ஜூலியட் பிரௌஸ்

நடனக் கலைஞர்

ஜூலியட் அன்னே பிரௌஸ் (Juliet Anne Prowse) (பிறப்பு: 1936 செப்டம்பர் 25 - இறப்பு: 1996 செப்டம்பர் 14) இவர் ஒரு நடனக் கலைஞர் ஆவார். இவரது நாற்பதாண்டு கால நடன வாழ்க்கையில் மேடை, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவையும் அடங்கும். இவர் தென்னாப்பிரிக்காவில் வளர்ந்தார். அங்கு இவரது குடும்பம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குடியேறியது.

ஜூலியட் பிரௌஸ்
1960களில் ஜூலியட் பிரௌஸ்
பிறப்புஜூலியட் அன்னே பிரௌஸ்
(1936-09-25)25 செப்டம்பர் 1936
மும்பை, இந்தியா
இறப்பு14 செப்டம்பர் 1996(1996-09-14) (அகவை 59)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
பணிநடிகை, நடனக் கலைஞர், பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1955 முதல் 1995 வரை
வாழ்க்கைத்
துணை
எடி பிரேசியர் (1969-70)
ஜான் மெக்கூக் (1972–79) (1 குழந்தை)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பிரித்தானிய இந்தியாவின் மும்பையில் ஒரு ஆங்கில தந்தை மற்றும் தென்னாப்பிரிக்க தாய்க்கு பிரௌஸ் பிறந்தார். 3 வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்த பிறகு, இவரது தாயார் இவருடன் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார். அதற்குப் பின்னர் ஒரு வருடம் கழித்து, நான்கு வயதில் நடனம் படிக்கத் தொடங்கினார்.

தனது இருபதுகளின் ஆரம்பத்தில், இவர் பாரிஸில் உள்ள ஒரு விடுதியில் நடனமாடியபோது, ஒரு திறமையான முகவரால் அடையாளம் காணப்பட்டார். இறுதியில் வால்டர் லாங் என்ற இயகுநரின் கேன்-கேன் (1960) என்ற திரைப்படத்தில் கிளாடின் என்ற பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் மூலம் இவர் ஏற்கனவே ஹாலிவுட்டுக்குச் செல்வதற்கான சில வாய்ப்புகளை இழந்திருந்தார். ஆனால் இறுதியில் ஸ்பெயினில் ஒரு நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு இவர் இந்த படத்திற்காக அமெரிக்கா செல்ல பயணம் செய்தார்.

தொழில்

தொகு

1959ஆம் ஆண்டில் கேன்-கேன் படப்பிடிப்பின் போது தான் அவர் சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.சோவியத் தலைவர் நிகிதா குருஷ்சேவ் படத்தின் தொகுப்பை பார்வையிட்டார். பிரௌஸ் உருசிய தலைவருக்கு ஒரு நடனத்தை நிகழ்த்திய பின்னர், அவர் இவரது நடனம் ஒழுக்கக்கேடானதென அறிவித்தார். இந்த விமர்சனம் அமெரிக்காவில் இவருக்கு கணிசமான கவனத்தை கொண்டு வந்தது. இங்கிருந்து, இவரது வாழ்க்கை துரிதப்படுத்தப்பட்டது.[1]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

தொகு

கேன்-கேன் தொகுப்பில் அமெரிக்க பாடகர், இசைக்கலைஞர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிராங்க் சினாட்ரா என்பவரை சந்தித்தார். டைம் பத்திரிகை திரைப்படத்தை மிகவும் நன்றாக மதிப்பிடவில்லை. ஆனால் பிரௌஸை அதில் மிகச் சிறந்த நடிகை என்று அறிவித்தது:[2] இவர் சினாட்ரா மற்றும் பிற குறிப்பிடத்தக்க பாடர்களான எலா ஃபிட்ஸ்ஜெரால்ட், பீட்டர் லாஃபோர்ட், ஹெர்மியோன் ஜிங்கோல்ட், ஹாய்- லோஸ், ரெட் நோர்வோ, நெல்சன் ரிடில்போன்ற பிரபல பாடகர்களுடன் மேடையில் தோன்றினார். மேலும் 1959 ஆம் ஆண்டு பிராங்க் சினாட்ரா நிகழ்சியில் அவரது இசைக்குழுவுடன் இவர் தோன்றினார் . இவர் சில நேரங்களில் மற்ற விருந்தினர்களுடன் சேர்ந்து பாடுவார். சில சமயம் சினாட்ரா இவருடன் பாடுவார்.[3]

அந்த நேரத்தில் நடிகர் நிக்கோ மினார்டோஸுடன் வாழ்ந்திருந்தாலும், லாஸ் வேகாஸில் தன்னுடன் இணையுமாறு சினாட்ரா ப்ரோஸை அழைத்தார்.[4] சினாட்ராவும் ப்ரூஸும் தங்கள் நிச்சயதார்த்தத்தை 1962இல் அறிவித்தனர். ஆனால் விரைவில் அவர்கள் பிரிந்தனர். ஏனெனில் பிரௌஸ் தனது வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்பினார்.[5]

 
ஜி.ஐ ப்ளூஸில் எல்விஸ் பிரெஸ்லியுடன் ஜூலியட் பிரௌஸ்

இறப்பு

தொகு

1994ஆம் ஆண்டில், பிரௌஸுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 1995ஆம் ஆண்டில், இவர் அத ன்சிகிச்சைக்குச் சென்றார், மேலும் சுகர் பேபி என்ற நிகழ்ச்சியில் மிக்கி ரூனியுடன் சுற்றுப்பயணம் செய்ய போதுமான உடல் நலத்துடன் இருந்தார். மீண்டும் புற்றுநோய் திரும்பியது, 1996 செப்டம்பர் 14, அன்று தனது 60 வது பிறந்தநாளுக்கு பதினொரு நாட்கள் முன்னதாக இறந்தார்.

இவரது முன்னாள் கணவர் ஜான் மெக்கூக் ஒரு தொலைக்காட்சி நடிகராவார். இவருக்கு சேத் என்ற இரு மகன் இருந்தார்.[6]

குறிப்புகள்

தொகு
  1. "Juliet Prowse". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் September 15, 2007.
  2. "New Pictures, movie review of Can-Can". Time இம் மூலத்தில் இருந்து 7 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080307133011/http://www.time.com/time/magazine/article/0,9171,894827,00.html. பார்த்த நாள்: 17 September 2007. 
  3. "YouTube". The Frank Sinatra Show December 13, 1959 with Juliet Prowse. பார்க்கப்பட்ட நாள் 17 September 2007.
  4. https://vimeo.com/ondemand/findingnico
  5. The Guardian obituary, 16 September 1996, by Ronald Bergan
  6. New York Times

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியட்_பிரௌஸ்&oldid=4173731" இலிருந்து மீள்விக்கப்பட்டது