ஜென்னா பிஷ்ஷர்
ரெஜினா மரி "ஜென்னா" பிஷ்ஷர் (பிறப்பு மார்ச் 7, 1974)[1], ஒரு அமெரிக்க நடிகை ஆவார், அவர் "பாம் பீஸ்லி" எனும் கதாபாத்திரமாக என்.பி.சி. இன் சூழ்நிலை நகைச்சுவையான "தி ஆபிஸில்" (2005–2013) நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், இதற்காக அவர், 2007 ஆம் ஆண்டின் "நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகை"க்கான பிரைம் டைம் எம்மி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்[2]. மேலும் நிகழ்ச்சியின் இறுதி பருவத்திற்கான தயாரிப்பாளராகவும் இருந்தார்.
ஜென்னா ஃபிஷ்ஷர் | |
---|---|
2008ல் ஜென்னா ஃபிஷ்ஷர் | |
பிறப்பு | ரெஜினா மரி ஃபிஷ்ஷர் மார்ச்சு 7, 1974 வெய்ன் கோட்டை, இந்தியானா, அ.ஐ.நா. |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | டிரூமன் மாநில பல்கலைகழகம் (இளங்கலை) |
பணி | நடிகை, தயாரிபபாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது |
அறியப்படுவது | தி ஆபீஸ் தொலைக்காட்சித் தொடரில் "பேம் பீஸ்லி"யாக அறியப்படுகிறார். |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | ௨ |
பின்னர், ஜென்னா பிளேட்ஸ் ஆஃப் குளோரி (2007), வாக் ஹார்ட்: தி டீவி காக்ஸ் ஸ்டோரி (2007), தி பிரமோஷன் (2008), ஹால் பாஸ் (2011) மற்றும் தி ஜெயண்ட் மெக்கானிக்கல் மேன் (2012) போன்ற திரைப்படங்களில் தோன்றினார். என்.பி.சியின் நகைச்சுவை-நாடகத் தொடரான யூ, மீ அண்ட் அபோகாலிப்ஸில், ரோண்டா மெக்னீலாகவும் தோன்றினார். ஏ.பி.சி. சூழ்நிலை நகைச்சுவையான ஸ்பிளிட்டிங் அப் டுகெதரிலும் (2018–2019) நடித்தார்[3].
பிஷ்ஷரின் முதல் நூலான, தி ஆக்டர்ஸ் லைஃப்: எ சர்வைவல் கைடு, ஸ்டீவ் கேரலின் அறிமுகத்துடன், நவம்பர் 2017 இல் வெளியிடப்பட்டது[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜென்னா ஃபிஷ்ஷரின் பிறந்தநாள்". Parade. Archived from the original on 2008-05-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜென்னா ஃபிஷ்ஷர்". Emmys.
- ↑ "ஜென்னா ஃபிஷ்ஷரின் திரையுலக பணி". Rotten Tomatoes.
- ↑ "ஜென்னா ஃபிஷ்ஷரின் புதிய நூல்". Hollywood Reporter.