ஜெகதளா

(ஜெகதலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெகதலா, (Jegathala) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.

அமைவிடம் தொகு

மேற்கு தொடர்ச்சி மலையில் 2000 மீட்டர் உயரத்தில் அமைந்த ஜெகதலா பேரூராட்சி, உதகமண்டலத்திருந்து 12 கிமீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும், குன்னூரிலிருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ளது.

ஜெகதலா பேரூராட்சி, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. இதனருகே உள்ள அரவங்காட்டில் இந்திய அரசிற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் கிழக்கில் தும்மனட்டி ஊராட்சியும், மேற்கில் உபதலை ஊராட்சியும், வடக்கில் நடுஹட்டி ஊராட்சியும் மற்றும் தெற்கில் கேத்தி பேரூராட்சியும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

17.88 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4099 வீடுகளும், 14,383 மக்கள்தொகையும் கொண்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. ஜெகதளா பேரூராட்சியின் இணையதளம்
  2. Jagathala Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதளா&oldid=3589986" இலிருந்து மீள்விக்கப்பட்டது