ஜெய்பிக்கு

பாலாபாய் விர்சந்து தேசாய் (Balabhai Virchand Desai) ஜெய்பிக்கு எனும் தனது புனைப்பெயரால் அறியப்படும் இவர் ஒரு குஜராத்திய எழுத்தாளர் ஆவார். இவர் புதினம், சிறுகதை, கட்டுரையாளர் மற்றும் சுயசரிதை எழுத்தாளர் ஆவார். வரலாற்றுப் புதினங்களுக்காக இவர் பரவலாக அறிஅப்படுகிறார்.

வாழ்க்கை தொகு

 
வின்ச்சியாவில் உள்ள ஜெய்பிக்குவின் பிறந்த இடம்
 
1948 ஆம் ஆண்டில் திருபாய் தாக்கருடன் (வலது) ஜெய்பிக்கு

ஜெய்பிக்கு 1908 ஜூன் 26 அன்று சௌவுராஷ்டிராவில் உள்ள வின்ச்சியா என்ற கிராமத்தில் விர்ச்சந்த் கெம்சந்த்பாய் தேசாய் மற்றும் பார்வதிபஹேன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் சாய்லாவைச் சேர்ந்தது. இவரது தந்தை வர்சோடா மாநில மற்றும் பிற அதிபர்களின் நிர்வாகியாகப் பணியாற்றினார். [1] இவரது நான்கு வயதில் தாயார் இறந்தார், எனவே இவர் தனது குழந்தைப் பருவத்தை தனது மாமாவின் வீட்டில் கழித்தார். [1]

இவர் விஜபூருக்கு அருகில் உள்ள போதாத் மற்றும் வர்சோதாவில் தனது ஆரம்பக் கல்வியினைப் பயின்றார்.

இவர் தனது குடும்பத்தில் மதச் சூழல், சமண தத்துவம் மற்றும் கவிதை ஆகியவற்றில் கல்வி கற்றார். கோவர்தன்ரம் திரிபாதியின் சரஸ்வதிச்சந்திரத்தால் இவர் ஈர்க்கப்பட்டார். இவர் தனது வாழ்க்கையில் நான்கு விதிகளைப் பின்பற்ற முடிவு செய்திருந்தார்: ஒருபோதும் ஒரு வேலையும் செய்யாதே, தந்தையிடமிருந்து எந்தச் சொத்தையும் எடுத்துக் கொள்ளாதே, மகனுக்கு எந்தச் சொத்தையும் கொடுக்கக் கூடாது, எழுத்து வாழ்கையின் மூலாமக சம்பாதிக்க வேண்டும். [2] [3]

இவர் டிசம்பர் 24, 1969 அன்று அகமதாபாத்தில் காலமானார். [2] [3]

படைப்புகள் தொகு

புதினங்கள் தொகு

  • பாக்யவிதாதா (1935)
  • கமவிஜேதா ஸ்துலிபத்ரா (1941)
  • பக்வான் ருசப்தேவ் (1947)
  • சக்ரவர்த்தி பரத்தேவ் (1953)
  • பிரேம்பக்தா கவி ஜெயதேவ் (1945)
  • விக்ரமாதித்யா ஹேமு (1944)
  • பாக்யநிர்மன் (1948)
  • தில்ஹிஸ்வர் (1951)

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

 
ஜெயவிஜய், அகமதாபாத்தில் உள்ள இவரது இல்லம்

ஜெய்பிக்கு, விஜயபஹேன் என்பவரை மே 13, 1930 அன்று திருமணம் செய்தார். அவர் ரான்பூரைச் சேர்ந்த வணிகரின் மகள் ஆவார். இந்தத் தமபதியின் மகனான குமர்பால் தேசாய் என்பவரும் எழுத்தாளர் ஆவார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Thakkar 2007, ப. 2-3.
  2. 2.0 2.1 Thakkar 2007.
  3. 3.0 3.1 Thakkar, Natubhai (1996). Dhirubhai Thaker. ed (in gu). ગુજરાતી વિશ્વકોશ. VII (1st ). Ahmedabad: Gujarati Vishwakosh Trust, Ahmedabad. பக். 461–462. இணையக் கணினி நூலக மையம்:164765976. 
  4. Thakkar 2007, ப. 4.
  5. Thakkar, Natubhai (1996). Dhirubhai Thaker. ed (in gu). ગુજરાતી વિશ્વકોશ. VII (1st ). Ahmedabad: Gujarati Vishwakosh Trust, Ahmedabad. பக். 461–462. இணையக் கணினி நூலக மையம்:164765976. 

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்பிக்கு&oldid=3120085" இலிருந்து மீள்விக்கப்பட்டது