கட்டாஸ் ராஜ் கோயில்

கட்டாஸ் ராஜ் கோயில்கள் (பஞ்சாபி, உருது: کٹاس راج مندر) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்த சக்வால் மாவட்டத்தின் கட்டாஸ் எனும் கிராமத்தில் அமைந்த சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட கோயில்களின் வளாகம் ஆகும்.

கட்டாஸ் ராஜ் கோயில்கள்
கட்டாஸ் ராஜ் கோயில் வளாகம்
கட்டாஸ் ராஜ் கோயில்கள் is located in பாக்கித்தான்
கட்டாஸ் ராஜ் கோயில்கள்
கட்டாஸ் ராஜ் கோயில்கள்
பாகிஸ்தானின் சக்வால் மாவட்டத்தில் கட்டாஸ் ராஜ் கோயில் வளாகம்
ஆள்கூறுகள்:32°43′26″N 72°57′7″E / 32.72389°N 72.95194°E / 32.72389; 72.95194
அமைவிடம்
நாடு:பாகிஸ்தான்
மாநிலம்:பஞ்சாப் மாகாணம்
மாவட்டம்:சக்வால் மாவட்டம்
அமைவு:கட்டாஸ் ராஜ்
கோயில் தகவல்கள்

தொன்ம வரலாறு தொகு

இந்து தொன்மவியலின் படி, பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது கிருஷ்ணரின் ஆலோசனையின்படி இந்த சிவலிங்கக் கோயில்களை கட்டியதாக அறியமுடிகிறது.

இக்கோயில்களை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்க பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இக்கோயில் வளாகத்தை புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இக்கோயிலின் திருக்குளத்தில் உள்ள நீர், அருகில் உள்ள தொழிற்சாலகளின் பெருக்கத்தினால் வற்றியுள்ளது.[1] சனவரி 2017-இல் இக்கோயில் கோபுரங்களுக்கு புதிய விமானங்களை நிறுவத் தொடங்கியுள்ளது.[2]

 
கட்டாஸ்ராஜ் கோயில்

கட்டாஸ்ராஜ் கோயில் வளாகம் பாண்டவர்களுடன் தொடர்புடையது. பாண்டவர்கள் பன்னிரெண்டு ஆண்டு வன வாச காலத்தில், நான்கு ஆண்டுகள் இப்பகுதியில் தங்கியிருந்ததாக மகாபாரத காவியம் கூறுகிறது. இக்கோயில் குளத்து நீரை அருந்த வந்த பீமன், அருச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன், இக்குளத்தை காவல் காத்துக் கொண்டிருந்த ஒரு யட்சனின் கேள்விகளுக்கு பதில் கூறாது, இக்குளத்து நீரை அருந்தியதால் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். பின்னர் தருமன் இக்குளத்திற்கு வந்து யட்சனின் கேள்விகளுக்கு பதில் கூறி, தனது உடன் பிறப்புகளை உயிர்த்தெழச் செய்து, இக்குளத்து நீரை அருந்திச் சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.

அமைவிடம் தொகு

 
கட்டாஸ்ராஜ் கோயில் வளாகம், சக்வால் மாவட்டம், பாகிஸ்தான்

கட்டாஸ்ராஜ் கோயில் வளாகம் சக்வால் நகரத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பிறகோயில்கள் தொகு

 
இராமர் கோயில் கூரை வேலைப்பாடுகள்

கட்டாஸ்ராஜ் கோயில் வளாகத்தில் சிவலிங்கம் அல்லாது, இராமர் கோயில், சிவன் கோயில், அனுமார் கோயில்கள் உள்ளது. இக்கோயிலுக்கு முந்தைய இந்தியத் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி 2015-இல் வருகை புரிந்தார்.[3]

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Katas Raj Temples
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டாஸ்_ராஜ்_கோயில்&oldid=3275791" இலிருந்து மீள்விக்கப்பட்டது