ஜூலியா அல்வாரெஸ்

கவிஞர், புதின எழுத்தாளர், கட்டரையாளர்

ஜூலியா அல்வாரெஸ் (Julia Alvarez, பிறப்பு: மார்ச் 27, 1950) என்பவர் டொமினிகன்-அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இவர் கவிஞராக, கட்டுரையாளராக மற்றும் நாவலாசிரியராக அறியப்படுகிறார். பல இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடத்தக்க லத்தீன் எழுத்தாளர்களில் ஒருவராக கருதுகின்றனர். மேலும் இவர் சர்வதேச அளவில் விமர்சக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப் பெற்ற எழுத்தாளர் ஆவார்.

ஜூலியா அல்வரேஸ்
பிறப்புமார்ச்சு 28, 1950 (1950-03-28) (அகவை 74)
நியூயார்க்
மொழிஆங்கிலம்
தேசியம்டொமினிக்கன்-அமெரிக்கன்
கல்வி நிலையம்கன்டிகட் கல்லூரி,
சிராகஸ் பல்கலைக்கழகம், மிடில்பெரி கல்லூரி
குறிப்பிடத்தக்க விருதுகள்நேஷனல் மெடல் ஒப் ஆர்ட்ஸ்(2014)[1]
துணைவர்பில்இச்னர் (1989–தற்சமயம் வரை)[2]
இருப்பிடம்வெர்மான்ட், அமெரிக்கா
இணையதளம்
www.juliaalvarez.com

ஜூலியா அல்வாரெஸின் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "தி சீக்ரெட் புட்பிரிண்ட்" என்ற பட புத்தகம் குழந்தைகளுக்கான இவரது முதல் புத்தகம் ஆகும்.  "டியா லோலா" புத்தகத் தொடர் உட்பட பல புத்தகங்களை இளம் வாசகர்களுக்காக எழுதியுள்ளார்.[3]

ஆரம்பக்கால வாழ்க்கையும் பணியும்

தொகு

ஜூலியா அல்வாரெஸ் 1950 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தார்.[4] அவருக்கு மூன்று மாதங்களாக இருந்த போது அவரது குடும்பம் டொமினிக்கன் குடியரசிற்கு திரும்பிச் சென்றது. அங்கு பத்து ஆண்டுகள் வரை பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் அளவிற்கு வசதியாக வாழ்ந்தனர்.[5][6]1967 ஆம் ஆண்டில் அபோட் அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 1967 முதல் 1969 வரை கனெக்டிகட் கல்லூரியில் பயின்றார். (அங்கு அவர் தனது கவிதைக்காக பெஞ்சமின் டி. மார்ஷல் பரிசை வென்றார்) மேலும் மிடில்பரி கல்லூரியில் இளங்கலை பட்டத்தையும், 1975 ஆம் ஆண்டு சிராகஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.[7]

அல்வாரெஸ் 1975 ஆம் ஆண்டில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, கென்டக்கி ஆர்ட்ஸ் கமிஷனில் எழுத்தாளராக பணிபுரிந்தார். அவர் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமூகங்களைப் பார்வையிட்டு, எழுத்துப் பட்டறைகளை நடத்தி, வாசிப்பை ஊக்குவித்தார். இந்த ஆண்டுகளில் அமெரிக்காவை பற்றிய ஆழமான புரிதலையும், கற்பிப்பதற்கான தனது ஆர்வத்தை உணர்ந்ததாகவும் அவர் கூறுகின்றார். கென்டக்கியில் பணிபுரிந்த பின்னர், கலிபோர்னியா, டெலாவேர், வட கரோலினா, மாசசூசெட்ஸ், வாஷிங்டன் டி.சி மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய நாடுகளில் தனது கல்வி முயற்சிகளை முன்னெடுத்தார்.[8]

பர்லிங்டனில் உள்ள வெர்மான்ட், பல்கலைக்கழகத்தில் ஆங்கில படைப்பிலக்கிய உதவி பேராசிரியராக இரண்டு வருடங்கள் கடமையாற்றினார். அங்கு புனைகதை மற்றும் கவிதைகளுக்கான பயிற்சி பட்டறைகளையும், உயர் வகுப்பு மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான மேம்பட் புனைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தினார்.[9]

மிடில்பெரி கல்லூரியில் பகுதிநேரத்தில் படைப்பு எழுத்தை கற்பித்தார்.[8] அல்வாரெஸ் தற்போது வெர்மான்டில் உள்ள சாம்ப்லைன் பள்ளத்தாக்கில் வசிக்கின்றார். இவர் ஆலோசகராகவும், ஆசிரியராகவும், இலக்கிய விருதுகளுக்கான நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.[10]

இலக்கியபணி

தொகு

அல்வாரெஸ் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான லத்தீன் எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[11] அவர் ஐந்து நாவல்கள், கட்டுரைகள் புத்தகம், நான்கு கவிதைத் தொகுப்புகள், நான்கு சிறுவர் புத்தகங்கள், இரண்டு புனைகதை படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.[12] அல்வராஸின் முதலில் வெளியிட்ட ஹோம் கமிங் என்ற கவிதைகளின் தொகுப்பை 1984 ஆம் ஆண்டு வெளிட்டார். அக்கவிதை தொகுப்பு 1996 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டு மறுபதிப்பு வெளியிடப்பட்டது.[13]

1991 ஆம் ஆண்டில் "ஹவ் தி கார்சியா கேர்ள்ஸ் லாஸ்ட் தெர் அசென்ட்ஸ்" என்ற தனது முதல்  புதினத்தை வெளியிட்டார்.  டொமினிகன் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  முதல் பெரிய புதினம் ஆகும். [14]இந்த புதினத்தின் 250,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகின. மேலும் அமெரிக்க நூலக சங்கத்தின் குறிப்பிடத்தக்க புத்தகமாக கருதப்பட்டது.[15]

இவரது இரண்டாவது புதினம் 1994 இல் வெளியிடப்பட்ட த டைம் ஒப் த பட்டர்பிளைஸ் என்பது ஆகும். வரலாற்றுடன் தொடர்புபட்ட இந்த புதினம் டொமினிகன் குடியரசில் ட்ருஜிலோ சர்வாதிகார காலத்தில் மிராபல் சகோதரிகளின் குறித்து விரிவாகப் கூறப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டில் அவர்களின் சடலங்கள் தீவின் வடக்கு கடற்கரையில் ஒரு குன்றின் அடியில் காணப்பட்டன. அவை அந்த நேரத்தில் நாட்டின் அடக்குமுறை ஆட்சியைக் கவிழ்க்க ஒரு புரட்சிகர இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகழ்பெற்ற நபர்கள் லாஸ் மரிபோசாஸ் பட்டாம்பூச்சிகள் என குறிப்பிடப்படுகிறார்கள்.[16] 2001 ஆம் ஆண்டில், ஜூலியா அல்வாரெஸ் தனது முதல் சிறுவர் பட புத்தகமான “தி சீக்ரெட் புட்பிரிண்ட்ஸ்” வெளியிட்டார். 2000 ஆம் ஆண்டில் இன் த நேம் ஒப் சலோம் என்ற புதினத்தை வெளியிட்டார். இந்த புதினம் இரண்டு தனித்துவமான பெண்களின் வாழ்க்கையை ஒன்றாக இணைக்கும் விதத்தையும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அர்ப்பணித்தார்கள் என்பதையும் விளக்குகிறது. இந்த புத்தகம் அதன் கவனமான வரலாற்று ஆராய்ச்சி மற்றும் வசீகரிக்கும் கதைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. மேலும் கடந்த அரை நூற்றாண்டின் அரசியல் ரீதியாக நகரும் புதினங்களில் ஒன்றாக பப்ளிஷர்ஷஸ் வீக்லீ சஞ்சிகையினால் கருதப்பட்டது.[17]

விருதுகளும், மரியாதைகளும்

தொகு

அல்வாரேஸ் நேஷனல் எண்டோமன்ட் ஒப் ஆர்ட்ஸ் மற்றும் இங்க்ராம் மெரில் அறக்கட்டளை ஆகியவற்றில் இருந்து மானியங்களை பெற்றுள்ளார். ஒரு கண்காட்சியில் ஜான் டோன் முதல் ஜூலியா அல்வாரெஸ் வரையிலான நூறு கவிஞர்களின் கையெழுத்து பிரதிகள் காட்சிப்படுத்தப்பட்டன.[18] 1974 ஆம் ஆண்டில் அமெரிக்க கவிஞர்களின் அகாடமியில் இருந்து லாமன்ட் பரிசையும், 1986 ஆம் ஆண்டில் தேர்ட் வுமன் பிரஸ் விருதில் விவரிப்புக்கான முதல் பரிசையும் பெற்றுக் கொண்டார். மேலும் ஜெனரல் எலக்ட்ரிக் அறக்கட்டளையின் விருதையும் பெற்றார்.[19] 2009 ஆம் ஆண்டு அமெரிக்க இலக்கியத்தில் சாதனைக்கான ஃபிட்ஸ்ஜெரால்ட் விருதை பெற்றார்.[20] ஹவ் தி கார்சியா கேர்ள்ஸ் லாஸ்ட் தெர் அசென்ட்ஸ் என்ற புதினம் பென் ஓக்லாண்ட்/ ஜோசபின் மைல்ஸ் இலக்கிய விருதை வென்றது.[21] 1998 ஆம் ஆண்டு “யோ” என்ற இவரது புத்தகம் அமெரிக்க நூலக சங்கத்தால் குறிப்பிடத்தக்க புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2004, 2010 ஆகிய ஆண்டுகளில் அவரது படைப்புகளுக்கான பெல்பரே விருதை பெற்றுக் கொண்டார்.[22][23]2002 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான ஹிஸ்பானிக் ஹிரிடேஜ் விருதை வென்றார்.[24]

மேற்கோள்கள்

தொகு
  1. Palomo, Elvira (2 August 2014). "Julia Álvarez: La literatura ejercita la imaginación y el corazón" (in Spanish). EFE. Washington, D. C.: Listín Diario. http://listin.com.do/entretenimiento/2014/8/2/332096/Julia-Alvarez-La-literatura-ejercita-la-imaginacion-y-el-corazon. பார்த்த நாள்: 2 August 2014. 
  2. Trupe 2011, p. 5.
  3. SiennaMoonfire.com, Sienna Moonfire Designs: “BOOKS: FOR YOUNG READERS OF ALL AGES.” Books for Young Readers of All Ages by Julia Alvarez, www.juliaalvarez.com/young-readers/#footprints.
  4. "Julia Alvarez". Biography (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  5. Dalleo & Machado Saéz 2007, p. 135
  6. Alvarez 1998, p. 116
  7. Sirias 2001, p. 3
  8. 8.0 8.1 Sirias 2001, p. 4
  9. "VITA: author Julia Alvarez". www.juliaalvarez.com. Archived from the original on 2019-10-18. பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  10. "VITA: author Julia Alvarez". www.juliaalvarez.com. Archived from the original on 2019-10-18. பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  11. Dalleo & Machado Saéz 2007, p. 131
  12. Dalleo & Machado Saéz 2007, p. 133
  13. Trupe 2011, p. 5.
  14. Augenbraum & Olmos 2000, p. 114
  15. Sirias 2001, p. 17
  16. Day 2003, p. 45
  17. Day 2003, p. 44
  18. "Julia alvarez". www.bookreporter.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  19. "Postcolonial Studies – Since 1996, Deepika Bahri has created and maintained content for Postcolonial Studies @ Emory with her students. In 2011, she won a Mellon grant from Emory's Digital Scholarship Commons (DiSC) to redesign the site in collaboration with the DiSC staff" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  20. "F Scott Fitzgerald" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  21. "Postcolonial Studies – Since 1996, Deepika Bahri has created and maintained content for Postcolonial Studies @ Emory with her students. In 2011, she won a Mellon grant from Emory's Digital Scholarship Commons (DiSC) to redesign the site in collaboration with the DiSC staff" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  22. admin (1999-11-30). "The Pura Belpré Award winners, 1996-present". Association for Library Service to Children (ALSC) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  23. admin (1999-11-30). "2010 author award winners". Association for Library Service to Children (ALSC) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  24. "Hispanic Heritage Blog". Hispanic Heritage Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_அல்வாரெஸ்&oldid=3573214" இலிருந்து மீள்விக்கப்பட்டது