ஜெயவந்திபென் மேத்தா

இந்திய அரசியல்வாதி

ஜெயவந்திபென் மேத்தா (Jayawantiben Mehta)(20 திசம்பர் 1938 - 7 நவம்பர் 2016) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

ஜெயவந்திபென் மேத்தா
Jayawantiben Mehta
பிறப்பு(1938-12-20)20 திசம்பர் 1938
அவுரங்காபாத், மகாராட்டிரம், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தற்போது மகாராட்டிரம்
இறப்பு7 நவம்பர் 2016(2016-11-07) (அகவை 77)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
நவீன் சந்திர மேத்தா
பிள்ளைகள்1 மகன் & 1 மகள்

மாநகர உறுப்பினர்

தொகு

ஜெயவந்திபென் மேத்தா 1962-ல் அரசியலில் நுழைந்தார். 1968-ல் நடைபெற்ற பெருநகரமும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

1975-ல் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையின் போது, ஜெயவந்திபென் மேத்தா 19 மாதங்கள் சிறையிலிருந்தார். ஜெயவந்திபென் 1978-ல் மகாராட்டிர சட்டமன்றத்திற்கு ஓபரா ஹவுஸ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1985 வரை இரண்டு முறை பணியாற்றினார்.

மக்களவை உறுப்பினர்

தொகு

1989-ல் ஜெயவந்திபென் மேத்தா முதன்முதலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அரசாங்கத்தில் மின்துறை அமைச்சராக இருந்தார்.

ஜெயவந்திபென் மேத்தா 1989-ல் ஒன்பதாவது மக்களவையில் வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதியினையும், 1996 மற்றும் 1999-ல் 11வது மற்றும் 13வது மக்களவையில் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியினையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பாஜக பணி

தொகு

ஜெயவந்திபென் 1991 முதல் 1995 வரை பாஜகவின் மகளிர் அணித் தலைவராகவும், 1993 முதல் 1995 வரை பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Former Union minister Jayawantiben Mehta passes away". The New Indian Express. 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயவந்திபென்_மேத்தா&oldid=3917335" இலிருந்து மீள்விக்கப்பட்டது