ஜெயலலிதா நினைவு இல்லம்

ஜெயலலிதா நினைவு இல்லம் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை தமிழ்நாடு அரசு 2017இல், நினைவு இல்லமாக மாற்றியது. இதன் திறப்பு விழா 28 சனவரி 2021 அன்று நடைபெற்றது.[1][2][3] ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் சென்னை, போயஸ் தோட்டப் பகுதியில், 10 கிரவுண்ட் பரப்பில் கட்டிடங்களுடன் அமைந்துள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் ரூபாய் 68 கோடி வைப்புத் தொகையாக செலுத்தியது.[4][5]

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் குழந்தைகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில்[6], ஜெயலலிதா நினைவு இல்லத்தின் திறப்பு விழா நடைபெற்றாலும், நினைவு இல்லத்தை காண பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டது.[7][8]

வேத நிலையம் தொகு

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன.

சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொகு

தமிழ்நாடு அரசு நினைவு இல்லமாக மாற்றியதை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நவம்பர் 24, 2021 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை ஆட்சியர் விஜயா ராணி, தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைத்தார்.[9]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "நினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்". Archived from the original on 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
  2. Jayalalithaa’s residence inaugurated as a memorial
  3. Jayalalithaa's 'Veda Nilayam' residence at Poes Garden unveiled as memorial
  4. ஜெயலலிதா நினைவு இல்லம்: சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட்
  5. ஜெயலலிதா நினைவு இல்லம்-நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை செலுத்தியது அரசு
  6. ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு
  7. ஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்
  8. "ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டைத் திறக்கத் தடையில்லை; பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது" - சென்னை உயர் நீதிமன்றம்
  9. https://dinasuvadu.com/judgment-today-in-the-case-related-to-vedha-illam/?amp
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயலலிதா_நினைவு_இல்லம்&oldid=3584811" இலிருந்து மீள்விக்கப்பட்டது