார் மேசைப்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்தார். இதனால் ஜியிங் தொழில்முறை வீரர்களுக்கான அணுகலுடன் ஒரு விளையாட்டு வளாகத்திற்கு அருகில் வளர்க்கப்பட்டார்.[7] இவர் தனது 9 வயது வரை தன் தாயிடம் பயிற்சி பெற்றார். பின்னர் தன் 11 வயதில் ஒரு உயர்நிலை விளையாட்டு அகாதமியில் இணைந்தார்.[7] இவர் ஷாங்காயில் பிறந்த லக்சம்பர்க் மேசை பந்தாட்ட வீரரும், தனது முன்னாள் சீன அணியின் வீரருமான நி ஆயாலியனுடன், நண்பராக உள்ளார். அவருடன் 2024 கோடைகால ஒலிம்பிக்கில் மீண்டும் சந்தித்தனர்.[6]
இவர் 12 வயதில் ஒரு தொழில்முறை வீராங்கனையாக மாறிய நேரத்தில், ஏற்கனவே தேசிய இளையோர் வாகையர் பட்டத்தை வென்றிருந்தார். ஜெங் முதன்முதலில் சீன மேசைப்பந்தாட்ட அணியின் ஒரு பகுதியாக 16 வயதில் இருந்தார். ஜீயிங்கின் கூற்றுப்படி, 1986 ஆம் ஆண்டில் பல வண்ண ராக்கெட்களைப் பயன்படுத்தலாம் என்ற விதி வந்தது. அது வரை ஒரு வண்ண ராக்கெட்டை மட்டுமே பயன்படுத்திவந்த ஜீயிங்குக்கு பலவண்ண ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவது கவனச்சிதரளை உண்டாக்கியது. இது இவர் சீன தேசிய அணியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளியது.[7]
1989 ஆம் ஆண்டில், இவரது 20 வயதில் சிலியல் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மேசைப் பந்தாட்டப் பயிற்சியாளராக பணிபுரிய சிலியில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற ஜீயிங் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சியாளராக இணைந்தார். தன் மகனுக்கு மேசைப் பந்தாட்டத்தில் ஆர்வம் உள்ளதை அறிந்து தானே அவனுக்கு பயிற்சியாளராக ஆனார். இதையடுத்து 2003 ஆம் ஆண்டில் மீண்டும் விளையாடத் தொடங்கினார். 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் வென்றார். இவரது மகன் அவராகவே போட்டிகளுக்கு பயணிக்கும் அளவுக்கு வளர்ந்தவுடன் இவர் போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார்.[7]
நீண்டகாலம் மேசைப்பந்தாட்டத்தை விளாயாடமல் இருந்த இவர் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொழுது போக்கிற்காக மீண்டும் விளையாடத் துவங்கினார். ஆர்வம் காரணமாக நாள்தோறும் கடும் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் இக்விக்கில் பிராந்திய போட்டிகளில் இவர் முதன்முதலில் போட்டியிட்டார். 2023 ஆம் ஆண்டு தென் அமெரிக்கன் மேசைப்பந்தாட்ட வாகையர் பெண்கள் அணிக்கு தகுதி பெற்றார். அங்கு, இவர் மகளிர் அணி போட்டியில் வென்றார். ஜீயிங் பின்னர் 2023 பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடினார். மகளிர் அணி நிகழ்வில் டேனீலா ஒர்டேகா மற்றும் பவுலினா வேகா ஆகியோருடன் வெண்கலத்தை வென்றார். ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் நான்கு செட் போட்டியில் மறுநுழைவு உள்ளிட்ட இவரது ஆட்டம், சிலியில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் கூட சமூக ஊடகங்களில் தனது வாழ்த்துக்களை அனுப்பினார்.[5]
இவர் 2024 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார்.[6] ஆனால் துவக்கச் சுற்றில் தோற்று முன்னேறவில்லை.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் சிலியின், இக்விக் நகரில் சீனப் பொருட்களை விற்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5] இவர் சரளமாக ஸ்பானிஷ் பேசுகிறார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "ZENG Zhiying".
- ↑ 2.0 2.1 "¿Quién es Tania Zeng? la chilena con raíces orientales que se luce en tenis de mesa". 24horas.cl. 31 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 November 2023.
- ↑ "Zhiying Zeng". ஒலிம்பிக்கு விளையாட்டுகள். பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ Kuzma, Cindy (27 July 2024). "Table Tennis Player Zhiying Zeng Just Made Her Olympic Debut at 58 Years Old". Self. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Savarese, Mauricio (31 October 2023). "57-year-old Chinese-Chilean table tennis player wins over crowd at Pan American Games". அசோசியேட்டட் பிரெசு. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ 6.0 6.1 6.2 Hu, Krystal (2024-07-27). "58-year-old Zeng Zhiying exits Olympics but not table tennis". ராய்ட்டர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2024-07-27.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 Grez, Matias (July 26, 2024). "'I made it': 38 years after calling time on her Olympic dream in China, this 'table tennis grandma' will represent Chile at Paris 2024". CNN. https://www.cnn.com/2024/07/26/sport/zhiying-tania-zeng-chile-olympics-table-tennis-spt-intl/index.html.Grez, Matias (26 July 2024).