திருவெண்காடு
திருவெண்காடு தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்.[3] இங்குள்ள சுவேதாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றுள்ளது. இக்கோயில் நவக்கிரகத் தலங்களில் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.
திருவெண்காடு | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சைவ சித்தாந்த முதல் சந்தான ஆசாரியார் மெய்கண்டார் பிறந்த ஊர். சைவ எல்லப்ப நாவலர் பிறந்த இராதா நல்லூர் இந்த ஊரிரிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. திருவெண்காட்டுப் புராணம் என்னும் நூல் இவ்வூர் இறைவன்மீது பாடப்பட்டது.[4]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவெண்காட்டில் 7403 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005. எழுத்தறிவு பெற்றவர்கள் 4948 பேர். இதில் 2733 பேர் ஆண்கள்; 2215 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 75.67. 13.21 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 153.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Rural - Nagapattinam District;Sirkali Taluk;Thiruvengadu Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.