ஜெய. ராஜமூர்த்தி

ஜெய. ராஜமூர்த்தி (பிறப்பு: அக்டோபர் 8 1964) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு எனும் ஊரில் பிறந்த இவர் மருத்துவத்தில் பட்டப்படிப்பும், குழந்தைகள் நல மருத்துவத்தில் பட்டயப் படிப்பையும் படித்துள்ளார்.அரசு தலைமைக் குடிமுறை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் என்று பல இலக்கியப் பணிகளையும் செய்து வருகிறார். “நேசம் விரும்பும் நெருப்புப் பூக்கள்”, “புனித வள்ளலாரின் புரட்சிப்பாதை”, “எனது அம்பறாத் தூணியிலிருந்து” என பல நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “வள்ளலாரும் பெரியாரும்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.திருவெண்காட்டில் வள்ளலார் தமிழ்மன்றத்தின் நிறுவனர் ஆவார். உலகத்தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் திராவிட இயக்கக் கொள்கைகளும் அருட்பாச் சிந்தனையும் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வாசித்துள்ளார்.சமயவழியில் நடந்து வந்த வழிபாட்டில் இருந்து அங்கிருந்த சபாநடேசர் தீட்சிதரிடமிருந்த வள்ளலார் ஞானசபையை உண்ணா நோன்பிருந்து மீட்டு எடுத்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய நடுவண் அரசை வலியுறுத்தி சென்னையில் தமிழறிஞர் பெருமக்களோடு ஓரு நாள் அடையாள உண்ணாநோன்பிருந்துள்ளார் .தனது உடல் தானமும் செய்துள்ளார்.

Jeya.Rajamoorthi

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய._ராஜமூர்த்தி&oldid=3614122" இலிருந்து மீள்விக்கப்பட்டது