ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி

இந்திய அரசியல்வாதி

ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி (பிறப்பு: ஏப்ரல் 15, 1953) ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
முன்னையவர்எஸ். ஆர். ஜெயதுரை
தொகுதிதூத்துக்குடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஏப்ரல் 1953 (1953-04-15) (அகவை 71)
ஜாக்கோபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்ஜோசப்,
விக்டோரியா
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி

இவர் ஏப்ரல் 15, 1953 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜாக்கோபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் சேர்ந்தார். இவர் அ.தி.மு.க.வின் வழக்கறிஞா் பிாிவு செயலாளராக இருந்தாா். இவர் தென்னிந்தியாவின் திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆவார். [2]

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ஆதராங்கள்

தொகு
  1. "ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி ஆளுமைக் குறிப்பு".
  2. "Profile of AIADMK candidates in southern districts". The Hindu. 2014-02-25. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/profile-of-aiadmk-candidates-in-southern-districts/article5724772.ece. 
  3. "Constituency-wise results: Thoothukkudi". Election Commission of India. Archived from the original on 2014-05-19. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.