ஜெயந்த் (நடிகர்)
ஜெயந்த் (Jayant) என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்ட சக்காரியா கான் (Zakaria Khan;15 அக்டோபர் 1915-2 ஜூன் 1975) ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் நடிகர்கள் அம்ஜத் கான் மற்றும் இம்தியாஸ் கான் ஆகியோரின் தந்தையும் ஆவார். அமர், மெம்டிடி, நஸ்னீன் போன்ற படங்களில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. திலிப் குமார், மதுபாலா மற்றும் கிஷோர் குமார் ஆகியோருடனும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.[1]
ஜெயந்த் Jayant | |
---|---|
பிறப்பு | சக்காரியா கான் 15 அக்டோபர் 1915 பெசாவர், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பிரித்தனிய இந்தியா (தபோது கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்) |
இறப்பு | 2 சூன் 1975 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 59)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1935 – 1975 |
பெற்றோர் | சையத் அகமது கான் (தந்தை) |
பிள்ளைகள் | அம்ஜத் கான், இம்தியாஸ் கான் உட்பட மூவர் |
ஜெயந்த் 15 அக்டோபர் 1915 அன்று பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான பெசாவரில் உள்ள நோதே பயனில் பஷ்தூன் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சக்காரியா கான் என்று பெயரிடப்பட்டது.[2] ஆரம்பக் கல்வியை மட்டுமே முடித்த ஜெயந்த் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு இராசத்தானின் அல்வாரில் ஒரு காவல் அதிகாரியாக இருந்தார்.[3]
தொழில் வாழ்க்கை
தொகுஜெயந்த் உயரமானவர், ஆழமான குரலைக் கொண்டிருந்தார். இயக்குநர்விஜய் பட்டின் முதல் திரைப்படமான சன்சார் லீலா (1933) என்ற குஜராத்தி படத்தில் பணியாற்றினார். இவருக்கு ஜெயந்த் என்ற பெயரை இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் பட் வழங்கினார். பாம்பே மெயில் (1935), ஹிஸ் ஹைனஸ் (1936), ஸ்டேட் எக்ஸ்பிரஸ் (1938) போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.[3]
சொந்த வாழ்க்கை
தொகுஜெயந்த் திருமணமானவர். இவருக்கு சோலே படத்தில் கப்பார் சிங்காக நடித்த அம்ஜத் கான் மற்றும் இம்தியாஸ் கான் என இரு மகன்கள் உள்ளனர்.
இறப்பு
தொகுதொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயந்த் 2 ஜூன் 1975 அன்று தனது 60 வயதில் மும்பையில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile of Jayant". Indian Cinema Heritage Foundation (Cinemaazi.com) website. Archived from the original on 3 December 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2023.
- ↑ "Profile of Jayant". Cineplot.com website. 31 October 2012. Archived from the original on 29 April 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
- ↑ 3.0 3.1 "Profile of Jayant". Indian Cinema Heritage Foundation (Cinemaazi.com) website. Archived from the original on 3 December 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2023.