ஜெகன்நாதர் கோயில், சியால்கோட்
ஜெகன்நாதர் கோயில் (உருது: جگن ناتھ مندر) என்பது பாக்கிஸ்தானின், சியால்கோட் நகரத்தில் அமைந்த இந்து கடவுளான ஜெகன்நாதருக்குப் அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
ஜெகன்நாதர் கோயில் جگن ناتھ مندر | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | பாக்கித்தான் |
மாநிலம்: | பஞ்சாப் |
மாவட்டம்: | சியால்கோட் |
ஆள்கூறுகள்: | 32°29′50″N 74°32′10″E / 32.49722°N 74.53611°E |
கோயில் தகவல்கள் | |
உற்சவர்: | ஜெகன்நாதர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து கட்டிடக் கலை |
இணையதளம்: | http://www.pakistanhinducouncil.org/ |
கட்டுமானம்
தொகு2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரிஸ் சாலைப் பகுதியில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் சௌத்ரி பெர்விஸ் எலாஹியின் 200,000 ரூபாய் சிறப்பு மானியத்துடன் கட்டப்பட்டது.[1] மாவட்ட சமாதானக் குழுவின் உறுப்பினரான ஹக்கீம் ரத்தன் லால் பகத் மற்றும் சியால்கோட் இந்து சமூகத்தின் பங்கேற்பின் காரணமாக சிறுபான்மை எம்பிஏ ஜோசப் ஹகிம் டின் மூலமாக சிறப்பு மானியம் வழங்கப்பட்டது.