ஜெனின் அனெஸ்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஜெனின் அனெஸ் சாவேஸ் (Jeanine Áñez[1], பிறப்பு: 13 ஆகஸ்ட் 1967)[2] என்பவர் பொலிவிய அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் பொலிவியாவின் அதிபராக நவம்பர் 2019 முதல் நவம்பர் 2020 வரை பொறுப்பில் இருந்தார். ஏவோ மொராலெஸ் அரசாங்கத்தின் பொறுப்பு விலகலையடுத்து இவர் அதிபராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர் பெனி தொகுதியின் செனட் உறுப்பினராக இருந்தார். இவரது அரசியல் நிலைப்பாட்டை வலதுசாரி[3][4] மற்றும் மொரலஸ் எதிர்ப்பு என்று ஊடகவியலாளர்கள் விவரிக்கின்றனர்.[5][6]
ஜெனின் அனெஸ் | |
---|---|
2016இல் அனெஸ் | |
66ஆவது பொலிவிய அதிபர் | |
பதவியில் 12 நவம்பர் 2019 – 8 நவம்பர் 2020 | |
முன்னையவர் | ஏவோ மொராலெஸ் |
பின்னவர் | லூயிஸ் ஆர்ஸ் |
செலக் அமைப்பின் இடைக்காலத் தலைவர் | |
பதவியில் 12 நவம்பர் 2019 – 8 சனவரி 2020 | |
முன்னையவர் | ஏவோ மொராலெஸ் |
பின்னவர் | அன்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஒப்ரடோர் |
பெனி தொகுதியின் செனட் உறுப்பினர் | |
பதவியில் 22 ஜனவரி 2010 – 12 நவம்பர் 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜெனின் அனெஸ் சாவேஸ் 13 ஆகத்து 1967 டிரினிடாட், பெனி, பொலிவியா |
அரசியல் கட்சி | சுயேச்சை (2013க்கு முன்பு; 2020–தற்போது வரை)
|
பிற அரசியல் தொடர்புகள் | Social Democratic Movement (2013–2020)
|
துணைவர் | ஹெக்டர் ஹெர்னான்டோ ஹின்கேம்பை கார்வாஜல் |
கையெழுத்து | |
கல்வி
தொகுஇவர் சட்டம் மற்றும் சட்ட அறிவியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றுள்ளார்.[5]
தொழில்
தொகுஅனெஸ், 1991 இல் பவழக்குரைஞர் தேர்வில் தேர்ச்சியடைந்தார்.[5] அதற்கு முன்னர் ஒரு ஊடக தொகுப்பாளராகவும்[7] டோட்டல்விஷன் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார்.[2]
அரசியலமைப்புக் குழு (2006-2008)
தொகு2006 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையில், புதிய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்குவதற்கான குழுவில் அனெஸ் உறுப்பினராகப் பணியாற்றினார். நாட்டின் அமைப்பு மற்றும் கட்டமைப்பை ஆணையிடுவதற்கான அரசியலமைப்புக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், நீதித்துறையின் ஒரு பகுதியாகவும் பணியாற்றினார்.[5]
செனட் உறுப்பினர் (2010–2019)
தொகு2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், இவர் பொலிவியா-தேசிய ஒருங்கிணைப்புக்கான திட்ட முன்னேற்றக் (பிபிபி - சிஎன்) கட்சியின் சார்பில் பெனி துறையின் சார்பு உறுப்பினராக போட்டியிட்டு வென்று, செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[5] இவர் 2012இல் பெனி துறையின் ஆளுநர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[8]
2019ஆம் ஆண்டில், இவர் செனட் அவையின் இரண்டாவது துணைத்தலைவராக இருந்தார்.[2] எனவே அதிபர் பொறுப்பேற்பு வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.[5] 2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னர், தெளிவற்ற முறைகள் மற்றும் சீரற்ற முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து அனெஸ் கேள்வி எழுப்பினார்.[9]
பொலிவியாவின் அதிபர் (2019 - 2020)
தொகுநவம்பர் 10, 2019 அன்று ஏவோ மொரலெஸ் அரசாங்கம் பொறுப்பு விலகியதைத் தொடர்ந்து, அதிபர் பொறுப்பேற்பு வரிசையில், பொலிவியாவின் அதிபர் பொறுப்பை ஏற்கும் இடத்தில் அனெஸ் இருந்தார். அதன்படி இவர் 2019 நவம்பர் 11ஆம் நாள் செனட் அவையைக் கூட்டி, முந்தைய நாளில் நடந்த பொறுப்பு விலகல்களை முறையாக ஏற்றுக்கொண்ட பிறகு, அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.[10][11] இவர், மொரலெஸ் பொறுப்பு விலகிய நாளிலிருந்து மறுநாள் வரை பெனியில் இருந்ததால், அவசர கூட்டத்தை நடத்த இயலவில்லை, ஏனெனில் அங்கிருந்து தலைநகர் லா பாஸிற்கு ஞாயிற்றுக்கிழமையில் விமானங்கள் எதுவுமில்லை.[5]
நவம்பர் 11 ஆம் தேதி, லாஸ் பாஸ் நகரின் எல் ஆல்டோ விமான நிலையத்திற்கு வந்த அனெஸ் ராணுவ ஹெலிகாப்டரில் அருகிலுள்ள விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் பொலிவிய செனட்டிற்கு பயணம் செய்தார். அங்கு, மொரலெஸின் பொறுப்பு விலகலை முறையாக ஏற்றுக்கொள்வதற்காக அவையின் சிறப்பு அமர்வு 2019 நவம்பர் 12 அன்று கூட்டப்படும் என்று கூறினார்.[12]
நவம்பர் 12இல் பன்னாட்டு சட்டப்பேரவை முன்பு, பொலிவிய அரசியலமைப்பின் பிரிவு 169இன் கீழ் அனெஸ், தன்னை சென்ட் அவையின் தலைவராகவும், பொலிவியாவின் இடைக்கால அதிபராகவும் அறிவித்தார்.[13] சட்டப்பேரவையில் மூன்றில் ஒரு பங்கு இருந்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு வாக்குகளை அனெஸ் பெற்றார். பின்னர். இந்த நடவடிக்கை பன்னாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.[14] இந்த அமர்வில் மொராலெஸின் சோசலிசத்திற்கான இயக்கம் (MAS) கட்சியைச் சேர்ந்த அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை, சட்டப்பேரவையில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள அக்கட்சி, சிறப்பு அமர்வை "சட்டவிரோதமானது" என்று கூறியது.[15] சி.என்.என் செய்தியின்படி, MAS உறுப்பினர்கள் இல்லாததால் சட்டப்பூர்வமாக செயல் அதிபரை நியமிக்க தேவையான சட்டப்பேரவை பலம் இல்லை. செனட்டின் முந்தைய தலைவர் அட்ரியானா சால்வதியேரா, நவம்பர் 10, 2019 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மொரலெஸ் மற்றும் துணை அதிபர் அல்வாரோ கார்சியா லினெரா ஆகிய இருவரும் காவல்துறை, ராணுவம் மற்றும் முன்னாள் அரசியல் கூட்டாளிகளின் ஆதரவை இழந்த பின்னர் பதவியில் இருந்து விலகினர்;[16] அதனைத் தொடர்ந்து பொலிவிய செனட் தலைவரான அட்ரியானா சால்வதியேரா அரியாசா பொறுப்பு விலகினார், அவர் அதிபர் பொறுப்பேற்க வேண்டிய அரசியலமைப்பு வரிசையில் இருந்தார் [17] அவரது பதவி விலகல் முன்வைக்கப்பட்டிருந்தாலும், நவம்பர் 13 அன்று சால்வதியெரா அதை செனட் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் வாதிட்டார், எனவே, சால்வடீரா செனட்டின் தலைவராக நீடித்தார்.
பதவியேற்ற பின்னர், கனடா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் அரசாங்கங்கள் பொலிவியாவின் செயல் அதிபராக அனெஸை ஏற்றுக்கொண்டன.[18]
நவம்பர் 14, 2019 அன்று, செனட் அவை, சால்வதியேராவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டு, சோசலிசத்திற்கான இயக்கத்தைச் சேர்ந்த மெனிகா ஈவா கோபாவை புதிய அவைத்தலைவராக தேர்ந்தெடுத்தது.[19] பிறகு அக்கட்சி, நவம்பர் 20இல் அனெஸின் அதிபர் பொறுப்பேற்பை அரசியலமைப்பின் படி ஏற்றுக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டது.[20]
"மக்களாட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான" உறுதிமொழியுடன், அனெஸ் தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். அவரது மூத்த அமைச்சர்களில் சாண்டா குரூஸ் டெ லா சியேறாவின் முக்கிய வணிகர்கள் இடம்பெற்றிருந்தனர். அவரது அமைச்சரவையின் முதல் பதினொரு உறுப்பினர்களில் பொலிவியாவின் பழங்குடி மக்களின் உறுப்பினர்கள் இடம்பெறவிலை, தி கார்டியன் "நாட்டின் ஆழ்ந்த அரசியல் மற்றும் இனப்பிளவுகளை விரும்பவில்லை" என்பதற்கான அறிகுறியாக விவரித்தது. பிறகு அமைச்சரவையின் மீதமுள்ள பொறுப்புகளில் இரண்டு பழங்குடி உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.[21][22][23] 2006ஆம் ஆண்டு மொராலெஸின் முதல் அமைச்சரவையில் பெரும்பான்மையாக பழங்குடியினர் இடம்பெற்றிருந்தாலும் அவரது பிந்தைய அமைச்சரவைகளில் அளவு குறையத் தொடங்கி, இறுதியாக 2017இல் 3 உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[23][24]
டிசம்பர் 5ஆம் தேதி, அடுத்த அதிபர் தேர்தலில் அவர் ஒரு வேட்பாளராகவோ அல்லது எந்தவொரு வேட்பாளரை ஆதரிக்கவோ மாட்டேன் என்று அனெஸ் கூறினார்.[25] இதை மேலும் ஜனவரி 15, 2020 அன்று அதிபர்-அமைச்சர் யெர்கோ நீஸ் மீண்டும் வலியுறுத்தினார், அவர் "[அனெஸ்] ஒரு வேட்பாளராக இருக்க மாட்டார் என்று பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார், எனவே அவர் ஒரு வேட்பாளராக இருக்க மாட்டார், இது அமைதி, மாற்றம் மற்றும் நிர்வாகத்தின் அரசாங்கம், ஏனெனில் நீங்கள் அரசு எந்திரத்தை நிறுத்த இயலாது." என்று கூறினார் [26]
2009ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பொலிவியப் பன்னாட்டு மாநிலம் நிறுவப்பட்டதை கொண்டாடும் விதமாக மொரலஸ் உருவாக்கிய ஜனவரி 22 பொது விடுமுறையை 2020 ஜனவரி 8ஆம் தேதி ஏற்றுக்கொள்ள அனெஸ் அரசாங்கம் முடிவெடுத்தது. இந்நாளில், பொலிவியாவின் அதிபர் பொதுவாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார், ஆனால் மொரலஸ் மற்றும் அவரது கட்சி உடனான வலுவான அரசியல் எதிர்ப்பு நிலை காரணமாக அனெஸ் உரையாற்றுவாரா என்ற சந்தேகம் வெளிப்பட்டது. இருப்பினும், ஒரு பொது அறிக்கையில், அதிபர் பொறுப்பிற்கான அமைச்சர் யெர்கோ நீஸ், "ஜனவரி 22 அதிபரின் ஆணைப்படி ஒரு விடுமுறை நாள், நாங்கள் அந்த ஆணையை மதிக்க்கின்றோம், இதன் தூண்களான மாற்றம், சமாதானம் மற்றும் மேலாண்மை" என்று கூறினார்.[27]
முந்தைய அறிக்கைகளில் மறுத்திருந்தாலும், அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அனெஸ் 24 ஜனவரி 2020 அன்று அறிவித்தார்.[28] பொலிவிய செய்தித்தாள் லாஸ் டைம்போஸில் ஒரு கணக்கெடுப்பை சுட்டிக்காட்டியது, அதில் பதிலளித்தவர்களில் 43% பேர் இடைக்கால அதிபராக அனெஸ் ஒரு "நல்ல அல்லது மிகச் சிறந்த" வேலையைச் செய்ததாகக் கருதினாலும் (27% மோசமான அல்லது மோசமானவற்றுடன் ஒப்பிடும்போது), பதிலளித்தவர்களில் 24% மட்டுமே வரவிருக்கும் தேர்தலில் அவர் ஒரு வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நம்பினர். அதே வாக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 63% பேர் "இடைக்கால அதிபராக, ஜெனின் அனெஸ் தேர்தலை நடத்த வேண்டும், அதிபர் வேட்பாளராக மாறுவதற்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது" என்ற கூற்றுடன் உடன்பட்டார்.[29] முன்னாள் அதிபர் வேட்பாளராகவும், மத்திய வலதுசாரி தேசிய ஒற்றுமை முன்னணி கட்சியின் தலைவருமான சாமுவேல் டோரியா மதீனா துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[30] . அவர்கள் இருவரும் புதிதாக அமைக்கப்பட்ட ஜுண்டோஸ் என்ற கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.[31]
அரசியல் கருத்துக்கள்
தொகுஅனெஸ் ஒரு வலதுசாரி[32][33] மத பழமைவாதி [34][35] என்று விவரிக்கப்படுகிறார், மேலும் இவர் ஏவோ மொரலெஸின் எதிர்ப்பாளர் ஆவார்.[36]
2017 ஆம் ஆண்டில், இவரது மருமகன் பிரேசிலில் 480 கிலோ போதைப்பொருள் கடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டார். இதை சுட்டிக்காட்டி அப்போதைய மொராலெஸ் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரின் கார்லோஸ் ரோமெரோ, செனட் அவையில் அனெஸை விமர்சித்தார். இந்த உறவினர் மூலம் அனெஸ், செனட் அவைக்கு களங்கம் ஏற்பட்டுத்திவிட்டதாக கூறினார்; அதற்கு பதிலளித்த அனெஸ், தனது மருமகனின் நடவடிக்கைகளுக்கு தாம் பொறுப்பல்ல என்று கூறினார். மேலும் அரசாங்கத்தில் ரொமேரோவின் நிலைப்பாட்டை விமர்சித்ததுடன் "போதைப்பொருள் கடத்தலின் வளர்ச்சிக்கு அவரே பொறுப்பு" என்றும் கூறினார். அதேநேரம், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு பொலிவியர், மொராலெஸின் சோசலிசத்துக்கான இயக்கக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது பின்னர் தெரியவந்தது.[37]
சிறைத்துறை சேவைகள்
தொகு2019ஆம் ஆண்டின் முற்பகுதியில், பெனி சிறையில் கற்பழிப்பு மற்றும் வன்முறைக்கு ஆளானவர்களிடம் காவலர்கள் தரப்பில் பேசிய பின்னர், சிறை வார்டன்கள் குறித்து விசாரணை நடத்த அரசாங்கத்திடம் அனெஸ் கோரிக்கை விடுத்தார்.[38]
சமயம்
தொகுஇவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராவார். இடைக்கால அதிபராக தன்னை அறிவித்தபோது தனது கையில் ஒரு பெரிய விவிலியத்தை வைத்திருந்தார்; இச்செயல், கத்தோலிக்க திருச்சபையுடன் அவநம்பிக்கையான வரலாற்றைக் கொண்டவரும் பழங்குடியின மத மரபுகளுக்கான ஆதரவை வெளிப்படுத்தியவருமான மொரலெஸ்க்கு விடுக்கப்பட்ட "வெளிப்படையான கண்டனம்" என்று தி கார்டியன் விவரித்தது.[39][40] மொராலேஸ் அரசாங்கத்தின் கீழ், ஒரு வாக்கெடுப்பு மூலம் ஒரு புதிய அரசியலமைப்புஅங்கீகரிக்கப்பட்டது, இது கிறிஸ்தவத்திற்கு சமமான அந்தஸ்தை பிற மதங்களுக்கு அளித்தது.[41] 2018ஆம் ஆண்டு நடந்த ஒரு கணக்கெடுப்பில் 70% பொலிவியர்கள் கத்தோலிக்கர்களாகவும், 17.2% பேர் ஏதோவொரு வடிவத்தின் புராட்டஸ்டன்ட்டாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 9.3% மத சார்பற்றவர்கள்.[42] அரசியல் ஆய்வாளர் கார்லோஸ் கோர்டோ அனெஸ் குறித்து கூறும்போது, "அவர் ஒரு விசுவாசி, ஆனால் அவர் தனது மதத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தவில்லை, அதை வெளிப்படுத்துகிறார், அதைப் பின்பற்றி வாழ்கிறார்." என்றார்.[43]
வெனிசுலா
தொகுஅனெஸ் பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு, 2019 வெனிசுலா அதிபர் நெருக்கடியில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். வெனிசுலாவின் செயல் தலைவராக ஜுவான் குவய்தோவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் [44] அனெஸ் அரசாங்கம் வெனிசுலாவின் மதுரோ அரசாங்கத்துடனான அரச உறவுகளைத் துண்டித்ததுடன் அதன் தூதர்கள் நாட்டை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் அளித்தது.[45][46] பொலிவியாவிற்கான புதிய வெனிசுலா தூதரை நியமிக்க குவய்தோவிடம் அனெஸ் அழைப்பு விடுத்தார்,
ஒரு மாதத்திற்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் வெனிசுலா நெருக்கடிக்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட பிராந்திய முகாமான லிமா குழுமத்தில் பொலிவியா இணைவதாக அனெஸின் அரசாங்கம் அறிவித்தது. இது தொடர்பாக பொலிவிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வெனிசுலாவின் நெருக்கடிக்கு அமைதியான, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ரீதியிலான தீர்வுக்குப் பங்களிக்க வேண்டும் என்று பொலிவிய அரசு நம்புகிறது, இது வெனிசுலா மக்களால் வழிநடத்தப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தது [47] அதே மாதத்தில், அனெஸின் அரசாங்கம். 200 வெனிசுலா மக்களுக்கு "அரசியல் ஒழுங்கின் காரணங்களுக்காக, நிக்கோலஸ் மடுரோ அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட அரசியல் துன்புறுத்தல்களுக்காக தங்கள் நாட்டை விட்டு வெளியேறிய 200 பேருக்கு" அடைக்கலம் தருவதாக அறிவித்தது.[48]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு
தொகுபிப்ரவரி 6, 2020 அன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக சாண்டா குரூஸில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள பொலிவியா மக்களை அழைத்தார், இது பொலிவிய பத்திரிகைகளால் அதிகம் பேசப்பட்டது.[49][50]
அனைத்துலக பெண்கள் நாளான, மார்ச் 8, 2020 அன்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் நலனுக்காக 100 மில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்தார், பொலிவியாவின் பெண் மற்றும் படுகொலைக்கு எதிரான போராட்ட ஆண்டாக 2020ஐ அறிவித்தார், "பெண்களைக் கொல்பவர்கள், வன்முறை செய்பவர்கள், அவமானப்படுத்துபவர்கள் மற்றும் கற்பழிப்பாளர்கள் ஆகியவர்களுக்கு நான் மிக மோசமான செய்தியாக உள்ளேன். ஏனென்றால் இந்த ஆக்கிரமிப்பாளர்களை ஒழிப்பதில் நான் சோர்வடைய மாட்டேன்" என்றார்.[51][52] .
பழங்குடியினர் குறித்த பார்வை
தொகுபொலிவியாவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 41% தங்களைப் பழங்குடியினராக அடையாளப்படுத்துகின்றனர் அவர்கள் பெரும்பாலும் பொலிவியாவில் தங்கள் சமூக நிலை காரணமாக வறுமை மற்றும் இன பின்னணி தொடர்பான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்,[53] பொலிவியாவின் முதல் பழங்குடியின அதிபரான ஏவோ மொராலெஸின் 2006 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பழங்குடி மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான பாகுபாடு அதிகரித்தது. இதனால் பொலிவியாவின் அரசியல் போக்கு இடது-வலது அரசியலில் இருந்து பழங்குடி-நகர்ப்புற அரசியலுக்கு மாறியது.[54]
அதிபராவதற்கு முன்பு, தனது சமூக ஊடகங்களில் பழங்குடி மக்கள் தொடர்பாக அனெஸ் பதிவிட்ட கருத்துக்களை "இனவாதம்" என்று கார்டியன் பத்திரிக்கையும் "பழங்குடிக்கு எதிரானது" என்று மூலம் பிரான்ஸ் பத்திரிக்கை பிரஸ், 'கோபத்தைத் தூண்டுவது" என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் விவரித்தன. அனெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், அய்மாரா மக்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை "சாத்தானியம்" என்று அழைத்ததோடு, "கடவுளை மாற்ற யாராலும் முடியாது" என்றும், பழங்குடியின மக்கள் காலணிகளை அணிவதில் உண்மையானவர்கள் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் அவர் "நான் பதிவிடாத இரண்டு ட்வீட்களைப் பார்த்தேன், நாங்கள் ஏற்கனவே கூறியது பொய்யானது" என்றும் அவர் ஒருபோதும் "தவறான எண்ணம் கொண்ட" கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.[53] அவரது அதிபர் பொறுப்பின் தொடக்க நாட்களில், மொரலெஸை வெளிப்படையாக விமர்சித்து வந்த மரியா கலிண்டோ, அனெஸின் அரசாங்கத்தை "பழங்குடி எதிர்ப்பு" என்று விவரித்தார். ஆண்டியன் தகவல் வலையமைப்பின் இயக்குனர் கேத்ரின் லெடெபர், "அனெஸின் எழுச்சியைத் தொடர்ந்து இனவெறி மற்றும் பாகுபாடு குறித்த பிரச்சினையை எழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
அதிபரான பிறகு, பழங்குடி மீதான அனெஸின் பார்வை மாறத்தொடங்கியது. அவர் பொலிவியப் பழங்குடி சமூகங்களின் அடையாளக் கொடியான விபாலாவை, மொரலஸின் அரசாங்கத்தில் இருந்தது போலவே பொலிவியாவின் இணை அதிகாரப்பூர்வக் கொடியாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும், பொலிவியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் முன்னிலைப்படுத்தும் அடிப்படை பணிக்காக தாம் உறுதிபூண்டுள்ளதாக அறிவித்தார்.[55] அனெஸின் அரசாங்கத்தில், விப்பாலாவைத் தவிர, பட்டுஜூவும் நாட்டு அடையாளங்களில் முக்கியமாகக் காட்டப்பட்டது.[56] பட்டூஜூ என்பது பொலிவியாவின் கிழக்குப் பழங்குடி மக்களின் அடையாளமாகவும், பொலிவியாவின் மிகப்பெரிய நகரமான சாண்ட்டா குரூஸின் அடையாளமாகவும் உள்ளது. மேலும் இக்கொடி, டிப்னிஸ் போராட்டங்களின் போது மொரலெஸ்சின் பழங்குடி எதிர்ப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.[53][57] நவம்பர் 26, 2019 அன்று, பழங்குடியின மேம்பாட்டு நிதியத்தின் இயக்குநராக ரஃபேல் குயிஸ்பே பொறுப்பேற்ற போது பழங்குடியின சமூகத்தின் சார்பாளர்களால் பரிசளிக்கப்பட்ட ஒரு சிவப்பு போஞ்சோவை (சமூகத் தலைவர்கள் அணியும் ஒரு பாரம்பரிய ஏண்டியன் ஆடை) அனெஸ் அணிந்திருந்தார்.[58]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகொலம்பிய கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த கொலம்பிய அரசியல்வாதியான ஹெக்டர் ஹெர்னாண்டோ ஹின்காபிக் கார்வாஜல் என்பவரை அனெஸ் திருமணம் செய்து கொண்டார்.[5][59]
மேற்கோள்கள்
தொகு- ↑ Entrevista Jeanine Añez Chavez (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 11 November 2019
- ↑ 2.0 2.1 2.2 "Jeanine Áñez Chávez". Cámara de Senadores (in ஸ்பானிஷ்). 16 October 2015. Archived from the original on 11 November 2019. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ Collyns, Dan (14 November 2019). "Bolivia president's initial indigenous-free cabinet heightens polarization". The Guardian.
- ↑ "Jeanine Anez declares herself Bolivia interim president". Al Jazeera. 12 November 2019.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 "Bolivia: quién es Jeanine Añez Chávez, la mujer que puede quedar al mando de la transición" [Bolivia: who is Jeanine Añez Chávez, the woman who can be in charge of the transition]. El Cronista. 11 November 2019. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ Faiola, Anthony. "After Morales' resignation, a question for Bolivia: Was this the democratic will, or a coup?". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ Tiempo, Casa Editorial El (13 November 2019). "¿Quién es Jeanine Áñez, la nueva presidenta interina de Bolivia?". ElTiempo.com (in ஸ்பானிஷ்). Colombia.
- ↑ Corz, Carlos (1 October 2012). "La senadora Jeanine Añez surge como primera precandidata opositora a la gobernación de Beni; el MSM apunta a una tercera opción". La Razón. Archived from the original on 13 November 2019. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ "Piden informe escrito al TSE por la encuestadora ViaCiencia". Diario Pagina Siete (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ BBC News Mundo (ed.). "Jeanine Añez en proceso de ratificación tras renuncia del Presidente, Vicepresidente, Presidente del Senado y Presidente de la Cámara de Diputados de Bolivia". பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
- ↑ "Après la démission d'Evo Morales, les insoumis dénoncent un "coup d'État"". Le Huffington Post. 11 November 2019.
- ↑ "Evo oficializa su renuncia mientras una opositora se alista para asumir la Presidencia de Bolivia". Primicias (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ "Áñez asume la Presidencia de Bolivia ante vacancia y aplicando la sucesión constitucional" [Áñez assumes the Presidency of Bolivia due to vacancy and applying the constitutional succession]. El Deber (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ "TCP avala sucesión constitucional en la Presidencia" [TCP uphelds constitutional succession in the Presidency]. El Deber (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ Berlinger, Joshua; Valdés, Gustavo. "Bolivian senator declares herself acting president -- but she may be on shaky ground". CNN. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ Ernesto Londoño, Bolivian Leader Evo Morales Steps Down, த நியூயார்க் டைம்ஸ் (10 November 2019).
- ↑ Kay Guerrero & Dakin Andone, Bolivian President Evo Morales steps down following accusations of election fraud, CNN (10 November 2019).
- ↑ "Canada will 'support' Bolivian opposition government". CBC News. 14 November 2019. https://www.cbc.ca/news/politics/bolivia-canada-anez-government-1.5360138.
- ↑ "El Gobierno y el MAS abren espacios de negociación en vías de la pacificación | EL DEBER". www.eldeber.com.bo (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
- ↑ "El MAS reconoce en proyecto de ley la sucesión constitucional en la Presidencia". www.eldia.com.bo/. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
- ↑ "Áñez posesiona cinco nuevos ministros; Yujra besa la wiphala y va por diálogo con El Alto - La Razón". www.la-razon.com. Archived from the original on 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2019.
- ↑ "Añez posesiona a Carlos Huallpa en Minería y a Virginia Patty Torres en Educación - La Razón". www.la-razon.com. Archived from the original on 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2019.
- ↑ 23.0 23.1 "Gabinete tuvo rostros indígenas, pero pocos ministros con poder - Diario Pagina Siete". www.paginasiete.bo (in ஸ்பானிஷ்). Archived from the original on 20 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Morales toma juramento a los 16 ministros que integran el "nuevo Gabinete del pueblo"". El Pais (in ஸ்பானிஷ்). 23 January 2006. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
- ↑ Jeanine Áñez no postulará a la Presidencia de Bolivia, según el Gobierno interino. Publicado el 5 de diciembre de 2019. Consultado el 8 de diciembre de 2019.
- ↑ "Government clarifies that Jeanine Áñez will not be a candidate for the Presidency" (in ஸ்பானிஷ்). Archived from the original on 2020-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
- ↑ "Government ratifies 22 January holiday and Añez considers management address" (in ஸ்பானிஷ்).
- ↑ "Jeanine Áñez confirma candidatura presidencial para las elecciones generales". ATBDigital (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). 24 January 2020. Archived from the original on 22 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
- ↑ "Survey approves of Áñez's term as president, but rejects her candidacy" (in ஸ்பானிஷ்). 26 January 2020.
- ↑ "Bolivia after the ouster of Evo Morales, a leftist strongman". 7 March 2020.
- ↑ "Áñez and Doria Medina seal alliance and become presidential running mates" (in ஸ்பானிஷ்). 31 January 2020. Archived from the original on 29 March 2020. பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
- ↑ "Bolivian Senate head assumes interim presidency; Morales' loyalists object" (in en). 13 November 2019. https://www.reuters.com/article/us-bolivia-election-idUSKBN1XM1NV.
- ↑ "Bolivian senator declares herself interim president, Morales slams 'coup'". France 24 (in ஆங்கிலம்). 13 November 2019. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
- ↑ "Bolivia's new leader, religious conservative Jeanine Añez Chavez, faces daunting challenges". NBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
- ↑ "Bolivia interim leader recognises Guaido as legitimate Venezuelan leader as balance shifts". 14 November 2019. https://www.telegraph.co.uk/news/2019/11/14/bolivia-interim-leader-recognises-guaido-legitimate-venezuelan/.
- ↑ "Bolivia: Senator Jeanine Anez declares herself interim president | DW | 12 November 2019". Deutsche Welle (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ "Narcotráfico: Añez llama "canalla" a Romero y dice que su sobrino es responsable de sus actos". Diario Pagina Siete (in ஸ்பானிஷ்). Archived from the original on 13 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ "Senadora Jeanine Añez pide al Gobierno investigar todas carceletas del Beni". eju.tv (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ "Jeanine Anez: stand-in president vowing to 'pacify' Bolivia". France 24 (in ஆங்கிலம்). 13 November 2019. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ .
- ↑ "Senator Brandishing Giant Bible Takes Over Bolivia Presidency". Bloomberg (in ஆங்கிலம்). 11 November 2019. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ https://www.statista.com/statistics/1066911/religious-affiliation-in-bolivia/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-02. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
- ↑ "Bolivia reconoce a Juan Guaidó como presidente (E) de Venezuela". Albertonews.com (in ஸ்பானிஷ்). 13 November 2019. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
- ↑ "La política internacional de Añez: anunció la salida de Bolivia del Alba, de la Unasur y rompió relaciones con Venezuela". Latinomerica Piensa (in ஸ்பானிஷ்). 15 November 2019.
- ↑ "Boliva's interim government to ask Venezuelan diplomats to leave the country". Reuters. 15 November 2019.
- ↑ Sigal, Lucila (22 December 2019). "Bolivia announces entry into Lima Group to resolve Venezuelan crisis". Reuters. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
- ↑ "Bolivia will shelter 200 Venezuelans who fled for "political persecution"" (in Spanish). https://www.dw.com/es/bolivia-dar%C3%A1-refugio-a-200-venezolanos-que-huyeron-por-persecuci%C3%B3n-pol%C3%ADtica/a-51665845.
- ↑ "Feminicides in Bolivia: Stolen Dreams" (in ஸ்பானிஷ்). 8 March 2020. Archived from the original on 2 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Añez asks to denounce violence against women and children in a march" (in ஸ்பானிஷ்). 6 February 2020.
- ↑ "Áñez: 'I will give everything to end gender violence'" (in ஸ்பானிஷ்). 8 March 2020. Archived from the original on 29 March 2020. பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
- ↑ "Violence: Añez launches plan with an investment of $ us 100 million" (in ஸ்பானிஷ்). 8 March 2020.
- ↑ 53.0 53.1 53.2 "Could Bolivia's current politics be fueling indigenous discrimination?". PBS NewsHour (in அமெரிக்க ஆங்கிலம்). 25 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
- ↑ Faguet, Jean-Paul (June 2019). "Revolution from Below: Cleavage Displacement and the Collapse of Elite Politics in Bolivia". Politics & Society 47 (2): 205-250. "Politics shifted from a conventional left-right axis of competition, unsuited to Bolivian society, to an ethnic/rural–cosmopolitan/urban axis closely aligned with its major social cleavage.".
- ↑ "Jeanine Añez instruye que junto a la sagrada tricolor se mantenga la wiphala". eju.tv. 12 November 2019.
- ↑ https://www.eldeber.com.bo/156526_colocan-la-bandera-de-la-flor-del-patuju-junto-a-la-wiphala-y-la-tricolor-en-palacio-quemado
- ↑ https://radiopatuju.blogspot.com/2012/05/imagenes-por-el-tipnis-no.html
- ↑ https://www.lostiempos.com/actualidad/pais/20191126/anez-viste-poncho-andino-obsequiado-comunarios
- ↑ "RESULTADO CORPORACIÓN". Caracol Radio. 26 October 2019. Archived from the original on 4 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)