ஜெசிக்கா யூட்
ஜெசிக்கா யூட் (Jessica Judes; பிறப்பு: 08.12.1999), யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளம் பாடகி ஆவார்[1]. தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்றார். இவரது தந்தை யூட் சூசைதாசன். சென்னையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இளையர் - பருவம் 4 இன் இறுதிச் சுற்று பாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவர். தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கிலோ தங்கத்தைத் தமிழ் நாட்டிலுள்ள ஆதரவற்ற சிறுவர்களுக்கும், வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அன்பளிப்பாக தருவதாக அறிவித்து உள்ளார்[2]. ஜெசிக்கா, இறுதிச் சுற்றில் 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலை, 'தோல்வி நிலையென நினைத்து' என்ற பாடலுடன் இணைத்துப் பாடினார்.
இது போன்ற போட்டியில் வெற்றி பெறுவதை விட எங்கள் மக்களின் வலிகளைப் பதிவு செய்ததையே வெற்றியாக கருதுகிறேன் என்றார் ஜெசிக்கா[3].
ஞானம் எழுதி அக்னி கணேஸ் இசையமைத்துள்ள சரவணப்பொய்கை என்ற பாடலை சென்னையில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடியுள்ளதன் மூலம் தொழில்முறைப் பாடகியாகவும் ஜெசிகா யூட் உருவாகியுள்ளார் [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "தங்கத்தை அநாதரவான சிறுவர்களுக்கு வழங்கிய ஈழத் தழிழ் சிறுமி ஜெசிக்கா". ஐபிசி தமிழ். பிப்ரவரி 21, 2015. http://www.ibctamil.co.uk/news/210215_SL_0003/59/article.aspx. பார்த்த நாள்: 1 மார்ச் 2015.
- ↑ "ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4 - தமிழக, ஈழ ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கத்தை தாரைவார்த்து கொடுத்த ஜெசிக்கா!". ஒன்இந்தியா.காம். பிப்ரவரி 21, 2015. http://tamil.oneindia.com/news/tamilnadu/jessica-gifts-her-prize-tamil-children-sri-lanka-221447.html. பார்த்த நாள்: 1 மார்ச் 2015.
- ↑ "ஜெசிக்கா சூப்பர் சிங்கர் மட்டுமல்ல... நெகிழ்ந்து நிற்கும் ஈழத்தமிழர்கள்!". சினிமா விகடன். 2015 இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227023929/http://cinema.vikatan.com/articles/news/8/8944. பார்த்த நாள்: 1 மார்ச் 2015.
- ↑ "ஜெசிக்கா பின்னணிப்பாடகியாக வருகின்றார்". Archived from the original on 2015-03-11. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)