ஜூலியா எப். நைட்
அமெரிக்க கணிதவியலாளர்
ஜூலியா ஃப்ராண்ட்ஸன் நைட் (Julia Frandsen Knight ) என்பவர் ஒரு அமெரிக்க கணிதவியலாளர் ஆவார். இவர் மாதிரிக் கோட்பாடு மற்றும் கணக்கீட்டுக் கோட்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.[1] இவர் சார்லஸ் எல். ஹூக்கிங் கணித பேராசிரியராக நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதுடன் கணிதத்தில் பட்டப்படிப்பு திட்டத்தின் இயக்குனராகயும் பணியாற்றினார்.[2]
இவர் நைட் யூட்டா மாநில பல்கலைகழகத்தில் இளநிலைப் பட்டம் படித்து, 1964 இல் பட்டம் பெற்றார், மேலும் அவர் ராபர்ட் லாசன் வீட் அவர்களின் மேற்பார்வையில் 1972 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][3]
2012 இல் அவர் அமெரிக்க கணிதக் குழுமத்தில் ஒருவரானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Faculty profile பரணிடப்பட்டது 2017-09-28 at the வந்தவழி இயந்திரம், Notre Dame, retrieved 2013-10-16.
- ↑ Julia Knight – Named professorships and directorships at Notre Dame பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம், retrieved 2013-10-16.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் ஜூலியா எப். நைட்
- ↑ List of AMS Fellows, retrieved 2013-10-16.