ஜேம்சு கோர்னர்

ஜேம்ஸ் ராய் கோர்னர் (ஆங்கில மொழி: James Roy Horner) (14 ஆகஸ்ட் 1953 - 22 ஜூன் 2015) என்பவர் அமெரிக்க நாட்டு இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.[1][2] இவர் 1997 இல் டைட்டானிக் என்ற படத்தில் பணிபுரிந்ததற்காக மிகவும் அறியப்படுகிறார்.[3][4] அத்துடன் 2010 இல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் என்ற படத்திற்காக அவர் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படத்திற்கான இசைக்கலைஞராக ஆனார்.[5]

ஜேம்சு கோர்னர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜேம்ஸ் ராய் கோர்னர்
பிறப்புஆகத்து 14, 1953(1953-08-14)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 22, 2015(2015-06-22) (அகவை 61)
லாஸ் பேட்ரெஸ் தேசிய காடு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்1978–2015

இவர் இரண்டு அகாதமி விருது, ஆறு கிராமி விருதுகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள், மூன்று சாட்டிலைட் விருதுகள், மூன்று சனி விருதுகளை வென்றுள்ளார் மற்றும் மூன்று பிரித்தானிய அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இவர் விமானம் ஓட்டுவதில் ஆர்வமாக இருந்த காரணத்தால், தனது 61 வயதில் தனது சார்ட் டுகானோ டர்போபிராப் என்ற தனி விமானத்தை ஓட்டும் போது ஒரு விபத்தில் இறந்தார்.[6]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_கோர்னர்&oldid=3432109" இருந்து மீள்விக்கப்பட்டது