ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் வழக்கு
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் வழக்கு என்பது 2001இல் நடந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலின் போது, ஜெயலலிதா தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக, இரண்டுக்கும் மேற்பட்ட புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய நான்கு சட்ட மன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து, தி. மு. க. வைச் சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. குப்புசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சூன், 2007இல் வழக்கு தொடர்ந்தார்.
ஜெ.ஜெயலலிதா | |
அமைவிடம் | சென்னை |
---|---|
பங்கேற்றோர் | ஜெ. ஜெயலலிதா |
தண்டனை | விதி மீறிதல் |
தீர்ப்பு | உயர் நீதிமன்றம்: வழக்கு தள்ளபடி |
வழக்கு | 10 ஆண்டுகள் |
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக குற்றவியல் வழக்கு பதியுமாறு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 2017ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேல் முறையீடுகள்
தொகுசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் மேல் முறையீடு மனுமீது இந்திய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி ஆணையிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை முடித்து 6 மார்ச் 2013இல் தீர்ப்பு வழங்கும் முன், மனுதாரர் குப்புசாமி மரணமடைந்ததால், தி. மு. வை சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், இவ்வழக்கை தான் தொடர்நது நடத்த அனுமதி கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முதல் மனுதாரர் குப்புசாமி இறந்து விட்டதால், முதன்மை வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டதாக கூறி, விஜயனின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து விஜயன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியது. இவ்வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு ஆர்வம் இல்லை என ஜெயலலிதா கூறியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் இறுதி விசாரணையை, தலைமை நீதிபதி எச். எல். தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 செப்டம்பர் 2015க்கு ஒத்திவைத்தது.[1][2]