ஜெய் பாரத் சமந்தா கட்சி

ஜெய் பாரத் சமந்தா கட்சி (Jai Bharat Samanta Party) என்பது இந்தியாவில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி ஆகும். ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா தலைமையில் செயல்பட்டது.[1]

ஜெய் பாரத் சமந்தா கட்சி
சுருக்கக்குறிJBSP
தலைவர்மது கோடா
தலைவர்கீதா கோதா
நிறுவனர்மது கோடா
தொடக்கம்2009
கலைப்பு2018
இணைந்ததுஇந்திய தேசிய காங்கிரசு
தலைமையகம்சார்க்கண்டு, இந்தியா
கொள்கைசமூக மக்களாட்சி
ஜனரஞ்சகவாதம்
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிஐமுகூ (2009-2018)
தேசியக் கூட்டுநர்மது கோடா
இந்தியா அரசியல்

2009ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற சார்க்கண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சி ஒன்பது வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், ஜகன்னாத்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கீதா கோதா ஆவார். இத்தேர்தலில் இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 93280 (மாநிலத்தில் 0.91% வாக்குகள்) ஆகும்.[2] சிறிது காலத்திற்குப்பின் நவம்பர் 1, 2018 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இக்கட்சி இணைந்தது.[3][4][5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_பாரத்_சமந்தா_கட்சி&oldid=3442037" இலிருந்து மீள்விக்கப்பட்டது