ஜேனட் அக்கியூழ்சு மத்தேய்

ஜேனட் அக்கியூழ்சு மத்தேய் (Janet Akyüz Mattei; ஜனவரி 2, 1943 – மார்ச்சு 22, 2004) ஒரு துருக்கி-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1973 முதல் 2004 வரையில் அமெரிக்க மாறும் விண்மீன்கள் நோக்கீட்டாளர் கழகத்தின் இயக்குநராக இருந்தார்.

ஜேனட் அக்கியூழ்சு மத்தேய்
பிறப்பு(1943-01-02)சனவரி 2, 1943
போதுரம், துருக்கி
இறப்புமார்ச்சு 22, 2004(2004-03-22) (அகவை 61)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
தேசியம்துருக்கியர், அமெரிக்கர்
துறைவானியல், கோள் அறிவியல்
பணியிடங்கள்அமெரிக்க மறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகம்
விருதுகள்பிரான்சு வானியல் கழக நூற்றாண்டுப் பதக்கம், 1987
ஜார்ஜ் வான் பியசுபுரோயக் பரிசு
அமெரிக்க வானவியல் கழகம் (1993)
இலெசுலி பெல்டியர் விருது
வானியல் மன்றம் (1993)
ஜியோவன்னி பாட்டிசுட்டா இலாச்சின் விருது(பயில்நிலை வானியலாளர்களின் ஒருங்கிணைப்புக்காக) (1995)
அரசு வானியல் கழகத்தின் ஜேக்சன் கிவில்ட் பதக்கம் (1995)

இவர் துருக்கி, போடுரமில் பெல்லாவுக்கும் பரூக் அக்கிய்யுழ்சுக்கும் மகளாகத் துருக்கி யூதக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் இழ்மீரில் அமைந்த அமெரிக்க கல்லூரி நிறுவனத்தில் கல்வி பயின்றார். பல்கலைக்கழகப் படிப்புக்காக இவர் அமெரிக்காவுக்கு வந்து மசாசூசட்டு வால்தாமில் இருந்த பிராந்தேயிசு பல்கலைக்கழகத்தில் வியன் ஆய்வுநல்கை பெற்று முதுகலைப் படிப்பில் சேர்ந்தார்.[2] பின்னர் இவருக்குத் தோரித் கோப்லீத் மசாசூசட்டு, நாந்துகெட்டில் அமைந்த மரியா மிட்செல் வான்காணகத்தில் பணியை வழங்கினார்.

இவர் 1970 முதல் 1972 வரை வர்ஜீனியாவில் உள்ள சார்லோட்டிசுவில்லியி அமைந்த இலியாண்டர் மெக்கார்மிக் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1972 இல் வ்ர்ஜீனிய பல்கலைக்கழகத்தில் இருந்து வானியலில் முதுகளைப் பட்டம் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை வானியலில் துருக்கி, இழ்மீரில் அமைந்த ஈகே பல்கலைக்கழகத்தில் 1982 இல் பெற்றார்.

இவர் அமெரிக்க மாறும் விண்மீன் கழகத்தில் 30 ஆண்டுகள் தலையேற்றபோது உலகெங்கிலும் உள்ள பயில்நிலை வாணியலாளர்களைக் கொண்டு மாறும் விண்மீன்களைன் நோக்கீடுக்களை திரட்டினார்ரிவர் பயில்நிலை, தொழில்முறை வானியலாளர்களின் பல முதன்மையான நோக்கீட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார். இவர் கல்வியிலும் மாணவர் அறிவியல் திட்டங்களிலும் சீரிய ஆர்வம் கொண்டிருந்தார்ரிவரதி வழிகாட்டுதலின் கீழ் கழகத்தின் தரவுத்தளம் கல்வியாளர்களுக்கு கிடைத்தது.[3] மேலும் தொழில்முறைசாரா வானியலாளரும் அபுள் விண்வெளித் தொலைநோக்கியை அணுகும் வாய்ப்பு கிட்டியது.

மத்தேய் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் 1987 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தின் நூற்றாண்டுப் பதக்கத்தைப் பெற்றார். இவர் 1993 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் ஜார்ஜ் வான் பியசுபுரோயக் பரிசைப் பெற்றார்; இவர் 1993 இல் வானியல் குழுவின் இலெசுலி பெல்டியர் விருதைப் பெற்றார். இவர் 1995 இல் பயில்நிலை வானியலாளர்களை ஒருகிணைத்தமைக்காக இத்தாலிய வானியல் ஒன்றியத்தின் முதல் ஜியோவன்னி பாட்டிசுட்டா இலச்சினி விருதைப் பெற்றார்; இவர் 1995 இல் அரசு வானியல் கழகத்தின் ஜேக்சன் குவில்டு பதக்கத்தையும் பெற்றுள்ளார். சிறுகோள் 11695 மத்தேய் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

இவர் 2004 மார்ச்சில் போசுட்டனில் குருதி வெண்புற்றால் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. The Janet Mattei Gravesite", AAVSO, Volume 33, 2005, p. 149.
  2. "Janet Akyuz Mattei (1943 - 2004)". Archived from the original on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2018-08-07.
  3. Janet Akyuz Mattei, Astronomer, Dies at 61. த நியூயார்க் டைம்ஸ்

வெளி இணைப்புகள்

தொகு