ஜும் நடனம்
ஜும் நடனம் (Jhum Dance) என்பது பல்வேறு மலைவாழ் பழங்குடியினரிடையே உள்ள பாரம்பரிய நடனமாகும். இது வங்காளதேசத்தின் கரோசு மற்றும் திரிபுரா மாநிலத்தில் உள்ள பல இனக்குழுக்களிடையே நடைமுறையில் உள்ளது. இந்த நடனத்தில் பல வடிவங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் ஜும் நடனத்தின் ஒவ்வொரு அடியினையும் மண் தேர்வு முதல் அறுவடை வரை அனைத்து வேலைகளையும் இந்த நடனத்தின் மூலம் மேற்கொள்கின்றனர்.[1] மொத்தம் 19 இனக்குழுக்கள் வசிக்கும் திரிபுராவின் திரிபுரி, ஹலாம், நோட்டியா, மால்சும் மற்றும் கரோ மக்களிடையே ஜூம் நடனம் முக்கியமாக நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு விவசாய நடனம் ஆகும்.[2]
கருப்பொருள்
தொகுதிரிபுராவின் இனக்குழுக்களிடையே ஜும் நடனம் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்தும் ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. ஜூம் பயிரிடுவதற்கு நிலத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் பயிர்களை அறுவடை செய்து வீட்டிற்குக் கொண்டு வருவது வரை அனைத்து செயல்களும் இந்த நடனத்தின் மூலம் கொண்டாடப்படுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு பழங்குடியினரிடையேயும் இதன் வெளிப்பாட்டில் வேறுபாடுகள் உள்ளன.[2]
திரிபுரி பழங்குடி
தொகுதிரிபுரி பழங்குடியினரின் ஜும் நடனத்தில் ஐந்து நிகழ்வுகள் உள்ளன.[2]
ஹலாம் பழங்குடியினர்
தொகுஹலாம் பழங்குடிகள் ஜும் நடனத்தை "லுயினிங்கோம்" நடனம் என்று அழைக்கின்றனர். இவர்கள் இந்நடனத்தினை 7 வகையான நிகழ்ச்சிகளுடன் தொடர்புப் படுத்துகின்றனர். இவை: 1) ரமேசு ஒட் (ஜூம் பார்ப்பது), 2) பாம்-அபட் (ஜும் அறுவடை), 3) சாங் அடு (நெல் நடுதல்), 4) லைச்சுன் (பயிர்களைப் பாதுகாத்தல்), 5) சாங் அட் (அறுவடை செய்தல்), (6) அன்சில் (கதிரடித்தல்), 7) தூ பைல் (அரிசியை வீட்டிற்குக் கொண்டு வருதல்).[2]
நோட்டியர்கள்
தொகுதிரிபுராவின் நோட்டியாக்களிடையே ஜும் நடனமும் நடைமுறையில் உள்ளது. இவர்கள் கைகளில் கத்திகளுடன் வரிசையாக நடன அரங்கிற்கு வந்து, நான்கு பரிமாணங்களில் படிகளைச் செய்து, ஒரு குச்சியுடன் நடனமாடி அதே தாளத்தில் நடன அரங்கை விட்டு வெளியேறுகிறார்கள். பின்னர் மீண்டும் அதே போன்று மேடையில் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து, கத்தியைக் கொடுத்து, கடைசியாகத் தரையைத் தொட்டு வணங்கிச் செல்கின்றனர். அடுத்தடுத்த நடைபெறும் திருவிழா நடனங்களில் பெண்களும் பங்கேற்கின்றனர்.[2]
மால்சம் துணை இனம்
தொகுமல்சும் பழங்குடியினரின் விவசாய முறையில் ஜும் நடனம் 12 நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. செம்டாங் (கத்திகளைக் கடன் கொடுத்தல்), லூவாட் (காடு வெட்டுதல்), லௌஹால் (தீ வைப்பது), மங்க்ருதம் (சாம்பலைச் சுத்தம் செய்தல்), சாந்து (நன்கொடைகள்), லிச்சுனு (அரிசி களையெடுத்தல்), சனத் (நெல் அறுத்தல்), சோங்கிஞ்சயத் (அரிசி நெய்தல்) ), ஐஹிங்சைதா (அரிசியை வீட்டிற்குக் கொண்டு வருவது) போன்றவை. மல்சும் பழங்குடியினர் பருத்தி சாகுபடியின் போது நடனம் ஆடுவர். பருத்தி விதை விதைப்பதிலிருந்து நூல் எடுத்து துணிகளை நெசவு செய்வது வரை பல்வேறு வகையான நடனங்கள் உள்ளன.[2]
காரோ பழங்குடியினர்
தொகுகாரோ பழங்குடியினரிடையே மொத்தம் 7 மலை ஜும் நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன. கரோ திபெத்திலிருந்து வந்தது. இதிலும் பல நடைமுறைகள் உள்ளன.[2]